பெருமானின் திருமேனியில் வியர்வை:
பெருமாளின் சிலை வெறும் கல்லாக பார்க்கப்படுவதில்லை அதற்கு மூல காரணம் சிலையின் முகத்தில் வடியும் வியர்வை துளிகள். கோவிலை சுற்றி குளிர்ந்த காற்று வீசினாலும் கூட முகத்தில் வியர்வை வழிவதாக கூறப்படுகிறது. அந்த முகத்தில் வடியும் வியர்வையை துடைக்க இதற்கென ஒரு அர்ச்சகர் இருக்கிறார். மேலும் பெருமாள் வியர்வையை துணியால் மட்டும் துடைத்து விடுவார்களாம்.

அணையா விளக்குகள்:
பெருமாள் வீற்றிருக்கும் கருவறையில் எரியும் மண் விளக்குகள் ஒருபோதும் அணைந்தது இல்லை என்று சொல்லப்படுகிறது. அது எப்போது ஏற்பட்டது குறித்த பதிவு இல்லை என்றாலும் ஏற்பட்ட நாள் முதல் இன்று வரை அணைந்தது இல்லை என்று சொல்லப்படுகிறது.
அதிசய மூட்டும் மலர்மாலைகள்:
பெருமாளுக்கு சாத்திய மலர்மாலைகள் மறுநாள் நன்கு சுத்தம் செய்த பின் அவற்றை அர்ச்சகர்கள் கருவறை கூடையில் போடுவதில்லை. அதற்கு மாறாக கோவிலின் பின்புறத்தில் உள்ள அருவியில் கொட்டுகின்றனர்.அங்கு கொட்டப்படும் பூக்கள் ஒருநாளும் அங்கு தென்படுவது இல்லையாம். அவை அனைத்தும் கோவிலில் இருந்து மிகத்தொலைவில் ஏற்காடு என்ற கிராமத்திற்கு சென்று தேங்கி நிற்கின்றன.
பாற்கடலில் பள்ளி கொண்ட பெருமாள்:
பெருமாளின் சிலை பின்புறம் உள்ள சுவற்றில் காதை வைத்துக் கேட்டால் கடல் அலையின் சத்தம் கேட்பதாக கூறப்படுகிறது.எனவே அவர் பாற்கடலில் இருப்பது போன்ற அமைப்பு கண்ணுக்கு தெரியாமல் இருப்பதாக நம்பப்படுகிறது.
சிலையில் உண்மையான முடி:
பெருமாளின் உருவத்தில் பதிக்கப்பட்ட முடி உண்மையானது. ஏனென்றால் பெருமாள் பூமிக்கு வந்த போது நிகழ்ந்த போர்க்களத்தில் அவருடைய முடியினை சிலவற்றை இழந்து உள்ளார். அதை அறிந்த காந்தர்வ பேரரசு நீலாதேவி தன்னுடைய கூந்தலை அறுத்து பெருமாளின் சிலை முன்பு வைத்து விட்டு அதை ஏற்றுக் கொள்ளுமாறு வேண்டியுள்ளார். இதை அறிந்த பெருமாள் தன் தலையில் சூடிக் கொண்டார். இந்த காரணத்தினால்தான் திருப்பதிக்கு வரும் பக்தர்கள் பெருமாளுக்கு கொடுப்பதாக ஐதீகம் உள்ளது. இதன் காரணமாக இன்றுவரை திருப்பதியில் மொட்டை அடித்து காணிக்கை செலுத்துவது மிகவும் பிரசித்தி பெற்றதாக விளங்குகின்றது