RRR முதல் நாள் வசூல்
எஸ்எஸ் ராஜமவுலி இயக்கத்தில் உருவான RRR படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் எதிர்பார்ப்பு கிளம்பியது. ராம்சரண், ஜூனியர் என்டிஆர், ஆலியா பட் , அஜய் தேவ்கன் ஆகியோர் முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளனர்.
தெலுங்கானாவில் மற்றும் ஆந்திரா திரையரங்குகள் திருவிழாக் கோலம் பூண்டிருந்தது. ராம்சரண், ஜூனியர் என்டிஆர் மற்றும் எஸ்எஸ் ராஜமவுலி ஆகியோரின் கட்அவுட்டுகளுக்கு பாலாபிஷேகம் செய்து ரசிகர்கள் கொண்டாடினர்.
இப்படம் கொரோனா, ஊரடங்கு உள்ளிட்ட பல காரணங்களால் நேற்றுதான் ரிலீஸ் ஆனது, RRR படத்தின் முதல் நாள் வசூல் குறித்த தகவல் வெளியாகியுள்ளது. தெலுங்கு சினிமாவில் இதுவரை வெளியான அனைத்து படங்களின் முதல் நாள் வசூல் சாதனையையும் ராஜமவுலியின் RRR தூக்கி சாப்பிட்டுள்ளது. தெலுங்கில் மட்டும் முதல் நாளில் 120 கோடி ரூபாய் வசூலை குவித்துள்ளது.

இதேபோல் RRR தமிழில் முதல் நாளில் 10 கோடி ரூபாயும், இந்தியில் 25 கோடி ரூபாயும், கன்னடத்தில் 14 கோடி ரூபாயும், மலையாளத்தில் 4 கோடி ரூபாயும் வசூலை குவித்துள்ளது.
அமெரிக்கா, ஆஸ்திரேலியா, கனடா லண்டன் , மற்றும் மத்திய கிழக்கு நாடுகளில் 75 கோடி ரூபாய்க்கு மேல் வசூலை குவித்துள்ளது. மொத்தத்தில் உலகம் முழுவதும் முதல் நாள் வசூலாக ஆர்ஆர்ஆர் திரைப்படம் 223 கோடி ரூபாய் வசூலித்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.