அண்ணாமலை,annamalai,annamalai bjp

பாஜக-வில் இருந்து விலகி புதிய அரசியல் இயக்கம் – அண்ணாமலை அதிரடி அறிவிப்பு

தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை பாஜகவில் இருந்து விலகி புதிய கட்சியை துவங்குவதாக அறிவித்துள்ளார்.

கடந்து ஜூன் 2 தேதி பாரதிய ஜனதா கட்சி தேசிய தலைவர நிதின் நபின் அவர்களை சந்தித்து தனது ராஜினாமா கடிதத்தை வழங்கினார் அண்ணாமலை. அதில் அவர் குறிப்பிட்டுள்ள பிரதமர் நரேந்திர மோடி அவர்களின் தலைமையால் நாட்டின் பல துறைகளில் முன்னேற்றம் ஏற்பட்டுள்ளது. 6 ஆண்டுகள் முன்பு நான் பாஜகவில் இணைந்தேன். தமிழ்நாட்டில் நேர்மையான மாற்றத்தை ஏற்படுத்தவும்,
அரசியலை பொதுமக்களுக்கு எளிமையாகவும், சமத்துவமாகவும் மாற்றவும் விரும்பினேன். இளம் வயதிலும் அனுபவமும் கூடியதோடு என்னது நம்பிக்கையை வைத்து பொறுப்புகள் மற்றும் தலைமைப் பதவிகளை வழங்கியதற்கு நன்றி.

அண்ணாமலை,annamalai,annamalai bjp

Image Credit : Annamalai | Image Source : X/@Annamalai

பல தசாப்தங்களாக அரசியல் பேச்சுக்களால் மக்கள் சோர்வடைந்தனர்.
மாற்றத்தை எதிர்பார்க்கிறார்கள். கடந்த ஒரு தசாப்தத்தில் பல இடங்களில் மாற்ற முயற்சிகள் வந்தன. ஆனால் அவை நிலைக்கவில்லை.
தேசிய கட்சிகள், தமிழ்நாடு மக்களின் மொழியில் பேசவில்லை.
இந்த நிலையை மாற்ற முயன்றேன். பல தலைமை இருந்தபோதிலும்,
ஒரளவு வெற்றியை பெற்றுள்ளேன்.

என் மொழி, என் கலாச்சாரம், என் பிராந்தியத்தின் பாரம்பரியம் எனக்கு பெருமை தருகிறது. வலிமையான, ஒன்றுபட்ட இந்தியா என்பது அத்தனை மாநிலங்களின் வலிமை, கண்ணியம் மற்றும் ஆசைகளை அடிப்படையாகக் கொண்டே கட்டப்படுகிறது. தமிழ்நாட்டின் பிரச்சனைகள் மற்றும் கவலைகளை நான் தொடர்ந்து முன்வைத்தபோது ஆதரவு அளித்த பாஜக முதல் தலைமைக்கு நன்றி. கடந்த 18 மாதங்களாக உயர்மட்ட தலைமையுடன் பல உரையாடல்கள் நடந்தன. பல கருத்து வேறுபாடுகளையும் பகிர்ந்துகொண்டேன். வளர்ச்சி மற்றும் கலாச்சாரம் அடிப்படையிலான அரசியலின் பாதை குறித்து மேலும் கனமான சேர்க்க விரும்பவில்லை.

எங்கள் பார்வைகள் பல முக்கிய விடயங்களில் ஒன்றிணைவதில்லை என்பது முழவுக்கு வந்துள்ளேன் எனவே, தமிழ்நாடு மக்களின் நலனுக்காகவும்,
என் மனசாட்சி மற்றும் கொள்கைகளுக்காகவும், பாஜகவின் அடிப்படை உறுப்பினராக இருந்து விலகுகிறேன். தமிழ்நாடு முன்னேற்றம் அடைய வேண்டும்! மக்கள் நலம் என் குறிக்கோள்! என் குறிப்பிட்டு இருந்தார்

பாஜகவில் இருந்து விலகல்

இதனை தொடர்ந்து தமிழக முன்னாள் பாஜக தலைவர் அண்ணாமலை, கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பில் இருந்து விலகியதை ஏற்பதாக ஜூன் 5, 2026, நண்பகல் 11 மணி அறிவித்தார் பாஜக தேசிய தலைவர் நிதின் நபின்

அண்ணாமலை,annamalai,annamalai bjp

அதன் பிறகு ஜூன் 5, 2026, நண்பகல் 12 மணி அளவில் இன்ஸ்டாகிராம் லைவ் வாயிலாக தனது தொண்டர்களுக்கு உரையாற்றினார் அண்ணாமலை. டிசம்பரிலேயே பாஜகவில் இருந்து விலக முடிவு எடுத்ததாகவும் அனால் கட்சி தலைமை தேர்தல் வரை அமைதி காக்க வேண்டும் என வேண்டுகோள் விடுத்தது. 2026 தேர்தல் முடிவுக்கு பிறகு தமிழக அரசியல் சூழ்நிலை மாறியுள்ளது.

ரஜினிகாந்த் அரசியல் என்ட்ரி

அண்ணாமலை,annamalai,annamalai bjp

Image Credit: Image Credit : Annamalai Rajinikanth | Image Source : X/@Annamalai

மேலும் கூறிய அண்ணாமலை பா.ஜ.கவில் இணைய இருந்த நாளில் தான் ஆரம்பிக்க இருந்த கட்சியில் சேர என்னை ரஜினி அழைத்தார். பி.எல்.சந்தோஷிடம் வாக்குறுதி அளித்ததால் ரஜினி அழைப்பை ஏற்கவில்லை.சென்னை திரும்பியதும் ரஜினியை சந்தித்து மன்னிப்பு கோரினேன். மேலும் தேசிய கட்சிகள் ஒரு போதும் தமிழ்நாட்டு மக்களுக்கு புரியும் மொழியில் பேசுவதில்லை எனவும் கூறினார்.

ஒரு புதிய தலைமுறையை அரசியலுக்கு கொண்டு வரணும். அவங்க முடிவை நாம மதிக்கணும். அவங்க ஏன் இப்படி ஓட்டு போட்டாங்கனு கேக்க கூடாது. அவங்க மாற்றத்தை விரும்புறாங்க. அதனால தான் நான் இன்ஸ்டாகிராம் லைவ் வந்து உங்களுடன் பேசி கொண்டு இருக்கிறேன் எனவும் கூறினார்.

மேலும் கூறிய அண்ணாமலை உள்ளாட்சி பிரதிநிதிகளால் தான் சாத்தியம் ஒரு முதல்வராலோ அமைச்சா்களாலோ, எம்எல்ஏக்களாலோ மாற்றம் கொண்டு வர முடியாது, உள்ளாட்சி பிரதிநிதிகளால் மட்டுமே மாற்றம் சாத்தியம். கொஞ்சம் பொறுமை, கொஞ்சம் நிதானம், தன்னோடு புதிய கட்சியில் பயணிக்க வருபவர்களுக்கு அன்பு வேண்டுகோள் வைத்த அண்ணாமலை அனைவருக்கும் வாய்ப்பு கொடுக்கும் கட்சியாக நமது கட்சி இருக்கும் என் கூறினார்.

புதிய அரசியல் இயக்கம்

தனது இயக்கத்தில் இணைவதற்கான லிங்கை நேரலையில் அறிவித்துள்ளாா் அண்ணாமலை. இயக்கத்தில் சேர http://wetheleader.org என்ற இணையத்தின் மூலம் இணையலாம்.

Published by

manish perfect

வாழ்க்கை முறை எழுத்தாளர். டிஜிட்டல் தளத்தில் டெக்னாலாஜி, லைஃப்ஸ்டைல், அரசியல், சார்ந்த விஷயங்களைக் ஆராய்ச்சி கட்டுரைகளாக எழுதி வருகிறேன். யூடியூப், ஃபேஸ்புக், இன்ஸ்டாகிராம் தளங்களில் வீடியோக்கள் தொடர்ந்து காணலாம்.

Exit mobile version