நடிகர் ரஜினிகாந்தை போயஸ்கார்டன் இல்லத்தில் சந்தித்து பேசியதாக அறிக்கை ஒன்றை வெளிட்டு உள்ளார் சசிகலா. மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வீடு திரும்பிய ரஜினிகாந்த்தை அவரது இல்லத்தில் சந்தித்து நலம் விசாரித்தனர் சசிகலா, பிப்ரவரி மாதம் சிறையில் இருந்து விடுதலையான சசிகலாவிற்கு கொரோனா தொற்று ஏற்பட்டு மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். அப்போது சசிகலாவின் உடல் நலம் பற்றி ரஜினிகாந்த் கேட்டறிந்தார். சென்னை திரும்பிய சசிகலாவை பல அரசியல் தலைவர்கள் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர்.
இந்த நிலையில் இன்று நடிகர் ரஜினிகாந்த் வீட்டிற்கு சென்ற சசிகலா அவரது உடல் நலம் குறித்து விசாரித்தார். தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்துக்கு பூங்கொத்து கொடுத்து வாழ்த்து கூறினார். இந்த சந்திப்பின் போது ரஜினிகாந்தின் மனைவி லதா ரஜினிகாந்த் உடனிருந்தார்.