
நான்கு ஆண்டுகளுக்கு ஒருமுறை நடக்கும் FIFA கால்பந்து உலகக் கோப்பை போட்டியின் 23வது தொடர் இன்று மெக்சிகோ நகரில் இன்று கோலாகலமாக தொடங்குகிறது.மெக்சிகோ, கனடா மற்றும் அமெரிக்கா ஆகிய 3 நாடுகள் இணைந்து இந்த போட்டியை நடத்துகின்றன.
மெக்சிகோ, கனடா, அமெரிக்கா இணைந்து நடத்தும் போட்டியில் 3 தொடக்க விழாக்கள் நடத்தவும் கலை நிகழ்ச்சிகளுக்கும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. போட்டிகள் இன்று தொடங்கி வரும் ஜூலை 19-ம் தேதி வரை நடக்கின்றன

48 அணிகள் பங்கேற்கும் நிலையில், 12 குழுக்களாக பிரிக்கப்பட்டு ஒவ்வொரு குழுவிலும் 4 அணிகள் இடம்பெறும். மொத்தம் 1,248 வீரர்கள் களமிறங்கும் இந்த பிரம்மாண்ட தொடரில் அந்த அணிகள் தங்களுக்குள் மோதிக்கொள்ளும் , முடிவில் 32 அணிகள் அடுத்த சுற்றுக்கு முன்னேறும். லீக் சுற்று போட்டிகள் ஜூன் மாதம் 27-ம் தேதி வரை நடக்கும் .

இன்றுமுதல் தொடங்கி நடைபெற இருக்கும் FIFA உலகக்கோப்பை கால்பந்து போட்டியின் முதல் ஆட்டம் மெக்சிகோ நகரில் உள்ள சிட்டி ஸ்டேடியத்தில் நடக்கிறது. இந்திய நேரப்படி நள்ளிரவு 12.30 மணிக்கு நடக்கும் போட்டியில் மெக்சிகோ – தென்னாப்பிரிக்கா அணிகள் மோதுகின்றன

இந்திய நேரப்படி நாளை காலை 7.30 மணிக்கு எஸ்டாடியோ குவாடலஜாரா மைதானத்தில் நடக்கும் போட்டியில் தென்கொரியா – செக் குடியரசு அணிகள் பலப்பரீட்சை நடத்துகின்றன பெரும்பாலான போட்டிகள் வட அமெரிக்காவில் நடக்கும்.பெரும்பாலான ஆட்டங்கள் இந்திய நேரப்படி நள்ளிரவு மற்றும் அதிகாலை நேரங்களில் நடைபெறும்.
48 அணிகள் பங்கேற்கும் இந்த பிரம்மாண்ட தொடரில் இந்திய அணியால் இடம்பெற முடியவில்லை என்பது வேதனையளிக்கிறது. இந்திய வம்சாவளியை சேர்ந்த சாமுவேல் மௌட்டூசாமி, நிஷான் வேலுப்பிள்ளை, தஹ்சின் முகமது மற்றும் சர்ப்ரீத் சிங் ஆகிய நான்கு வீரர்கள் இடம்பிடித்துள்ளனர். இவர்களில் சாமுவேல் மௌட்டூசாமி மற்றும் நிஷான் வேலுப்பிள்ளை ஆகியோர் தமிழ் வம்சாவளியை சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
மெஸ்சியும், ரொனால்டோ இந்த இரு நாயகர்களையும் கடைசியாக உலக அரங்கில் ஒன்றாகக் காணும் வாய்ப்பாக FIFA-2026 உலகக் கோப்பை இருக்கலாம் என்பது குறிப்பிடத்தக்கது.
