SS ராஜமௌலி இயக்கிய RRR திரைப்படம் விஷுவல் எஃபெக்ட்ஸ் பிரிவில் ஆஸ்கார் விருதுக்கு பரிந்துரைக்கப்படலாம் என்றும் அவதார் 2, பிளாக் பாந்தர் 2 டாப் கன் 2 மற்றும் தி பேட்மேன் ஆகியவை மற்ற போட்டியாளர்களாக இருக்கும் என்றும் சர்வதேச பத்திரிகை தெரிவித்துள்ளது.
RRR திரைப்படம் மார்ச் 25 அன்று உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது. பார்வையாளர்களில் ஒரு பிரிவினர் ஆஸ்கார் விருதுக்கு இந்தியாவின் அதிகாரப்பூர்வ நுழைவாக இருக்க வேண்டும் என்று விரும்பினர்.
RRR திரைப்படத்தில். ஜூனியர் NTR கொமரம் பீம் மற்றும் ராம் சரண் அல்லூரி சீதா ராம ராஜு .ஆகிய காதபத்திரத்தில் நடித்துள்ளார்கள். இவர்களின் நட்பு மற்றும் பிரிட்டிஷ் சாம்ராஜ்யத்திற்கு எதிரான போராட்டத்தை ஆக்ஷன் கற்பனை கதையாக SS ராஜமௌலி எடுத்துள்ளார்.