ஈஸ்வரன் பின்னுக்கு தள்ளும் மாஸ்டர்

சிம்புவின் ஈஸ்வரன்

பல வருடங்களுக்கு பிறகு நடிகர் சிம்பு நடித்துள்ள ஈஸ்வரன் படத்தை இயக்குனர் சுசீந்திரன் இயக்கியுள்ளார் இப்படம் வரும் ஜனவரி மாதம் ரிலீஸ் செய்ய படக்குழு திட்டமிட்டிருந்த நிலையில் இப்படத்தின் ரிலீஸ் தள்ளி போகும் நிலையில் உள்ளது.

வரும் பொங்கல் அன்று இந்த படத்தை திரைக்கு கொண்டு வரலாம் என இயக்குனர் சுசீந்திரனும் தயாரிப்பாளரும் முனைப்பு காட்டிக் கொண்டிருக்கும் நிலையில் அதிக தியேட்டர்களில் இப்படம் வெளியாகுமா என்ற சூழல் தற்போது உருவாகியுள்ளது. 

விஜய் மாஸ்டர் ரிலீஸ்

நடிகர் விஜய் நடித்துள்ள மாஸ்டர் திரைப்படம் இந்த ஆண்டு ஏப்ரல் மாதம் ரிலீசாக இருந்த நிலையில் கொரோனா பரவல் காரணமாக இப்படத்தை வரும் பொங்கல் அன்று ரிலீஸ் செய்ய படக்குழுவினர் தீவிரமாக வேலை செய்து  வருகின்றனர். இதன் காரணமாக பொங்கல் பண்டிகைக்கு மாஸ்டர் படத்தை அதிக தியேட்டர்களில் வெளியிடுவதால் ஈஸ்வரன் படத்திற்கு  குறைவான தியேட்டர்களை கிடைக்கக்கூடும்  என திரையரங்கு தரப்பில் கூறப்படுகிறது. 

இதனால் ஈஸ்வரன் படத்தின் வெளியீட்டை தள்ளி வைக்கலாம் என படக்குழு தீர்மானித்துள்ளதாக கூறப்படுகிறது. ஒருவேளை குறைவான தியேட்டர்கள் கிடைக்கும் பட்சத்தில் சிம்புவின் பிறந்த நாளான ஜனவரி மாத இறுதியில் படத்தை ரிலீஸ் செய்யலாம் எனவும் படக்குழு தீர்மானித்துள்ளதாக சினிமா வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. 

சிம்பு கதாநாயகனாகவும்  நிதி அகர்வால்  கதாநாயகியாகவும், பாரதிராஜா மற்றும் சிலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்துள்ளனர். இப்படத்தை சுசீந்திரன் இயக்கியுள்ளார். இப்படத்திற்கு ஒளிப்பதிவு இயக்குனராக திருநாவுக்கரசு பணியாற்றியுள்ளார். இப்படத்திற்கு தமன் இசையமைத்துள்ளார். ஏற்கனவே ஒரு சில பாடல்கள் வெளியாகி சிம்புவின் ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ள நிலையில் படத்தை எதிர்பார்த்து காத்திருக்கின்றனர் சிம்புவின் தீவிர ரசிகர்கள்.