இந்தியாவின் முக்கியமான நகரங்களைப் பற்றி நீங்கள் சிந்திக்கும்போது, மும்பை, டெல்லி, பெங்களூரு போன்ற பெயர்கள் முந்தியதாக தோன்றும். ஆனால் தமிழ்நாட்டின் தலைநகர் சென்னை, chennai தன் தனிப்பட்ட அடையாளத்தை உருவாக்கியுள்ளது.
Table of Contents
சென்னை நகரம் (Madras City)
Chennai இன்றைய வேகமான உலகில் எத்தனையோ நகரங்கள் இருந்தாலும், சென்னை என்று ஒரு ஆன்மா இருக்கிறது. மகிழ்ச்சியான வாழ்க்கை வாழ்வது, கலாச்சாரம், நவீனத்துவம் என இரண்டையும் சமமாகத் தாங்கி நிற்கும் இந்த நகரம், எப்படி மற்ற மெட்ரோ நகரங்களில் இருந்து வேறுபடுகிறது? சென்னையின் பெருமைகளைப் பற்றி ஒரு சின்னப் பயணம் போவோமா?
ஆன்மீகத்தோட மையம் (A spiritual center)
தென்னிந்தியாவின் ஆன்மீக நுழைவுவாயிலாகத் திகழ்கிறது சென்னை. இந்த ஆன்மீக பன்முகத்தன்மை சென்னைய பக்தர்களுக்கு ஒரு முக்கிய டெஸ்டினேஷனா மாத்துது. பாரம்பரியமிக்க கோயில்கள் முதல் வரலாற்றுச் சிறப்புமிக்க பசிலிக்கா மற்றும் மசூதிகள் வரை, சென்னை ஒரு மத நல்லிணக்கத்தின் அடையாளம். எல்லா மதமும் ஒருமித்து இருக்குற ‘ஸ்பிரிச்சுவல் ஹப்’ சென்னை.

சென்னையில் நீங்கள் காண வேண்டிய முக்கிய ஆன்மீகத் தலங்கள்:
- மயிலாப்பூர் கபாலீஸ்வரர் கோயில்: 7-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த புகழ்பெற்ற சிவன் கோயில்.
- சாந்தோம் பசிலிக்கா: இயேசுவின் சீடரான புனித தோமையாரின் சமாதி மீது கட்டப்பட்ட சர்வதேச புனிதத் தலம்.
- திருவல்லிக்கேணி பார்த்தசாரதி கோயில்: 8-ஆம் நூற்றாண்டைச் சேர்ந்த பழமையான வைணவத் தலம்.
- ஆயிரம் விளக்கு மசூதி: ஷியா முஸ்லிம்களின் மிக முக்கியமான வழிபாட்டுத் தலங்களில் ஒன்று

சென்னையின் இந்த ஆன்மீகப் பயணம் பற்றி மேலதிக விவரங்களை அறிய தமிழ்நாடு சுற்றுலாத் துறை இணையதளத்தைப் பார்க்கலாம்.
மெரினா பீச் – சென்னையோட அடையாளம்
இந்தியாவின் நீளமான கடற்கரைகளில் ஒன்றான மெரினா பீச், சென்னையின் அடையாளம். இது உலகின் இரண்டாவது மிக நீளமான இயற்கை நகர்ப்புற கடற்கரையாகும். நீங்கள் மெரினாவின் முழு அழகையும் பார்க்க Marina Lighthouse கோபுரத்தின் உச்சிக்குச் செல்லலாம். அலைகளின் ஓசை ஒருபுறம், சுடச்சுட பஜ்ஜி – முறுக்கு விற்கும் சத்தம் மறுபுறம் என மெரினா எப்போதும் உயிர்ப்புடன் இருக்கும். குடும்பங்கள் கூடி மகிழும் இடமாகவும், தனிமையைத் தேடுபவர்களுக்குத் துணையாகவும் இந்த மணற்பரப்பு இருக்கிறது. அந்தி சாயும் நேரத்தில் அடிக்கும் கடல் காற்றும், சூரிய அஸ்தமனமும் சென்னையின் மீதான காதலை இன்னும் அதிகமாக்குகிறது. உலகின் பல்வேறு பகுதிகளில் இருந்தும் சுற்றுலாப் பயணிகளை ஈர்க்கும் இந்த கடற்கரை, சென்னையின் ஒரு மேஜிக்கல் ஸ்பாட்!

மெரினா கடற்கரைக்கு மிக அருகிலேயே இருக்கும் விவேகானந்தர் இல்லம் சென்னையின் ஒரு முக்கிய வரலாற்று அடையாளம்.இது விவேகானந்தரின் வாழ்க்கை வரலாற்றைக் கூறும் அருங்காட்சியகமாக மாற்றப்பட்டுள்ளது. இங்குள்ள தியான அறை உங்களுக்கு ஒரு ஆழ்ந்த அமைதியைத் தரும்.
மெரினாவை விட கொஞ்சம் ‘க்ளாஸான’ மற்றும் அமைதியான வைப் வேண்டுமென்றால் அது ‘பெஸி’ (Besie) தான்! எலியட்ஸ் பீச் – பெசன்ட் நகர். சுத்தமான மணற்பரப்பு, வரிசையாக இருக்கும் கஃபேக்கள் (Cafes), மற்றும் ரெஸ்டாரண்ட்கள் என இது ஒரு மாடர்ன் பீச் கடற்கரையை ஒட்டியே இருக்கும் அன்னை வேளாங்கண்ணி ஆலயம் மற்றும் அஷ்டலட்சுமி கோயில் ஒரு தெய்வீகத் தன்மையையும் தருகிறது.
கல்வி மற்றும் தொழில்நுட்ப மையம் (Center for Education and Technology)
கல்வியிலும் தொழில்நுட்பத்திலும் முன்னோடியாகத் திகழ்கிறது சென்னை. அண்ணா பல்கலைக்கழகம் முதல் லயோலா கல்லூரி வரை உலகத்தரம் வாய்ந்த கல்வி நிலையங்கள் இங்கே உண்டு. படிப்புக்கு IIT, வேலைக்கு OMR IT Corridar- இதுதான் சென்னையோட ‘சக்சஸ் ஃபார்முலா’! ஓஎம்ஆர் (OMR) சாலையில் அணிவகுக்கும் ஐடி நிறுவனங்கள் சென்னையை இந்தியாவின் மிக முக்கியமான டெக் சிட்டியாக மாற்றியுள்ளது.

பழமையைப் போற்றுவது ஒரு பக்கம் இருந்தாலும், ஐடி மற்றும் ஸ்டார்ட்-அப் துறையில் சென்னை இப்போ ஒரு புயலா கிளம்பிருக்கு. கல்வி மற்றும் வேலைவாய்ப்பு வசதிகளே இளைஞர்களின் சொர்க்கமாக சென்னையை வைத்திருக்கிறது. பெங்களூருக்கே சவால் விடும் அளவுக்கு வளர்ந்திருக்கிற நம்ம ஊரு, இன்னைக்கு இளைஞர்களின் கனவு தேசமா இருக்கு!

ஆட்டோமொபைல் ஹப் (Automobile Hub)
அமெரிக்காவின் டெட்ராய்ட் நகரம் கார் உற்பத்திக்கு உலகப்புகழ் பெற்றதோ, சென்னை “ஆசியாவின் டெட்ராய்ட்” என்று அழைக்கப்படுவது ஒரு பெரிய பெருமை! இந்தியாவின் கார் உற்பத்தியில் சென்னை முதலிடத்தில் இருக்கிறது.

ஹூண்டாய் (Hyundai), போர்டு (Ford), பிஎம்டபிள்யூ (BMW), மற்றும் அசோக் லேலண்ட் (Ashok Leyland) போன்ற தொழிற்சாலைகள் இங்கேதான் உள்ளன. ஆயிரக்கணக்கான வாகனங்கள் உலக நாடுகளுக்கு சென்னை துறைமுகம் வழியாக ஏற்றுமதி செய்யப்படுகின்றன.
மருத்துவத் தலைநகரம் (Medical capital)
உலகத்தரம் வாய்ந்த சிகிச்சைகள் மற்ற நாடுகளை விட மிகக் குறைந்த செலவில் கிடைப்பதால், வெளிநாட்டினர் சிகிச்சைக்காக சென்னைக்கு வருவதையே ‘மெடிக்கல் டூரிசம்’ என்கிறோம். சிறந்த மருத்துவர்கள், நவீன தொழில்நுட்பம் மற்றும் மலிவான சிகிச்சை செலவுதான் சென்னையை இந்தியாவின் மருத்துவத் தலைநகரமாக மாற்றியுள்ளது

அப்பல்லோ (Apollo), மியாட் (MIOT), சென்னை குளோபல் (Global Health City) போன்ற மருத்துவமனைகள் அதிநவீன வசதிகளுடன் செயல்படுகின்றன. உயிர்காக்கும் மருத்துவம் சிகிச்சைகள் பல துறைகளிலும் சென்னை நம்பர் 1 இடத்தைப் பிடிக்கிறது.
வணிக மையம் & உணவு (Business Center & Food )
சென்னைக்கு வந்துட்டு டி.நகர் போகலன்னா அந்த ட்ரிப்பே வேஸ்ட். சென்னைனாலே மெயின் பிக்சர் டி.நகர் ஷாப்பிங். தென்னிந்தியாவின் மிகப்பெரிய வணிக மையம். புத்தாடை மணம், ஜொலிக்கும் ஆபரணங்கள் என டி.நகர் எப்போதும் திருவிழாக் கோலத்தில்தான் இருக்கும். சரவணா ஸ்டோர்ஸ்’, ‘போத்தீஸ்’னு பெரிய கடைகளுக்கு நடுவுல, பிளாட்பாரத்துல பேரம் பேசி (Bargaining) வாங்குற அந்த குஷியே தனி தான்.

பாண்டி பஜாரின் நடைபாதை கடைகள் முதல் ரங்கநாதன் தெருவின் பிரம்மாண்ட ஜவுளிக் கடைகள் வரை, எல்லா தரப்பு மக்களுக்கும் ஏற்ற இடமிது. ஷாப்பிங்னா டி.நகர், டி.நகர்னா ஷாப்பிங்! இந்தியாவின் பரபரப்பான வணிக வீதிகளில் ஒன்றான இங்கே கிடைக்காத பொருளே இல்லை எனலாம். தள்ளுபடி விலையில் தரமான பொருட்கள், விதவிதமான மாடல்கள் என ஷாப்பிங் பிரியர்களைக் காந்தம் போல ஈர்க்கும் இடம் இது. சென்னையின் பொருளாதாரத்தின் இதயத்துடிப்பு இந்த டி.நகர் தான்.

சென்னையின் ஆன்மா அதன் உணவில்தான் ஒளிந்திருக்கிறது. பாரம்பரிய இட்லி, தோசை, மணக்கும் சாம்பார் இட்லி முதல் நாவூறும் பிரியாணி மற்றும் காரசாரமான பரோட்டா வரை ஒரு உணவுத் திருவிழாவே நடத்துகிறது.

ஷாப்பிங்கிற்கு டி.நகர், சாப்பாட்டிற்கு மெட்ராஸ் – இதுதான் சென்னையின் தாரக மந்திரம்! சைவம் முதல் அசைவம் வரை, தெருவோரக் கடைகள் முதல் உலகத்தரம் வாய்ந்த உணவகங்கள் வரை சென்னையின் சுவைக்கு இணையில்லை. அடையார் ஆனந்த பவன், முருகன் இட்லி கடை, புகழ்பெற்ற ரத்னா கஃபே என சென்னையின் உணவு பிராண்டுகள் இன்று உலகத்தரம் வாய்ந்தவை.

இந்த சுவை மேஜிக்தான் சென்னையை பலருக்கும் ‘ஆல்-டைம் ஃபேவரைட்’ ஆக்குகிறது. ஷாப்பிங் செய்துவிட்டு, களைப்போடு ஒரு பில்டர் காபியை அருந்துவதே ஒரு அலாதி சுகம்!
தமிழ் சினிமா (Tami Cinema industry)
சென்னை என்றாலே பலருக்கும் முதலில் நினைவுக்கு வருவது கோலிவுட் தான்! சென்னைதான் தென்னிந்தியத் திரையுலகின் தலைநகர். கோடம்பாக்கத்தின் ஏவிஎம் ஸ்டுடியோக்கள் முதல் சத்யம் தியேட்டர் பாப்கார்ன் வரை, சென்னைக்குள்ளேயே ஒரு சினிமா ஓடிக்கொண்டிருக்கும்.

ரஜினி, கமல் என ஜாம்பவான்கள் உருவான இந்த மண்ணில், இளையராஜா, ஏ.ஆர். ரஹ்மான் போன்ற உலகத்தரம் வாய்ந்த இசை கலைஞர்களின் ஸ்டுடியோக்களும் அமைந்துள்ளன. இயக்குநர்கள் மணிரத்னம், ஷங்கர் இவங்களோட படைப்புகள்… இதெல்லாம் சென்னைய பிரபலப்படுத்துது. ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் புது பட ரிலீஸுக்கு காத்திருக்குற ஃபேன்ஸ், தியேட்டர்ல ஃபர்ஸ்ட் டே ஃபர்ஸ்ட் ஷோ பார்க்குற உற்சாகம் – இது சென்னையோட ஸ்பெஷல் எனர்ஜி!
போக்குவரத்து மற்றும் இணைப்பு
இந்தியாவின் மிக முக்கியமான போக்குவரத்து நுழைவாயிலாகத் திகழ்கிறது சென்னை. வானம், கடல், தரைன்னு எல்லா வழியிலயும் சென்னையை ஈஸியா ரீச் பண்ணிடலாம்.

வான்வழிப் பயணத்திற்கு சர்வதேச விமான நிலையம், ரயில் பயணத்திற்கு வரலாற்றுச் சிறப்புமிக்க சென்ட்ரல் மற்றும் எழும்பூர் நிலையங்கள், சாலைப் பயணத்திற்குப் பிரம்மாண்ட பேருந்து முனையங்கள் எனச் சென்னை ஒரு முழுமையான கனெக்டிவிட்டி சென்டர். நவீன மெட்ரோ ரயில் முதல் சென்னையின் அடையாளமான ஷேர் ஆட்டோக்கள் வரை, இங்கிருக்கும் போக்குவரத்து வசதிகள் சுற்றுலாப் பயணிகளுக்கும் சரி, தொழில் நிமித்தமாக வருபவர்களுக்கும் சரி, சென்னையை மிகவும் நெருக்கமான ஒரு நகரமாக மாற்றுகிறது

சென்னை மக்களோட அன்பு
சென்னைக்கு எத்தனை பெருமை இருந்தாலும் சென்னையைத் தனித்துவமாகக் காட்டுவது இங்குள்ள மக்களின் எளிமைதான். பக்கத்து வீட்டுக்காரரிடம் காட்டும் அன்பும், அந்நியரிடமும் காட்டும் உதவியும் சென்னையின் அடையாளங்கள். சென்னை ஒரு நகரம் மட்டுமல்ல, அது பல கோடிக்கணக்கான மக்களின் உணர்வு. இந்த ஒருமித்த இதயத்துடிப்புதான் சென்னையை இந்தியாவின் மிகச்சிறந்த நகரங்களில் ஒன்றாக மாற்றுகிறது. சென்னை – இது ஒரு ஊர் இல்ல, எல்லாருடைய உயிர்.

இங்க இருக்குற ஒவ்வொரு மனுஷனும் ஒரு ‘பிராண்ட்’ தான்! பிசினஸ் மேக்னட் முதல் ப்ளாட்பாரக் கடைக்காரர் வரை எல்லாரும் சிரிச்சுப் பேசுற அந்த குணம், ‘ஆட்டோ அண்ணாகிட்ட பேரம் பேசுறதுல ஆரம்பிச்சு, என்ன பாஸ்’னு உரிமையா கேக்குற அந்த ஒரு வார்த்தை, தெரியாத ஒருத்தருக்கு வழி சொல்ற வரைக்கும் – சென்னை மக்களோட அந்த ‘ஹெல்ப்பிங் மைண்ட்’ வேற எங்கும் கிடைக்காது. இந்த ஊரோட பெரிய பலம். கல்வி, கலாச்சாரம், டெக்னாலஜி, சினிமா, ஆன்மீகம், உணவுன்னு இங்க எல்லாமே ஸ்பெஷல் தான், ஆனா அதைவிட ஸ்பெஷல் இங்க இருக்குற ‘மெட்ராஸ் பாசம்’. எல்லாத்தையும் ஒண்ணா சேர்த்துப் பார்த்தா, சென்னை உண்மையிலேயே ஒரு ‘மேஜிக்’ தான்
