தமிழின் மொழி ஓசை நயம் எவ்வளவு வளமானது. இதில் எல்லா வரிகளையும் லா என முடித்திருப்பார் கவிஞன் புலமைப்பித்தன். இயைபு நயத்துடன் இனிய இசையுடன் மனதை மயக்கும் கல்யாண தேன் நிலா பாடல்.

படம்: மௌனம் சம்மதம் (1990)
பாடியவர் : கே.ஜே. யேசுதாஸ் & கே.எஸ். சித்ரா
இசை : இளையராஜா
பாடலாசிரியர் : புலமைப்பித்தன்
ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
ஆண் : தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
ஆண் : தென்பாண்டி கூடலா
தேவார பாடலா
தீராத ஊடலா
தேன் சிந்தும் கூடலா
பெண் : என் அன்புகாதலா
எந்நாளும் கூடலா
பேரின்பம் மெய்யிலா
நீ தீண்டும் கையிலா
ஆண் : பார்ப்போமே ஆவலா
வா வா நிலா………….
பெண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
ஆண் : நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
பெண் : உன் தேகம் தேக்கிலா
தேன் உந்தன் வாக்கிலா
உன் பார்வை தூண்டிலா
நான் கைதி கூண்டிலா
ஆண் : சங்கீதம் பாட்டிலா
நீ பேசும் பேச்சிலா
என் ஜீவன் என்னிலா
உன் பார்வை தன்னிலா
பெண் : தேனூறும் வேர்ப்பல
உன் சொல்லிலா ஆஆஆ…
ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா
நீதானே வான் நிலா
என்னோடு வா நிலா
பெண் : தேயாத வெண்ணிலா
உன் காதல் கண்ணிலா
ஆகாயம் மண்ணிலா
ஆண் : கல்யாண தேன் நிலா
காய்ச்சாத பால் நிலா