ருத்திராட்சம் வரலாறு
ருத்திராட்சம் “ருத்ராக்ஷா” என்ற வார்த்தையில் இருந்து ருட்ராட்சை அதன் பெயரை பெற்றது. ருத்ராக்ஷா என்பது ‘ருத்ரா’ (சிவன்) மற்றும் ‘அக்ஷா’ (கண்கள்) என்ற வார்த்தைகளில் இருந்து உருவாக்கப்பட்டதாகும். சிவபெருமானின் கண்ணீரில் இருந்து உருவானதே உருத்திராட்சை மரம் என்று நம்பப்படுகிறது. சிவனுடைய அம்சமாக கருதப்படுவது ருத்ராட்சம்.
இந்த ருத்ராட்சை மணிகள் ஒரு முகம் முதல் 21 முகங்கள் வரை கொண்டுள்ளதாகும். இருப்பினும் 1-11 முகங்கள் கொண்ட ருத்ராட்சையை மட்டுமே மனிதர்கள் அணிகிறார்கள். ருத்ராட்சை அணிவதால் பல வகையான நோய்கள் குணமடைந்து ஒருவரின் வாழ்க்கையில் நேர்மறையான ஆற்றலை கொண்டு வரும் என்று நம்பப்படுகிறது. இரத்த அழுத்தத்தை கட்டுப்படுத் தக்கூடிய சக்தியும், மன அழுத்தத்தை குறைக்கும் சக்தியும் ருத்ராட்சத்திற்கு உண்டு
ருத்ராட்ச முகத்திற்கான சிறப்புகள்
ருத்ராட்சத்தில் எத்தனை கோடுகள் உள்ளதோ அவை தான் ருத்ராட்சத்தின் முகங்கள் என்று சொல்லப்படுகிறது.
ஏகமுக ருத்ராட்சம்
இந்த ஒரு முக ருத்ராட்சத்தை பார்ப்பது மிக அரிது இந்த ருத்ராட்சத்தை தொட்டு வணங்கினால் நம்முடைய பாவங்கள் போகும்

இரண்டு முக ருத்ராட்சம்:
இந்த முக ருத்ராட்சம் அர்த்தநாரீஸ்வரருக்கு சமமானது. இது சந்திர கிரகத்திற்கு தொடர்புடையது. இது மன அமைதி குண்டலி சக்தியை எழுப்புகின்ற சக்தி வாய்ந்தது

மூன்று முக ருத்ராட்சம்:
சோமன் சூரியன் அக்னி என முக்கோண வடிவம் பெற்றது. செவ்வாய் கிரக தோடு தொடர்புடையது.

நான்கு முக ருத்திராட்சம்:
இது பிரம்மாவை குறிக்கக் கூடியது. பக்தி மோட்சம் செல்வம், அறிவுக்கூர்மை இவை அனைத்தும் தரக்கூடியது. புதன் கிரகத்தோடு தொடர்புடையது. இந்த ருத்ராட்சத்தை படைப்பாளிகள் சினிமா பிரபலங்கள் என பலரும் இதை அணியலாம்.

ஐந்து முக ருத்ராட்சம்:
இது ஈசானம் தத்புருஷம் அகோரம் காமதேனம் சத்யா ஜெகம் என்ற பஞ்ச முகங்களை கொண்டது. குரு கிரகத்தோடு தொடர்புடையது. இதை யார் வேண்டுமானாலும் அணிந்துகொள்ளலாம் பாவம் தீர்க்கும் சிவ கடாட்சத்தை இது கொடுக்கும்.

ஆறுமுக ருத்ராட்சம்:
முருகப்பெருமான் வடிவமாக கருதப்படும் இந்த ருத்ராட்சம் சுக்கிர கிரகத்தோடு தொடர்புடையது. பிரம்மஹத்தி தோஷம் போக்குகின்ற அளவுக்கு இது பயன்தரும். புகழ் மெய்ஞானம் பரிசுத்தம் என அனைத்தும் தரவல்லது.

ஏழுமுக ருத்ராட்சம்:
இது ஆதிசேஷனின் அம்சமாக கருதப்படுகிறது. சப்தகன்னியர் களின் அருளையும் நாக தோஷத்தை நீக்கக் கூடியது. யோக சக்தியை நமக்குள் அதிகமாகப் பெருக்கக் கூடிய வல்லமை பெற்றது இந்த ஏழு முக ருத்ராட்சம்.

எட்டு முக ருத்ராட்சம்:
விநாயகப் பெருமானின் அருளைப் பெற்று தரக்கூடியது. ராகுல் கிரகத்தோடு தொடர்புடையது. இவற்றை அணிவதால் அஷ்டவசுக்கள் ஆசியும், அஷ்டமாசித்தியையும் அஷ்டலட்சுமி கடாட்சம் கிடைக்கின்றது.

ஒன்பது முக ருத்ராட்சம்:
நவ பைரவரின் அருளை தரக்கூடியது. கேது கிரகத்தோடு தொடர்புடையது. பில்லி சூனியத்தை நீக்குவதில் சித்தி முக்கிய தருவதையும் கொடுக்கிறது. இதைக் கழுத்தில் விட இடது மணிக்கட்டில் அணிந்து கொண்டால் அதிகமான பலன்கள் கிடைக்கும்.

பத்து முக ருத்ராட்சம் :
இது மகாவிஷ்ணுவின் சொரூபமாக கருதப்படுகிறது. பூத போன்ற பிசாசுகளின் பயத்தை போக்குகின்ற வ வல்லமை தரக்கூடியது. பீடையை போக்கி புண்ணியத்தை பெற்றுத்தரக் கூடியது.

பதினோரு முக ருத்ராட்சம் :
அஸ்வமேத யாகம் பண்ணிய பலனை கொடுக்கக்கூடிய சிறப்பு வாய்ந்தது. சிவஞான சித்தி யை நமக்கு தரக்கூடியதாகவும் இந்த ஏகாதசருத்திரர் ரூபத்தை உடைய பதினோரு முக ருத்ராட்சம் அமைந்துள்ளது.

21 முகம் ருத்ராட்சம் :
இவை மிகவும் அரிய வகையான ருத்ராட்சம் கிடைப்பது மிகவும் அரிது. அது கிடைத்தால் மிகப்பெரிய சக்தியை அடைந்து விடலாம்.
கௌரிசங்கர் வகை ருத்ராட்சம்:
அம்மை அப்பன் என இரண்டும் இணைந்து காணக்கூடிய தோற்றத்தை இது தருகிறது. இவை கிடைப்பது அரிதிலும் அரிது

ருத்ராட்சத்தை தனியாக அணியாமல் ஏதாவது ஒரு உலோகத்துடன் சேர்த்து அணிந்தால் அது இல்லற வாழ்க்கையில் இருப்பவர்களுக்கு நல்லது. ஆண், பெண் என இருபாலருமே ருத்ராட்சத்தை அணியலாம். பெண்களுக்கு இருக்கக்கூடிய இயல்பான இடர்பாடான நாட்களில் கூட அணிந்திருக்கலாம்.