இது முழுக்க முழுக்க தமிழ் கட்டிடக்கலைக்கு ஒரு முன்மாதிரியான எடுத்துக்காட்டாக திகழ்கிறது. கோவில் உள்ளூரில் தஞ்சை பெரிய கோவில் என்றும் ராஜராஜேஸ்வரம் என்றும் அழைக்கப்படுகிறது.
தஞ்சை பெரிய கோயிலின் நீளம் மொத்தம் 240 மீட்டர், அகலம் 160 மீட்டர் உடன் பிரமாண்ட நீள்சதுர வடிவில் அமைந்துள்ளது. அதாவது இருபத்தி எழு கால்பந்து மைதானங்கள் ஒன்று சேர்த்தது போன்ற பரப்பில் கோயில் அமைந்துள்ளது. வழக்கமாக நுழைவாயில் கோபுரம் இருக்கும் முறையை மாற்றி சிவலிங்கம் அமைந்துள்ள கருவறை விமானமே நடுப்பகுதியில் கோபுரமாக அமைக்கப்பட்டுள்ளது. எங்கிருந்து பார்த்தாலும் தெரியும் விதமாக கோபுரம் வடிக்கப்பட்டுள்ளது.
பெரியகோவில் கோபுர உயரம் 216 அடி முழுக்க கற்களைக்கொண்டு எழுப்பப்படும் ஒரு பிரம்மாண்ட கற்கோவில் . கோபுரம் மொத்தம் 15 நிலைகள் கொண்டது. ஒவ்வொரு நிலையில் உயரமும் சுற்றளவும் குறைந்து கொண்டே வந்து உயரத்தில் பிரமிடு போன்ற அமைப்பாக கோயில் அமைந்துள்ளது. கற்களின் எடையோ மிக மிக அதிகம். இவ்வளவு பெரிய கோவிலுக்கு அஸ்திவாரம் எவ்வாறு அமையும்? குறைந்தது 50 அடி ஆழம், 50 அடி அகல அஸ்திவாரம் வேண்டும். இந்த அளவு சாத்தியமே இல்லை, 50 அடி ஆழத்தில் வெறும் தண்ணீரும் புகை மண்டலமாகத்தான் இருக்கும் ஆனால் பெரியகோவிலின் அஸ்திவாரம் வெறும்5 அடிதான்..
மேலும் ஒரு வியப்பு இது எப்படி சாத்தியம்..? இங்குதான் நம்ம சோழ விஞ்ஞானிகளின் வியத்தகுஅறிவியல் நம்மை சிலிர்ப்படையச் செய்கிறது பெரியகோவில் கட்டுமானத்தை, அதாவது கற்கள் இணைக்கப்பட்டதை.. இலகு பிணைப்பு என்கிறார்கள். அதாவது Loose joint என்கிறார்கள் அதாவது ஒவ்வொறு கல்லையும் இணைக்கும் போது, ஒரு நூலளவு இடைவெளிவிட்டு அடுக்கினார்கள் எதற்க்காக..? நமது கிராமத்தில் பயன்பட்ட கயிற்று கட்டிலை நினைவில் கொள்ளுங்கள். கயிறுகளின் பினைப்பு லூஸாகத்தான் இருக்கும் அதன் மேல் ஆட்கள் உட்காறும் போது, கயிறுகள் அனைத்தும் உள் வாங்கி இறுகிவிடும். கயிறுகளின் பிணைப்பு பலமாகிறது. இதன் அடிப்படைதான் பெரியகோவில் கட்டுமானம். லூஸாக கற்களை அடுக்கிக்கொண்டே சென்று, அதன் உச்சியில் மிக பிரம்மாண்டமான எடையை அழுத்தச் செய்வதன் மூலம், மொத்தகற்களும் இறுகி மிக பலமான இணைப்பை பெறுகின்றன.
தஞ்சை பெரிய கோவில் கர்ப்பகிரகம் இந்த அமைப்பில் இருந்து முற்றிலும் மாறுபட்டது. கோயிலின் கருவறை உள்கூடு அமைப்பாக அமைக்கப்பட்டுள்ளது. அதாவது அண்டப் பெருவெளியே இறைவன் வாசம் செய்யும் இடமாகக் கருதும் வகையில் சிவலிங்கத்தின் மேல் திறந்த அமைப்பாக உள்ளது. மூலஸ்தானத்தில் உள்ள சிவனின் சிலை 13 அடி உயரம் கொண்டது. அந்த சிலைக்கு தனியாக கர்ப்பகிரகம் ஏதும் கட்டாமல் அந்த கோவிலின் உள்கூடு அமைப்பையே கற்பகம் ஆகியிருப்பார்கள். 13 அடி உயரம் கொண்ட சிவன் சிலைக்கு மேலே ஒரு கூம்பு போன்ற ஒரு வெற்றிடம் இருக்கிறது தஞ்சை பெருவுடையார் கோவிலின் வெளிப் புறத்தை பார்க்கும் அனைவருக்கும் கூம்பு போன்ற இருக்கிறதோ அதே போல் கோபுரத்தின் உட்புறம் கூம்பு வடிவில் கட்டப்பட்டிருக்கிறது.
சதுர வடிவிலான கருவறையை கொண்டே இக்கோயில் இரட்டைச் சுவர் கொண்ட அடித்தளம் கொண்டு உயர்ந்து நிற்கிறது. கருவறையை சுற்றி வரும் வகையில் திருச்சுற்று அமைந்துள்ளது சுற்றுச் சுவர்களை ஓவியங்களுக்கு மேலடுக்கில் சிற்பங்கள் அமைக்கப்பட்டுள்ளன கோயிலின் கட்டுமானம் பொறுத்தவரை கற்களை ஒன்றன் மேல் ஒன்றாக அடுக்கி கோர்க்கும் வடிவில் கட்டப்பட்ட இருப்பதாகக் கூறுகிறார்கள் வரலாற்று ஆய்வாளர்கள். கூம்பு வடிவமான கட்டுமானமாக பார்க்கப்படும் இக்கோயில் கோபுரத்தின் உச்சியில் உள்ள விமானம் 284 டன் எடை கொண்ட எட்டு துண்டுகளுடன் உள்ளது. நான்காயிரம் டன் எடை கொண்ட 20 யானைகளுக்கு சமமானது இந்த விமானம் ஆயிரம் ஆண்டுகளுக்கு முன் இன்று போல நவீன தொழில்நுட்பங்கள் இல்லாத காலகட்டத்தில் உருவாக்கப்பட்டு இன்றும் தனித்துவத்துடன் கோவில் நிமிர்ந்து நிற்கிறது.
எத்தனை பூகம்பம் வந்தாலும் எந்த கல்லும் அசையாது. எத்தனை ஆயிரம் ஆண்டுகள் ஆனாலும் நிலைபெற்று இருக்கும். சூரியசந்திரர் இருக்கும் வரை இக்கோவிலும் இருக்கும் என்ற நம் இராஜராஜ சோழ மன்னரின் நம்பிக்கை எந்த காலத்திலும் பொய்க்காது. இது ராஜராஜ சோழனின் மிகப்பெரிய சகாப்தம்.