ரஜினிகாந்த் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல

ரஜினிகாந்த் அரசியலில் குதிக்கிறார் #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல  என்ற தனது அரசியல் நிலைப்பாட்டை வெளிப்படுத்தியுள்ளார்

கடந்த 25 ஆண்டுகளாக தான் அரசியலில் குதிக்கப் போகிறேன் குதிக்கப் போகிறேன் என்ற கோஷத்துடன் வலம்வந்த நடிகர்  ரஜினிகாந்த் தற்போது ஜாதி மதம் இல்லாத ஆன்மீக அரசியல் தன் களமிறங்க உள்ளதாகவும் வரும் 31ம் தேதி அதற்கான அறிவிப்பு வெளியிடப்படும் என்றும் ஜனவரியில் கட்சி தொடங்க உள்ளதாகவும் டுவிட்டர் வாயிலாக தமிழ்நாட்டு மக்களுக்கு வெளிப்படுத்தியுள்ளார்.

ட்விட்டரில் பதிவிட்ட ரஜினி வரும் சட்டமன்ற தேர்தலில் களமிறங்கி மக்களின் பேராதரவுடன் வெற்றி பெற்று ஜாதி மதம் ஊழலற்ற ஆன்மீக அரசியலில் மக்களுக்கு சேவை செய்ய இருப்பதாகஅறிவித்தார்.

#மாத்துவோம்_எல்லாத்தையும்_மாத்துவோம்

ட்விட்டரில் ரஜினியின் இந்த #இப்போ_இல்லேன்னா_எப்பவும்_இல்ல  என்ற Hashtag இந்திய அளவில் முதல் இடத்தைப் பிடித்துள்ளது.

தற்போது ரஜினியின் அரசியல் நிலைப்பாடு இந்தியா முழுக்கவே பேசுபொருளாக உள்ளது பல அரசியல் கட்சிகள் ரஜினியின் அரசியல் வருகையால் கலக்கத்திலும் உள்ள நிலையில் தற்போது அதனை உறுதிப்படுத்தும் விதமாக பத்திரிகையாளர்கள் சந்திப்பு ரஜினி இன்று தனது போயஸ் இல்லத்தில் நடத்தினார்.

 

அப்பொழுது தனது அரசியல் நிலைப்பாடு பற்றிய செய்தியையும் தான் நடித்து வரும் அண்ணா திரைப்படம் இன்னும் 40 சதவீதம் பணிகள் முடிக்கப்படாமல் இருப்பதால் அதை முடித்து அடுத்த ஜனவரி மாதம் முதல் முழு அரசியல்வாதியாக இறங்குவதாகவும்.  தமிழகத்தின் தலையெழுத்தை மாற்ற வேண்டிய நாள் வந்துவிட்டது எனவும்

தேர்தலில் நான் வெற்றி பெற்றால் அது மக்களின் வெற்றி – தோல்வி அடைந்தால் அது மக்களின் தோல்வி என்று கூறினார்.

 

மேலும் தமிழ்நாட்டு மக்களுக்காக எனது உயிர் போனாலும் நான் சந்தோஷப்படுவேன். கொடுத்த வாக்கிலிருந்து நான் ஒருபோதும் மாறமாட்டேன் என்றும் உறுதி அளித்தார்

 வரும் சட்டமன்ற தேர்தலில் ரஜினி கூட்டணி அமைத்து ஆட்சியைப் பிடிப்பாரா அல்லது தன்னிச்சையாக போட்டியிட்டு ஆட்சியை பிடிப்பாரா என்பதை மக்கள் தான் முடிவு செய்யப் போகிறார்கள். வரும் சட்டமன்றத் தேர்தலுக்கு இன்னும் 4 மாதங்களே உள்ள நிலையில் ரஜினியின் இந்த அரசியல் அறிவிப்பு பல அரசியல் கட்சிகள் இடையே குழப்பத்தை மேலும் ஏற்படுத்தியுள்ளது ஏனெனில் ஏற்கனவே நடிகர் கமலஹாசன் அரசியல் கட்சி ஆரம்பித்து செயல்பட்டு வரும் நிலையில் தற்போது ரஜினியின் இந்த அறிவிப்பால் வாக்குகள் அதிகமாக சிதறும் வாய்ப்பு உள்ளதாக அரசியல் நோக்கர்கள் கருத்துத் தெரிவிக்கின்றனர்