நடந்து முடிந்த தமிழக சட்டசபை தேர்தலில், 47 தொகுதிகளில் மட்டுமே, அ.தி.மு.க வென்றது. அதிமுக தேர்தல் தோல்விக்கு பின்னால் அதற்கான காரணங்களை ஆராய வேண்டும், பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் மற்றும் ஒரு குழு அமைக்க வேண்டும் போன்ற பல்வேறு கோரிக்கைகளை அதிமுகவில் அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகம், எஸ்.பி. வேலுமணி தரப்பினர் முன் வைத்திருந்தனர். அ.தி.மு.க.,வில் பழனிசாமி தலைமையில் ஒரு அணி, சண்முகம்-வேலுமணி தரப்பில் மற்றொரு அணி உருவானது. சட்டசபையில் இது அனைவருக்கும் வெளிச்சம் போட்டு காட்டியது.
பழனிசாமி அணியில் 22, வேலுமணி அணியில், 25 எம்.எல்.ஏ.,க்கள் இருந்தனர். சட்டசபையில், த.வெ.க., அரசு பெரும்பான்மையை நிரூபிக்க, வேலுமணி அணி ஆதரவு தெரிவித்தது. இந்த அணியை, அதிமுக முன்னாள் அமைச்சர் சண்முகம் வழி நடத்தினார். தவெக அரசின் நம்பிக்கை கோரும் ஓட்டெடுப்பில் வேலுமணி தரப்பு எம்எல்ஏக்கள் ஆதரவாக ஓட்டு போட்டனர். இதன் பலனாக, வேலுமணி தரப்பு எம்எல்ஏக்களுக்கு தவெக அமைச்சரவையில் இடம் உண்டு என பேசப்பட்டது.
கட்சியில் கருத்து வேறுபாடு வருவது இயல்பு.. அப்படி இருக்கும் பொழுது அதில் ஒரு தரப்பினருக்கு மட்டும் முதலமைச்சர் ஆதரவு தெரிவிப்பது சரியா? முதலமைச்சரின் இந்த செயல் குதிரை பேரத்துக்கு வழிவகுத்துவிடும் என பழனிசாமி சட்டசபையில் பேசினார்.

நேற்று அதிமுக எம்எல்ஏக்கள் மரகதம், சத்தியபாமா, ஜெயகுமார் ஆகியோர் தங்கள் பதவியை ராஜினாமா செய்து விட்டு தவெகவில் சேர்ந்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
இதனை தொடர்ந்து குதிரை பேரம் நடைபெறுவதை தடுக்கும் வகையில், கட்சித் தாவல் தடைச் சட்டத்தின் படி நடவடிக்கை புகார் நிலுவையில் உள்ள சட்டமன்ற உறுப்பினர்கள் ராஜினாமா கடிதம் அளித்தால் அதனை ஏற்றுக்கொள்ளக் கூடாது என சட்டப்பேரவைத் தலைவரிடம் கழக சட்டமன்றக் கட்சிக் கொறடா திரு. அக்ரி எஸ். எஸ். கிருஷ்ணமூர்த்தி அவர்களால் வழங்கப்பட்டது.
இந்த விவகாரம் தொடர்பாக சபாநாயகர் ஜேசிடி பிரபாகரை அதிமுகவின் இன்பதுரை, அக்ரிகிருஷ்ணமூர்த்தி, ஓஎஸ் மணியன் ஆகியோர் சந்தித்து பேசினர்.
அதிமுகவில் ஒரு தரப்பினர் அண்ணன் அக்ரி கிருஷ்ணமூர்த்தி தலைமையில் 25 பேர் மீது தகுதி நீக்க மனு கொடுத்திருந்தனர். அதேபோல், எஸ்.பி. வேலுமணி, சி.வி.சண்முகம் உள்ளிட்டோர் தரப்பில் 22 பேருக்கு எதிராக தகுதி நீக்க மனு மனுக்கள் வாபஸ்.

தற்போது இந்த இரண்டு மனுக்களையும் இரு தரப்பும் வாபஸ் பெற்றுவிட்டனர், அதற்கான கடிதங்கள் பேரவைத் தலைவரிடம் வழங்கப்பட்டுள்ளன
சுருக்கமாகச் சொன்னால், அதிருப்தியில் இருந்த தலைவர்களின் கோரிக்கைகளைத் தலைமை ஏற்றுக் கொண்டதால், தற்போது அதிமுகவில் நிலவிய உட்கட்சிப் பூசல் முடிவுக்கு வந்து, ஒற்றுமை ஏற்பட்டுள்ளது.
