இந்த 2026 சனிப்பெயர்ச்சி இல் மிக அதிகமான நன்மைகளை பெறக்கூடிய ராசிகளில் ரிஷபம் இருக்கிறது.இந்த பெயர்ச்சில் ஏற்படப்போகும் நன்மைகளை பற்றி தெரிந்து கொள்ளுங்கள்.
Table of Contents
சனிப்பெயர்ச்சி
இந்த விஸ்வாவசு ஆண்டில் வாக்கியப் பஞ்சாங்கத்தின்படி 06.3.2026 காலை 8.26 மணிக்கு சனிபகவான் கும்ப ராசியில் இருந்து மீனம் ராசிக்குச் சென்றார். ரிஷபம் ராசி அன்பர்களே இந்த 2026 சனிப்பெயர்ச்சி மிக அதிகமான நன்மைகளை பெறக்கூடிய ராசிகள்னு சில இருக்கிறது அதுல பிரதானமா இருக்கிறது உங்க ராசிதான் அதனால இந்த சனி பெயற்சியை நீங்கள் மகிழ்ச்சியாக ஆனந்தமாக குதுகலமாக கொண்டாடி வரவேற்கலாம். சனி பகவான் உங்களுக்கு என்னெல்லாம் கொடுக்கறதுக்கு வாய்ப்பு இருக்கு அப்படின்றத நீங்க சிந்திக்கலாம். அதை எழுதலாம் பிளான் பண்ணலாம் அதற்கான முயற்சிகளை செய்யலாம். இதெல்லாம் நீங்க கரெக்டா ப்ராப்பரா செஞ்சீங்கன்னு சொன்னா மிக அதிகமான நற்பலன்கள் உங்களுக்கு அடுத்து வரக்கூடிய 2 ½ வருஷத்தில. கிடைக்கப்போகுது அப்படின்றது உறுதி.
ஏன்னா சுப கிரகம் அசுப கிரகம் சொல்லக்கூடிய பிரிவுகள்ல் இருக்கிறது ஜோதிட சாஸ்திரத்தில. இதுல சனி பகவான் வந்து அசுப கிரகத்தினுடைய வரிசையில் வருகிறார். அப்ப சுப கிரகங்கள் வந்து தீமையை குறைவாக செய்யும். அதேபோல நன்மைகளை செய்யும்போதும் கூட அவற்றினால மிக அதிகமான நன்மைகளை செய்ய முடியாது. ஓரளவிற்கு உண்டான பலன்களை தான் கொடுக்கும். ஆனா அசுப கிரகம் ரெண்டுமே எக்ஸ்ட்ரீம் தான். கெட்ட விஷயங்களை கொடுத்தாலும் மிக அதிகமான கெடுதலை ஏற்படுத்தும். நல்ல பலன்களை கொடுத்தாலும் மிக அதிகமான நற்பலன்களை கொடுக்கும்.
ரிஷபம் ராசி பலன்கள்
ரிஷப ராசிக்கு சனி 11 ஆம் இடத்திற்கு வர்துனால அதிகமான நல்ல பலன்கள் உண்டாக போகிறது. அந்த ஸ்தானத்தினுடைய பெயரையே லாபஸ்தானம் ஆதாய ஸ்தானம் அப்படின்ற மாதிரி சொல்லம். உபஜய ஸ்தானத்தினுடைய வரிசைகளலயும் அது வரும். அதனால நீங்க வந்து லாபம் அடைய போறீங்க. ஆதாயம் பெற போறீங்க. ஜெயிக்க போறீங்க. வெற்றி பெற போகிறீர்கள் என்பதாக இந்த சனிப்பெயிற்சி உங்களுக்கு பலன் தருகிறது.
கல்வி பலன்கள்
முதலில் படிக்கிற பிள்ளைகள் நீங்க எந்த துறை எடுத்து படிக்கணும் எந்த கோர்ஸ் வந்து உங்களுக்கு வேணும் எந்த களம் நீங்க படிக்கணும் அப்படின்னு ஆசைப்படுறீங்களோ எந்த கல்லூரியில படிக்கணும் எந்த யுனிவர்சிட்டில படிக்கணும் எந்த நாடு போய் படிக்கணும் நினைக்கிறீங்களோ அதற்கு பிரகாசமான வாய்ப்பு இருக்கிறது. அப்ப நீங்க வந்து 100 சதவீதம் இந்த முயற்சிகளை செய்யலாம். அப்படி வாய்ப்பு கிடைத்து அதுல நல்லா செட்டில் ஆகி உங்களால படிக்கவும் முடியும். இப்போ நீங்க படிக்க போற படிப்பு வீணாகவே போகாது. ரிஷப ராசியில் இருக்கக்கூடிய பிள்ளைகள் இந்த கல்வி ஆண்டுல ஒரு கோர்ஸ் எடுத்து ஒரு இடத்துல ஜாயின் பண்றீங்கன்னா என்ன படிக்கிறீங்களோ அதே வேலையை செய்றதுக்கான வாய்ப்பு எதிர்காலத்தில் உங்களுக்கு கிடைக்கும்.
இந்த படிப்பை வந்து நல்லபடியா உங்களால கம்ப்ளீட் பண்ண முடியும். ஏற்கனவே படிப்பு சம்பந்தமா தடை ஆயிடுச்சு டிஸ்கண்டினியூ பண்ணி இருக்கீங்க ஆனா தொடர்ந்து படிக்கணும்ன்ற விருப்பம் இருக்குன்னு சொன்னா உங்களுக்கெல்லாம் அந்த வாய்ப்பு கிடைக்கும். படிப்பு வந்து தடைப்படுகிறதுன்னா குடும்ப சூழல் காரணமா இருக்கலாம். சில பேருக்கு உடல் உபாதை காரணமா இருக்கலாம். சில பேருக்கு வேறு பிரச்சனைகள் இருக்கலாம். எதுவாக இருந்தாலும் அது சரியாகி உங்களால படிப்பை தொடர முடியும். உத்தியோகஸ்தர்கள். நீங்க இதற்கு முன்னாடி கேட்டு கேட்டு கூட
ஊதிய உயர்வு பலன்கள்
உங்களுக்கு வந்து கிடைக்காத ஊதிய உயர்வு அல்லது உத்தியோக உயர்வு ப்ரமோஷன் இப்போ கேட்காமலேயே கிடைக்கக்கூடிய வாய்ப்பு இருக்கிறது. ஒரு ஆபீஸ்ல ப்ரமோஷனுக்கான ஒரு காலம் வந்திருக்கிறது அப்படின்னு சொன்னா சில பேர பரிந்துரைப்பாங்க. சில பேருடைய பெயர்கள் அங்க இருக்கும் இல்லையா அப்போ ரிஷப ராசி அன்பர்களுடைய பெயர் வந்து அங்க பிரதானமா இருக்கும். அதனால உங்களுக்கு இந்த ப்ரமோஷன் இன்கிரிமெண்ட் போன்ற விஷயங்கள் எல்லாம் தாராளமா வந்து சேரும்.
வேலைவாய்ப்பு பலன்கள்
வேலையே இல்ல அப்படின்னு சொல்லக்கூடியவர்களுக்கு ஏதோ ஒரு வேலை கிடைச்சா போதும் எனக்கு அப்படின்னாலும் கூட நல்ல வேலையாவே கிடைச்சிரும். ரொம்ப தூரம் குடும்பத்தை விட்டு தள்ளி எங்கேயோ தனியா இருந்து வேலை பார்க்கறவங்களுக்கு உங்க வீட்டு பக்கத்திலயே நீங்க வீட்டில இருந்து வேலைக்கு போயிட்டு வர மாதிரியான உத்தியோகம் கிடைக்கும். இல்லைன்னு சொன்னா உங்கஃபேமிலிய நீங்க இருக்கிற இடத்துக்கு கூட்டிட்டு போறதுக்கான ஒரு வாய்ப்பு இப்போ கிடைக்கும். அதனால உத்தியோகஸ்தர்களுக்கு இது பொற்காலம்னு சொல்லலாம். பிசினஸ் பண்ணக்கூடிய ரிஷப ராசி அன்பர்களுக்கு கடன் சுமை அதிகமா இருந்தா நல்ல வரவு வந்து கடனை அடைச்சிட முடியும்.
தொழில் முன்னேற்றம் பலன்கள்
வேலையாட்கள் ஒத்துழைக்காம இருந்தாங்க அப்படின்னு சொன்னா இப்போ நல்ல ஒத்துழைப்பானது கிடைக்க பெற்று அவங்களால உங்களுடைய அந்த பிசினஸ் வந்து நல்லா வரும் அப்படின்ற மாதிரி விஷயங்கள் இருக்கிறது. உங்களுடைய பிசினஸ் சம்பந்தமா அரசு அங்கீகாரம் கிடைக்கிறதுல கொஞ்சம் பிரச்சனை இருந்தது. போதிய அளவிற்கு உள்கட்டமைப்புஅல்லது வந்து உங்களுக்கு இந்த கரண்ட் மின்சாரம் வேணும் மிஷனரி சம்பந்தமான விஷயங்கள் இதெல்லாம் நிறைய தடைகள் குழப்பங்கள் இருந்தது சீராக கிடைக்காம இருந்தது அப்படின்னு சொன்னா இதெல்லாம் இப்ப நல்லா கிடைக்க போகுது அப்படின்றது சாதகமா இருக்கிறது. அதனால பிசினஸ் பண்றவங்களுக்கு இது நல்ல காலம். புதுசா நான் பிசினஸ் பண்ணலாமான்னு யோசிச்சிட்டு இருக்க கூடியவர்களுக்கு இது தைரியமாக முடிவை எடுக்கக்கூடிய ஒரு காலமாய் இருக்கிறது. அதனால சொந்த கால்ல நிக்கணும் சுயதொழில் வியாபாரம் பண்ணனும்னு சொன்னா அதை வந்து நீங்க உறுதியாக அதுல இறங்கலாம். பெரிய அளவுக்கு இன்வெஸ்ட் பண்ண போறீங்கன்னு சொன்னா சுய ஜாதகத்தை ஒருமுறை பார்த்துறது நல்லது. பொதுவா உங்களுக்கு ரொம்ப சாதகமா இருக்கிறது.
திருமண வாழ்க்கை பலன்கள்
திருமண விஷயங்கள் மிகச் சிறப்பாக கை கூட போகிறது. கல்யாணம் நடந்தாலே போதும் அப்படின்னு இந்த காலத்துல நிறைய பேருக்கு இருக்கும். ஆனா ரிஷப ராசியில் இருக்கக்கூடியவர்களுக்கு பிடிச்ச மாதிரி கல்யாணம் நடக்கும். எனக்கு இப்படித்தான் மனைவி வேணும்னு சொல்லி ஒரு பையன் ஆசைப்பட்டு காத்துட்டு இருக்காங்க சில வருடங்களா அப்படின்னு சொன்னா அதே மாதிரி ஒரு பொண்ணு கிடைப்பாங்க. அது மாதிரி பொண்ணும் கூட கணவன் சம்பந்தமா கொஞ்சம் இப்படி எல்லாம் இருக்கணும் அப்படில்லாம் இருக்கணும்னு சொல்லி நீங்க ஒரு ஆசை வச்சிருக்கீங்க அப்படின்னு சொன்னா அதே மாதிரி பையன் கிடைக்கறதுக்கான அம்சம் இருக்கிறது. கணவன் மனைவி பிருந்து இருந்தாங்கன்னா ஒன்று சேர்ந்துருவீங்க. புத்திர பேரு சம்பந்தமான யோகமும் கூட கிடைக்கக்கூடிய அம்சம் சிறப்பாக இருக்கிறது. திருமண வாழ்க்கை நல்லபடியா இருக்கும்.
குடும்ப பொருளாதாரம் பலன்கள்
குடும்ப வாழ்க்கையை நடத்துவதற்கான பொருளாதாரம் மிகச் சிறப்பாக கிடைக்க போகிறது. பண பற்றாக்குறை, , பணத்தடை, கடன் இதெல்லாம் அறவே முடிஞ்சிரும். கொஞ்சம் கொஞ்சமாவாச்சும் அந்த கடன் எல்லாம் கட்டி முடிச்சு அடைச்சிருவீங்க. பண வரவு வந்து ஒன்றுக்கு மேற்பட்ட வழியிலிருந்து வரக்கூடிய யோகம் இருக்கிறது. கவனமா இருக்க வேண்டிய விஷயம் இருக்கான்னா இருக்கு. அப்போ நீங்க யாரோட சேர்ந்து என்ன பண்றீங்க அப்படின்றதுல கவனமா இருக்கணும். தனிப்பட்ட முறையில உங்க படிப்பு ,பிசினஸ் நல்லா இருக்கும் வேலை நல்லா இருக்கும். ஆனா புதிய நபர்களோடு நீங்க சேர்ந்து ஏதாவது செய்யறதா இருந்தா ரொம்ப கவனமாக இருக்கணும். 11 ஆம் இடம் கொஞ்சம் ஆசை பேராசையை கொடுக்கும். அதற்கான நபர்களை நண்பர்களாக அறிமுகப்படுத்தும். அப்ப நீங்க வந்து யாரோடு சேர்ந்து இருக்கிறீங்க அப்படின்றது முக்கியம்.
பழக்க வழக்கங்கள்
அதிகமான பணம் வரும்போது ஒரு சில நேரத்தில கொஞ்சம் ஒழுக்க கேடு தேவையில்லாத பழக்க வழக்கங்கள் மீது நாட்டங்கள் வர்துக்கான வாய்ப்பு அதை கொடுக்கும். ஏன்னா நிறைய பணம் வருது நிறைய டைமும் இருக்கும். உங்க வேலை எல்லாம் பார்த்துக்கறதுக்கு வந்து வேலையாட்கள் எல்லாம் இருப்பாங்க. அப்போ நீங்க என்ன பண்ணுவீங்கன்னா சில சமயத்தில இதுபோல சிற்றின்பங்களுக்குள்ள போறதுக்கான வாய்ப்பு இருக்கிறது. அதுல கவனமா இருக்கணும். புது நபர்கள் புதிய நண்பர்கள் வழக்க வழக்கங்கள் இதுல கவனமா இருந்துட்டீங்கன்னு சொன்னா இந்த சனி பெயிற்சி அற்புதமா இருக்கும்.
பரிகாரங்கள்
இந்த சனிபெயிற்சி முழுமையான நற்பலன் தருவதற்கு என்ன பண்ணனும் அப்படின்னு சொன்னா நீங்க பெருமாள் கோவில்ல தாயாரை வழிபடணும். எந்த ஒரு பெருமாள் கோவில் போனாலும் தாயார சன்னதின்னு இருக்கும். அவங்கதான் சாக்ஷாத் மகாலட்சுமி. அவங்கள வந்து முடியும் போதெல்லாம் போய் தரிசனம் பண்றீங்க அப்படின்னு சொன்னா, கட்டாயம் உங்களுக்கு நல்ல பலன் கிடைக்கும். வீட்டையும் லட்சுமி கடாட்சம் இருக்கும் படியாக நன்றாக வைத்து கொள்ளணும். வெள்ளிக்கிழமை நாட்கள்ல வச்சிருப்போம் இல்லையா அப்படி அனுதினமும் வைத்திருக்கணும். அப்படி வைக்கும் போது இந்த சனிப்பெயற்சி அற்புதமா இருக்கும்.
