சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட்டு பெங்களூர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார்.

பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் இருக்கும் சசிகலாவுக்கு திடீரென மூச்சுத்திணறல் ஏற்பட பெங்களூரில் உள்ள மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டார். அங்கு அவருக்கு உயர் ரத்த அழுத்த  சிகிச்சை அளிக்கப்பட்டுள்ளது. இரண்டு மணி நேரமாக தீவிர சிகிச்சை பிரிவில் இருந்த சசிகலா அதன் பிறகு சாதாரண பிரிவுக்கு மாற்றப்பட்டார். 

இரவு முழுவதும் மருத்துவ கண்காணிப்பில் இருந்து சசிகலா அதன் பிறகு பரப்பன அக்ரஹாரா சிறைக்கு மாற்றப்பட்டார். 

பெங்களூர் மருத்துவமனையில் சசிகலா

63 வயதான சசிகலா சொத்து குவிப்பு வழக்கில் கடந்த நான்கு ஆண்டுகளாக பரப்பன அக்ரஹார சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வருகிறார் வரும் 27ஆம் தேதி சிறையிலிருந்து வெளியாக உள்ள நிலையில் தற்போது உடல் நலக்குறைவு ஏற்பட்டுள்ளது பலரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கியது.

ஏற்கனவே சசிகலாவுக்கு இரத்தக் கொதிப்பு மற்றும் சர்க்கரையின் அளவு அதிகமாக உள்ளது. மருத்துவமனையில் அவருக்கு பரிசோதனை செய்த டாக்டர்கள் அவரது உடல்நிலை தற்போது சாதாரணமாக உள்ளது இருந்தாலும் காய்ச்சல் மற்றும் ரத்தக் கொதிப்பு உள்ளதால் மருத்துவமனையில் தங்கி ஓய்வு எடுக்கும்படி அறிவுறுத்தப்பட்டுள்ளனர்

சசிகலாவின் திடீர் உடல்நலக்குறைவு தமிழக அரசியலில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. கடந்த இரண்டு நாட்களுக்கு முன்பு தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மத்திய அமைச்சர் அமித் ஷா மற்றும் பிரதமர் மோடியை டெல்லியில் சந்தித்த நிலையில் சசிகலாவுக்கு உடல்நலக்குறைவு ஏற்பட்டுள்ளது தற்போது பேசுபொருளாக ஆகியுள்ளது.