முடி உதிர்தல் – இன்று காலேஜ் போற பசங்க முதல் ரிட்டையர்ட் ஆனவங்க வரை எல்லாரையும் பதற வைக்கிற ஒரு பெரிய தலைவலி.என்னங்க இது… தலை வாரினா சீப்புல இருக்கிற முடியை பார்த்தாலே பயமா இருக்கு, சீக்கிரமே சொட்டை விழுந்துடுமோ?அப்படின்னு புலம்புறவங்களை இப்ப அடிக்கடி பார்க்க முடியுது.

தலைக்கு குளிச்ச பிறகு துண்டில் முடி ஒட்டியிருக்கா? காலையில் தூங்கி எழுந்ததும் தலையணையில் முடி சிதறி கிடக்குதா? இல்லை, சும்மா விரல்களால் முடியைக் கோதினாலே கையில் முடி வருதா? இதைப்பார்த்து நீங்க கவலைப்படுறது புரியுது. ஆனா, கவலைப்படுறதுக்கு முன்னாடி ஒன்னு தெரிஞ்சுக்கணும்—தினமும் 50 முதல் 100 முடி வரை உதிர்வது ரொம்பவே சாதாரணமான விஷயம். இது உங்க முடியோட இயல்பான சுழற்சிதான். ஆனா, இதுக்கும் மேல அதிகமா முடி கொட்டுனா அது ஹார்மோன் மாற்றங்கள், ஊட்டச்சத்து குறைபாடு அல்லது அதிக மன அழுத்தத்தால இருக்கலாம். அதனால உங்க முடி உதிர்வு சாதாரணமானதா அல்லது தீவிரமானதான்னு முதலில் புரிஞ்சுக்கிறதுதான் புத்திசாலித்தனம்.
ஆனா, இந்த முடி உதிர்வு ஒரு எல்லைக்கு மேல போனா, அதை உங்க உடம்பு கொடுக்கிற ஒரு ‘அலர்ட் சிக்னல்’-ஆ எடுத்துக்கணும். தினமும் 100 முடிக்கு மேல கொட்டுறது, திட்டு திட்டா முடி உதிர்வது அல்லது நெற்றி ஏறிக்கிட்டே போறது சாதாரணமானது கிடையாது. இதற்கான சரியான காரணங்களை நீங்க தெரிஞ்சுகிட்டாலே போதும்
முடி உதிர்வுக்கு காரணமான 5 விஷயங்கள்
1. ஹார்மோன் மாற்றங்கள்
- பெண்களில் தைராய்டு, PCOS, மெனோபாஸ், மாதவிடாய் சுழற்சி கோளாறு போன்றவை ஹார்மோன் சமநிலையை பாதிக்கின்றன.
- ஆண்களிலும் ஹார்மோன் பாதிப்பு (அந்த்ரோஜெனிக் அலோபீசியா) வயதானதும் ஏற்படுகிறது.
- ஹார்மோன்கள் பாதிக்கும்போது, முடி வளர்ச்சி சுழற்சி குளறுபடுகிறது.
2. உணவுப் பழக்கம் மற்றும் ஊட்டச்சத்து குறைபாடு
- வைட்டமின் A, B12, D, சி, ஜிங்க், இரும்புச்சத்து, புரதங்கள் – இவற்றின் குறைபாடு முடி வேர்களுக்கு தேவையான சக்தியை தரமாட்டேன்.
- குறைந்த கலோரியில் டயட் செய்வது, உடல் எடையை குறைப்பது, முடியை பாதிக்கலாம்.
3. தலை தோல் தொற்றுகள்
- பூஞ்சை, ஈஸ்ட், பாக்டீரியா காரணமாக பொடுகு, சொரியாசிஸ், அலோபீசியா, அரேட்டா போன்ற தோல் நோய்கள் உருவாக முடியும்.
- இது முடி வேர்களை பாதித்து, முடியை விழ வைக்கும்.
4. மருந்துகள் & சிகிச்சைகள்
- மன அழுத்தத்திற்கு எதிரான மருந்துகள், இரத்தத்தை மெலிதாக்கும் மாத்திரைகள், கொழுப்பு குறைக்கும் மருந்துகள் போன்றவை பக்கவிளைவாக முடி உதிர்தலை ஏற்படுத்தக்கூடும்.
5. தலைமுடிக்கு அதிகமாய்ச் செய்த சிகிச்சைகள்
- அதிகமாக ஹேர் டை, கெமிக்கல் ட்ரீட்மெண்ட்கள், ஹீட் டூல்ஸ் (ஸ்டிரெயிட்னிங், கர்ளிங்) பயன்படுத்துவதும் ஒரு முக்கிய காரணம்.
- இதனால் தலைமுடி வலுவிழந்து, கண்ணுக்குத் தெரிந்த அளவுக்கு உதிர ஆரம்பிக்கும்.
முடி உதிர்தல் சிகிச்சைகள் என்ன செய்யலாம்?
- முதலில் உங்கள் முடி உதிர்வுக்கு காரணம் என்ன என்பதை கண்டறியுங்கள்.
- மருத்துவரை அணுகி பரிசோதனைகள் செய்து நோய் நிலையை உறுதி செய்யுங்கள்.
ஊட்டச்சத்துள்ள உணவுகள்
- புரதம் (Protein): முடி முழுக்க முழுக்க ‘கெரட்டின்’ என்ற புரதத்தால் ஆனது. எனவே, தினமும் முட்டை, மீன், அல்லது பயறு வகைகள் (பீன்ஸ், கொண்டைக்கடலை) சேர்த்துக்கொள்ளுங்கள்.
- இரும்புச்சத்து (Iron): முடி வேர்களுக்கு ஆக்சிஜனைத் தர இரும்புச்சத்து அவசியம். கீரை வகைகள், பேரிச்சை பழம், மற்றும் திராட்சை போன்றவற்றை அதிகம் உண்ணுங்கள்.
- பயோட்டின் (Biotin): முடி அடர்த்தியாக வளர பாதாம், வால்நட் மற்றும் முட்டை மஞ்சள் கரு உதவுகிறது.
- வைட்டமின் C: இரும்புச்சத்தை உடல் உறிஞ்ச வைட்டமின் C அவசியம். நெல்லிக்காய், ஆரஞ்சு போன்ற சிட்ரஸ் பழங்களைச் சேர்த்துக்கொள்ளுங்கள்
இயற்கை வைத்தியம்
- வெங்காயச் சாறு (Onion Juice): இதில் உள்ள சல்பர் முடி வளர்ச்சியைத் தூண்டும். வெங்காயச் சாற்றை உச்சந்தலையில் தடவி 15-30 நிமிடங்கள் கழித்து அலசவும்.
- வெந்தயப் பேஸ்ட் (Fenugreek): வெந்தயத்தை இரவு ஊறவைத்து அரைத்துத் தலையில் தடவினால், முடி வேர்கள் வலுவடையும் மற்றும் உடல் சூடு குறையும்.
- கற்றாழை (Aloe Vera): இது உச்சந்தலையை குளிர்ச்சியாக வைத்து, பொடுகு வராமல் தடுக்கும். இயற்கையான கற்றாழை ஜெல்லை நேரடியாகத் தலையில் தடவலாம்.
- தேங்காய் எண்ணெய் மசாஜ்: வாரத்திற்கு இருமுறை தேங்காய் எண்ணெய் அல்லது ரோஸ்மேரி ஆயில் கொண்டு உச்சந்தலையில் மசாஜ் செய்வது இரத்த ஓட்டத்தை அதிகரித்து முடி வளர்ச்சியை மேம்படுத்தும்.
முக்கிய பராமரிப்பு குறிப்பு
- தண்ணீர்: ஒரு நாளைக்கு குறைந்தது 8-10 கிளாஸ் தண்ணீர் குடிப்பது உச்சந்தலையை நீரேற்றத்துடன் வைக்கும்.
- ஸ்ட்ரெஸ் தவிர்த்தல்: அதிக மன அழுத்தம் முடி உதிர்வுக்கு முக்கிய காரணம். யோகா அல்லது தியானம் மூலம் மனதை அமைதியாக வைத்திருங்கள்.
- ரசாயனங்கள் தவிர்த்தல்: அதிக வெப்பம் தரும் ஹேர் டிரையர் மற்றும் ரசாயனங்கள் நிறைந்த ஷாம்புகளைத் தவிர்த்து, சல்பேட் இல்லாத மென்மையான ஷாம்புகளை பயன்படுத்துங்கள்
- இரவில் சரியான நேரத்திற்கு உறங்குவது அவசியம்; தூக்கமின்மை உடல் சூட்டை நேரடியாக அதிகரிக்கும்.


