சொத்து குவிப்பு வழக்கில் தண்டனை காலம் நிறைவடைகிறது, பெங்களூரு சிறையில் வெளியே வருகிறார் சசிகலா உற்சாகத்தில் ஆதரவாளர்கள். பதற்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி.
வெளியே வருகிறார் சசிகலா உற்சாகத்தில் ஆதரவாளர்கள். பதற்றத்தில் எடப்பாடி பழனிச்சாமி
Advertisment

மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா அவர்கள் 1991 ஆம் ஆண்டு முதல் 1996 ஆண்டு வரை முதல்-அமைச்சராக இருந்தபோது வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவித்ததாக அவர் மீது வழக்கு தொடரப்பட்டு அந்த வழக்கானது 18 ஆண்டுகள் தொடர்ந்து நடத்தப்பட்டன. கடந்த 2014 ஆம் ஆண்டு பெங்களூரு சிறப்பு நீதிமன்றம் ஜெயலலிதா சசிகலா சுதாகரன் மற்றும் இளவரசி ஆகியோர் குற்றவாளிகள் என தீர்ப்பு வழங்கியது. ஜெயலலிதாவிற்கு 4 ஆண்டு சிறை தண்டனையும் 100 கோடி ரூபாய் அபராதம் மற்ற மூவருக்கு 4 ஆண்டுகள் சிறை தண்டனையும் 10 கோடி ரூபாய் அபராதம் விதித்தார் பெங்களூரு பரப்பன அக்ரஹாரா சிறப்பு நீதிமன்ற நீதிபதி குன்கா.

ஜெயலலிதா சொத்து குவித்ததாக வழக்கு
சிறை தண்டனை:
ஒரு மாதம் சிறையில் இருந்த நால்வரும் பின்னர் ஜாமீனில் விடுவிக்கப்பட்டனர். இதை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் மேல்முறையீடு செய்தது கர்நாடக அரசு. கடந்த 2017 ஆம் ஆண்டு உச்சநீதிமன்றமும் தண்டனையை உறுதி செய்தது. அதன்படி மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மற்றும் அவரது தோழி சசிகலா சசிகலாவின் அண்ணி இளவரசி மற்றும் சசிகலாவின் அக்கா வனிதா மணியின் இரண்டாவது மகனும் டிடிவி தினகரனின் சகோதரர் சுதாகரன் (ஜெயலலிதாவின் வளர்ப்பு மகன்) ஆகியோர் கூட்டுச்சதி போன்ற வருமானத்திற்கு அதிகமாக சொத்து குவிப்பு என நால்வருக்கும் நான்கு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டது. இதில் முதல் குற்றவாளியான ஜெயலலிதா 2016 ஆம் ஆண்டு காலமானதை அடுத்து மற்ற மூவர் 2017ஆம் ஆண்டு பிப்ரவரி முதல் பெங்களூரு பரப்பன அக்ரஹார சிறையில் சிறை தண்டனை அனுபவித்து வருகின்றனர்

வெளியே வருகிறார் சசிகலா உற்சாகத்தில் ஆதரவாளர்கள். பதற்றத்தில் அதிமுக
அபராத தொகை:
இந்த மாதம் 18 ஆம் தேதி ரூ.10 கோடி அபராத தொகையை பெங்களூரு சிட்டி சிவில் நீதிமன்றத்தில் சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர்பாண்டியன் செலுத்தினார்.இதையடுத்து சொத்து குவிப்பு வழக்கில் பெங்களூரு சிறையில் உள்ள சசிகலாவின் தண்டனை காலம் விரைவில் நிறைவடைகிறது.

TTV dinakran Sasikala
சசிகலா விடுதலை :
சசிகலாவின் தண்டனை காலம் வரும் ஜனவரி 27ஆம் தேதி முடிவடைகிறது என்று தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ் கேட்கப்பட்ட கேள்விக்கு கர்நாடக சிறைத்துறை விளக்கமளித்துள்ளது. சிறைத்துறை விதிகளின்படி இன்னும் தண்டனை காலம் 68 நாட்களே எஞ்சியுள்ள தால் நன்னடத்தை விதிகளின் படி சசிகலா விற்கு மாதம் மூன்று நாட்கள் என்ற அடிப்படையில் 43 மாதங்களுக்கு மொத்தம் 129 நாட்கள் விடுப்பு எடுத்துக் கொள்ளலாம். ஆனால் சசிகலா ஒரே முறை தன்னுடைய கணவர் நடராஜன் மறைவிற்கு மட்டும் 15 நாட்கள் பரோலில் வெளியே வந்தார். அதுமட்டுமில்லாமல் அவர் சிறையில் டிப்ளமோ இன் கன்னடம் பாடத்திட்டத்தை முடித்துள்ளார். இப்படி பல்வேறு வகையான நன்னடத்தை விதிகளின் படி சசிகலா எந்நேரமும் சிறையில் இருந்து விடுவிக்கப்படுவார் என்று சசிகலாவின் வழக்கறிஞர் ராஜா செந்தூர் பாண்டியன் தெரிவித்துள்ளார்.

சசிகலா வருகை:
தமிழகத்தில் அடுத்த ஆண்டு மே மாதம் தமிழ்நாடு சட்டமன்ற தேர்தல் நடைபெற உள்ள நிலையில் சசிகலாவின் வருகை தமிழக அரசியல் களத்தில் மிகுந்த எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது. சசிகலா சிறை செல்வதற்குமுன் பாஜகவுடன் கைகோர்த்த ஓபிஎஸ் அதிமுகவின் அரசை எதிர்த்து வாக்களித்தனர். தற்போது எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் முதல்வராக இருப்பதற்கு சசிகலா அவர்களே காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஏற்கனவே சசிகலா அதிமுகவின் பொதுச் செயலாளர் ஆக பதவி வகித்தவர். சசிகலாவின் வருகையை டிடிவி தினகரனின் அமமுக மற்றும் அதிமுக தொண்டர்களும் எதிர்பார்க்கின்றனர். சசிகலாவின் வருகைக்குப்பின் அதிமுகவில் உள்ள பல அமைச்சர்கள் சசிகலாவுடன் இணைவார்கள் என்று கூறப்படுகிறது. சசிகலாவின் வருகை தமிழக அரசியல் களம் மட்டுமல்லாமல் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி மற்றும் துணை முதல்வர் ஓ பன்னீர்செல்வம் அவர்களுக்கு ஒரு நெருக்கடியான சூழ்நிலையை உருவாக்குமா அல்லது சட்டமன்ற தேர்தலில் எத்தகைய தாக்கத்தை ஏற்படுத்தப் போகிறது என்பது அவரின் வருகைக்கு பின்பே தெரியும்

Advertisment
Advertisment

Leave a Replay

Advertisment
Advertisment

Recent Posts

Advertisment

Follow Us

Related Posts

Advertisment

Other Posts