சூரரைப் போற்று திரைப்படம் எப்படி இருக்கு? திரைப்பார்வை

SooraraiPottru சூரரைப் போற்று திரைப்பார்வை Perfect tamil
PIC COURTESY: Twitter india

SooraraiPottru (சூரரைப் போற்று) 

Soorarai Pottru சூர்யா, அபர்ணா பாலமுரளி,கருணாஸ், ஊர்வசி, காளி வெங்கட், பரேஷ் ராவல், தெலுங்கு நடிகர் மோகன் பாபு, விவேக் பிரசன்னா என பலர் நட்சத்திரங்கள் நடித்திருக்கும் திரைப்படம் சூரரை போற்று. சூர்யா தயாரித்திருக்கும் இப்படத்தை இயக்கியிருக்கிறார் இறுதி சுற்று இயக்குனர் சுதா கொங்கரா. இத்திரைப்படம் பலத்த எதிர்பார்ப்புகளுக்கு இடையே தற்போது அமேசான் OTT இணையதளத்தில் வெளியாகியிருக்கிறது. 

சூரரைப் போற்று திரைப்படம் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்றுள்ளது, OTT இணையதளத்தில் தமிழில் வெளிவந்த முதல் உச்ச நடிகர் திரைப்படம் சூரரைப்போற்று. மதுரை மாவட்டம் சோழவந்தான் ஆசிரியரின் மகன் நெடுமாறன் ராஜாவாக படத்தில் வருகிறார் சூர்யா. இந்தியாவின் உள்ள கடைக்கோடி குடிமகனுக்கும் விமானத்தில் பறக்க வேண்டும் ஏழைகள் முதல் பணக்காரர் வரை எல்லோரையும் விமானத்தில் பறக்க வைக்க வேண்டும் என்பதே நெடுமாறன் ராஜாங்கத்தின் கனவு.  இப்படத்தில் சூர்யாவிற்கு பக்கபலமாக இருந்து தட்டி உற்சாகப்படுத்துகிறார் மாறனின் மனைவி சுந்தரியாக நடித்திருக்கும் அபர்ணா பாலமுரளி. இவருக்கு சொந்தமாக பேக்கரி முதலாளியாக வேண்டும் என்பது ஆசை. இவ்விருவரும் ஒருவருக்கொருவர் துணையாக இருந்து எப்படி வெற்றி வானில் பறந்தார்கள் என்பதை ஷாலினி உஷா தேவி உடன் இணைந்து திரைக்கதை அமைந்திருக்கும் சுதா கொங்கரா.

தன் சொந்த ஊரான சோழவந்தான் க்கு மின்சாரம் கொண்டு வரவும் அந்த ஊரில் ரயில்கள் நின்று செல்ல அரசிற்கு மனு மேல் மனு போட்டு நேர்மையாக வாழ்பவர் மாறனின் தந்தை  ராஜாங்கம். ஊர் நன்மைக்காக மகன் எடுக்கும் சில அதிரடி முடிவுகளை தந்தைக்கும் மகனுக்கும் இடையே மனக்கசப்பு  ஏற்பட அதன் பிறகு வெளியூர் சென்று விமானம் பயிற்சி மையத்தில் இணைகிறார் சூர்யா. அதன் பிறகு தன் தந்தை உடல்நலக்குறைவால் பாதிக்கப்பட சொந்த ஊருக்கு விமானத்தில் செல்ல கையில் பணம் இல்லாத காரணத்தால் ஒரு துயர நிகழ்வு சூர்யாவை குறைந்த விலையில் விமான சேவை வழங்கும் நிறுவனத்தின் துவங்க அப்போது 20 ஆயிரம் ரூபாய் வரை விற்றுக்கொண்டிருந்த உள்நாட்டு விமான டிக்கெட்டுகளை ஆயிரம் ரூபாய்க்கு ஏன் ஒரு ரூபாய் கூட விற்க முடியும் என நம்புகிறார் சூர்யா. 

தனது முதல் விமானத்தை வாங்க வங்கி வங்கியாக ஏறி இறங்கும் சூர்யாவிற்கு ஏமாற்றமே மிஞ்சுகிறது. மேலும் விமானத்துறையில் இருக்கும் பெருநிறுவன  முதலாளி ஆக வரும் பரேஷ் ராவல் கதாபாத்திரம் சூர்யாவிற்கு முடிந்தவரை இடையூறு செய்கிறது என்றாலும் நெடுமாறன் ராஜாங்கம் எப்படி அனைத்து தடைகளையும் உடைத்து எளிய மக்களுக்கு குறைந்த விலையில் விமான சேவை வழங்கினாரா இல்லையா என்பதுதான் இப்படத்தின் நேர்த்தியான திரைக்கதை.  படத்திற்காக சுதா கொங்கரா தேர்வு செய்திருக்கும் கதாபாத்திரம் ஒவ்வொன்றும் ஒரு வகை. இப்படத்தில் வரும் கதாபாத்திரங்களான  ஊர்வசி, கருணாஸ், காளி வெங்கட், பரேஷ் ராவல் கதைக்கு ஏற்றாற்போல் தங்கள் கதாபாத்திரத்தை கச்சிதமாக நடித்திருப்பது இப்படம் ரசிகர்களிடம் நேரடியாக கொண்டு சேர்ப்பதற்கு முக்கிய காரணமாக அமைந்துள்ளது. முதல் பாதியில் பாடல்கள் கதையோடு பயணிப்பதால் பாடல்கள் படத்தின் வேகத்தை குறைக்கவில்லை. 

நிக்கே பொம்மி ரெட்டியின் ஒளிப்பதிவு கதைக்கு ஏற்றார் போல மிகச் சிறப்பாக அமைந்துள்ளது. ஜிவி பிரகாஷ் பின்னணி இசை. 

சூர்யாவின் நடிப்பு படத்தில் மிகவும் பாராட்டுக்குரியது அமைந்துள்ளது.. சூர்யாவை இதுவரை கோபமாகவும் ரொமான்ஸ் ஹீரோவாகும் பார்த்திருக்கும் நாம் இதுவரை பார்த்திராத சூர்யாவை நாம் திரையில் பார்க்க முடியும். இப்படத்தில் குடியரசுத் தலைவரைச் சந்திக்கும் காட்சி தாம்பரம் விமானப்படை தளத்தில் விமானத்தை தரையிறங்கும் காட்சியும் நம்பகத்தன்மையாக்க இல்லாமல் சினிமாவிற்கு ஏற்ற கதையாக அமைந்துள்ளது என்றாலும் படத்தை எங்குமே பாதிக்கவில்லை. 

இத்திரைப்படம் தனது நண்பர்களுடன் இணைந்து ஏர் டெக்கான் என்ற நிறுவனத்தை  தொடங்கிய  GR கோபிநாத் அவர்களின் வாழ்க்கையை தழுவி எடுக்கப்பட்டது. ஒரு ரூபாய்க்கு இந்திய விமானத்தில் பொதுமக்களை பறக்கச் செய்து இந்திய வரலாற்றையே மாற்றி எழுதிய இவர். பல விமானங்களில் இன்று முதல் வகுப்பு இரண்டாம் வகுப்பு என்ற பொருளாதார பாகுபாடுகள் இல்லை இத்தகைய பொருளாதார பிரிவினையை விமானத் துறையில் முதன் முதலில் அறிமுகப்படுத்தியவர் இவரே ஆவார். இவரின் வரலாற்றை இன்னும் சிறப்பாக பதிவு செய்திருக்கலாம் சுதா கொங்கரா. இருந்தாலும் கமர்சியலாக திரைப்படம் தோற்று விடக் கூடாது என்பதில் அதிக கவனம் செலுத்தி இத்திரைப்படத்தை எடுத்திருக்கிறார். 

இத்திரைப்படம் சூர்யா ரசிகர்களுக்கு மட்டுமல்ல ஒட்டுமொத்த இந்திய சினிமாவிற்கு இது ஒரு நல்ல பொழுதுபோக்கு சினிமாவாக இருக்கும் என்று சொல்லலாம். சுதா கொங்கரா கனவு திரைப்படமான சூரரைப்போற்று அவர் வழங்கியிருக்கும் உழைப்பும் அதனைத் தாங்கி வந்திருக்கும் சூர்யாவின் நடிப்பு படத்தை அனைத்து கோணங்களிலும் தாங்கி பிடிக்கிறது. 

இப்படத்தை சினிமா ரசிகர்கள் ட்விட்டரிலும் கொண்டாடி வருகின்றனர் நீண்ட நாட்களுக்கு பிறகு சூர்யாவின் படம் வெற்றி பெற்றிருப்பது அவரது ரசிகர்களுக்கு மட்டுமல்ல சூர்யாவிற்கும் படக்குழு விற்கும் மகிழ்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Perfect Tamil ”பார்வையாளர்களுக்கு மிகவும் நம்பகமான ஆன்லைன் செய்தி ஊடக சேனலாகும். ” வர்த்தகம், அரசியல், விளையாட்டு, பொழுதுபோக்கு, தொழில்நுட்பம் மற்றும் கல்வி மற்றும் பலவற்றைப் பற்றிய சமீபத்திய செய்திகளை தமிழ்நாடு, இந்தியா மற்றும் உலகம் முழுவதும் இருந்து தெரிந்துகொள்ளலாம். 

© 2020 Copyright PERFECT TAMIL. All rights reserved

Share this: