Chess | சதுரங்கம்

வரலாறு படைத்தார் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா! சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர்.

ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார் கிராண்ட் மாஸ்டர் பிரக்ஞானந்தா .

கிராண்ட் மாஸ்டர் பிரஞானந்தா

இந்திய இளம் கிராண்ட் மாஸ்டர் பிரஞானந்தா நார்வே சதுரங்க சாம்பியன் பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற வரலாற்று சாதனை படைத்துள்ளார்.சதுரங்க போட்டிகளுக்கு வழங்கப்படும் மதிப்புமிக பட்டங்களில் நார்வே சதுரங்க சாம்பியன் பட்டமும் ஒன்று. இந்த பட்டத்தை இதற்கு முன் இந்திய வீரர்கள் எவரும் வென்றதில்லை.

நார்வே செஸ் 2026 (Norway Chess 2026)

இந்த ஆண்டுக்கான நார்வே சதுரங்க சாம்பியன்ஷிப் போட்டி நார்வே செஸ் 2026 (Norway Chess 2026) ஆஸ்ட்ரோவில் தொடங்கி நடைபெற்று வந்தது. ஆட்டத்தின் தொடக்கத்திலிருந்தே இந்திய கிராண்ட் மாஸ்டர் பிரயானந்தா அசத்தி வந்தார். நேற்று முந்தினம் நடந்த ஒன்பதாவது சுற்றில் உலக சாம்பியனான குகேஷை அவர் விழுத்தி அசத்தினார். இந்நிலையில் சாம்பியன் பட்டத்துக்கான இறுதி சுற்றில் 20 வயதான கிராண்ட் மாஸ்டர் ஆர் பிரயானந்தா ஜெர்மனியின் வின்சன்ட் கைமருடன் மோதினார்.

பிரக்ஞானந்தா,praggnanandhaa,chess,chess champion,கிராண்ட் மாஸ்டர்

Image Credit : Norway Chess | Image Source : X/ 📷 Norway Chess / Tor Nilssen & Kjetil V. Tveito

மாக்னஸ் கார்ல்சன்

ஒரே தொடரில் நடப்புச் சாம்பியன் மாக்னஸ் கார்ல்செனை இரண்டு முறையும், நான்கு போட்டிகளில் தொடர்ந்து வெற்றியும் பெற்று சாதனை படைத்துள்ளார். ஒரு கட்டத்தில் 15 புள்ளிகளுடன் மூன்றாவது இடத்திலிருந்த பிரயானந்தா சரியான நேரத்தை சுதாரித்து கொண்டு தனது கிளாசிக்கல் ஆட்டத்தில் வென்று மூன்று முக்கியமான புள்ளிகளை கைப்பற்றினார்.

இது அவரது மொத்த புள்ளிகளை 18ஆக உயர்த்தியதுடன் உயர்மட்ட சதுரங்கத்தின் மதிப்புமிக்க பட்டங்களில் ஒன்றான நார்வே சதுரங்க சாம்பியன் பட்டத்தை வெல்லவும் உதவியது. இந்திய சதுரங்க ஜாம்பவான் விஸ்வநாதன் ஆனந்த் தற்போதைய உலக சாம்பியன் டி குகேஷ் ஆகியவருக்கு கைகூடாத இந்த சாதனையை சாத்தியமாக்கி நார்வே சதுரங்க பட்டத்தை வென்ற முதல் இந்தியர் என்ற புதிய வரலாற்றை ஆர் பிரியானந்தா படைத்துள்ளார்.

தமிழ்நாட்டிற்கும், இந்தியாவிற்கும் பெருமை சேர்த்துள்ள கிராண்ட்மாஸ்டர் பிரக்ஞானந்தா அவர்கள் புதிய சாதனைகளைப் படைத்திட முதலமைச்சர் விஜய், தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா என பலரும் வாழ்த்துக்கள் தெரிவித்து வருகின்றனர்.

Avatar photo

manish perfect

டிஜிட்டல் தளத்தில் டெக்னாலாஜி, லைஃப்ஸ்டைல், விளையாட்டு, தமிழக அரசியல் குறித்த செய்திகளை வழங்கும் பத்திரிகையாளர். வாழ்க்கை முறை சார்ந்த விஷயங்களைக் ஆராய்ச்சி கட்டுரைகளாக எழுதி வருகிறேன். யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களில் வீடியோக்கள் தொடர்ந்து காணலாம்.