வலிமை படத்தின் புதிய அப்டேட் வெளியிட்டார் இசையமைப்பாளர் யுவன் சங்கர் ராஜா

"வலிமை படத்தின் புதிய அப்டேட்"
Share on facebook
Share on twitter
Share on telegram
Share on whatsapp
Share on pinterest
Share on reddit
Share on tumblr

வலிமை அப்டேட்

தீரன் மற்றும் சதுரங்க வேட்டை இயக்குனர் எச்.வினோத் இயக்கத்தில், நடிகர் அஜித் குமார் நடிப்பில் உருவாகி வரும் படம் ‘வலிமை’. இப்படத்திற்கு யுவன் ஷங்கர் ராஜா இசையமைக்க, போனி கபூர் தயாரிக்கிறார். இத்திரைப்படம் கடந்த 2019 ஆம் ஆண்டு தொடங்கப்பட்ட நிலையில், கொரோனா பரவல் காரணமாக பாதியில் தடைப்பட்டது. கொரோனா நெருக்கடி நிலை சற்று தளர்ந்தது, மீண்டும் தொடங்கிய பணிகள் தற்போது முழுவீச்சில் நடைபெற்று வருகின்றன. 

ஆனால் நடிகர் அஜித் ரசிகர்கள் தொடர்ந்து வலிமை அப்டேட் கேட்டு கிரிக்கெட் வீரர்கள் மற்றும் திரைப்பிரபலங்கள் என பல்வேறு வழிகளில் படக்குழுவிற்கு கோரிக்கை வைத்து வரும் நிலையில், சமீபத்தில் இன்ஸ்டாகிராம் நேர்காணல் ஒன்றில் கலந்து கொண்ட இசையமைப்பாளர் யுவன்சங்கர் ராஜாவிடம் வலிமை அப்டேட் குறித்து கேள்வி எழுப்பப்பட்டது.

அதற்கு அவர் பதிலளிக்கையில், “படத்தின் பாடல் பணிகள் நடைபெற்று வருகின்றன. மோஷன் போஸ்டர் உருவாக்கம் உள்ளிட்ட ப்ரோமோஷன் பணிகள்தான் இனி நடைபெற உள்ளது” எனக் கூறினார். இத்தகவலை கேட்டு உற்சாகமான அஜித் ரசிகர்கள், ட்விட்டரில் வலைதளங்களில் மீண்டும் வலிமை அப்டேட் ட்ரெண்ட் செய்யும் வேலையில் இறங்கியுள்ளனர்.

இத்திரைப்படத்தை நடிகர் அஜித்தின் பிறந்தநாள் அன்று வெளியிட படக்குழு திட்டமிட்டுள்ளது நிலையில் இந்த மாத இறுதியில் படத்தின் டிரைலர் மற்றும் டீசர் வெளியாக உள்ளது குறிப்பிடத்தக்கது.