சென்னை: தமிழக அரசு முன்னாள் மாசுகட்டுப்பாட்டு வாரிய தலைவர் வெங்கடாசலம் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டது மிகவும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. தற்கொலைக்கான காரணம் என்னவென்று தெரியாததால் போலீசார் விசாரித்து வருகின்றனர்.
63 வயதான வெங்கடாச்சலம் சேலம் மாவட்டம் ஆத்தூரை சேர்ந்தவர். 1983 ஆண்டு ஐஎஃப்எஸ் அதிகாரியாக பணியை தொடங்கிய இவர் தமிழகம் முழுவதும் பல்வேறு இடங்களில் பணிபுரிந்துள்ளார். 2019 ஆம் ஆண்டு அதிமுக ஆட்சியில் மாசு கட்டுப்பாட்டு வாரிய தலைவராக நியமிக்கப்பட்ட இவர் 2022-ல் ஓய்வு பெற்றார.
தமிழகத்தில் ஆட்சி மாற்றம் ஏற்பட்டு முன்னாள் அதிமுக அமைச்சர்களான வேலுமணி விஜயபாஸ்கர் போன்றோரின் வீடுகளில் நடத்திய கைப்பற்றப்பட்ட சில ஆவணங்களில் அடிப்படையில் செப்டம்பர் மாதம் தமிழக லஞ்ச ஒழிப்புத்துறை வெங்கடேசனின் அலுவலகம் மற்றும் அவருடைய வீடுகளில் சோதனை நடத்தியது. இதில் 6 கிலோ தங்கம் ரொக்கமாக 13 லட்சம் பணம் மற்றும் பல்வேறு ரகசிய ஆவணங்கள் கைப்பற்றப்பட்டன.
மேலும் அரசு வேலைக்கு சிபாரிசு என பல்வேறு வகைகளில் வருமானத்திற்கு அதிகமாக சொத்து சேர்த்த வழக்கில் அடிப்படையில் இவர் மீது வழக்கு பதிவு செய்து காவல்தறை விசாரணை நடத்தி வந்தனர். இந்நிலையில் வேளச்சேரியில் உள்ள இவரது வீட்டில் தனது அறையில் தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டார்.
தற்கொலை செய்துகொண்ட வெங்கடேசன் மிகுந்த மன அழுத்தத்தில் இருந்ததாகவும் சேர்த்து வைத்த பணம் நகைகள் எல்லாம் போன காரணத்தால் அவருக்கும் அவரது மனைவிக்கும் அடிக்கடி சண்டை ஏற்பட்டுவந்த தாகவும் மேலும் தற்கொலை செய்வதற்கு முன்பாகவே அவர் சில ரூபாய் பணத்தை அவரது மனைவிக்கும் வீட்டில் வேலை செயல்களுக்கும் கொடுத்ததாக கூறப்படுகிறது. முன்கூட்டியே தற்கொலை செய்வது என முடிவை எடுத்தாரா அல்லது லஞ்ச ஒழிப்புத்துறை கொடுத்த அழுத்த காரணமாக என பல்வேறு வகைகளில் காவல்துறை விசாரணை நடத்தி வருகின்றனர். மேலும் இவ்வழக்கில் முன்னாள் அதிமுக அமைச்சர்களுக்கு ஏதாவது தொடர்பு இருக்கிறதா எனவும் பல்வேறு வகையில் காவல்துறை விசாரித்தால் மட்டுமே வெங்கடேசனின் தற்கொலைக்கு முழுமையான காரணம் தெரியும்.