
- perfecttamil
- November 30, 2020
- 3:35 pm
- Rajinikanth, rajinikanth latest news, rajinikanth political party, ரஜினி, ரஜினிகாந்த்
சட்டப்பேரவை தேர்தல் ஒட்டி தமிழகம் பரபரப்பாக நகர்ந்து கொண்டிருக்கும் நிலையில் ரஜினிகாந்த் மக்கள் மன்ற நிர்வாகிகளுடன் நடிகர் ரஜினிகாந்த் இன்று ஆலோசனை நடத்தினார். சென்னை ராகவேந்திரா மண்டபத்தில் காலை 9 மணிக்கு இந்த ஆலோசனைக் கூட்டம் நடைபெற்றது. மாவட்ட செயலாளரை சந்தித்து பேசிய ரஜினிகாந்த் தனது அரசியல் நிலைப்பாடு குறித்து விவாதித்ததாக தெரிகிறது. தனிமனித இடைவெளி உள்ளிட்ட கொரோனா பாதுகாப்பு நடவடிக்கைகளை பின்பற்றி இந்த கூட்டம் நடைபெற்றது இந்த கூட்டத்திற்கு பாதுகாப்பு வழங்குமாறு ஏற்கனவே ரஜினி மக்கள் மன்ற நிர்வாகிகள் சார்பில் காவல் துறைக்கு கடிதம் வழங்கப்பட்டது. மாவட்ட செயலாளர்களை தவிர வேறு யாரும் கூட்டத்தில் பங்கேற்க அனுமதிக்கப்படவில்லை என ரஜினி மக்கள் மன்றம் தெரிவித்துள்ளது. சில நாட்களுக்கு முன்பு தனது பெயரில் சமூக வலைத்தளங்களில் வெளியான கடிதம் குறித்து ரஜினிகாந்த் மன்றக் கூட்டத்தில் ஆலோசித்தார்.

வரும் சட்டமன்ற தேர்தலில் கட்சி தொடங்குவது மற்றும் கட்சி தொடங்கினால் ஏற்படும் சாதக பாதகங்கள் குறித்து மன்ற உறுப்பினர்களும் கேட்டறிந்தார்.உடனடியாக கட்சி ஆரம்பிக்க வேண்டுமென மன்ற உறுப்பினர்கள் ரஜினிகாந்த் இடம் கோரிக்கை வைத்தனர். மேலும் கூட்டத்தில் பேசிய ரஜினிகாந்த் பணம் சம்பாதிப்பதாக இருந்தால் யாரும் இதில் பங்கு கொள்ள வேண்டுமெனவும் மக்களுக்கு சேவை செய்வதற்காகவே கட்சியை ஆரம்பிக்க உள்ளதாகவும் தெரிவித்தார்.மேலும் மன்ற உறுப்பினர்களின் செயல்கள் திருப்தி அளிக்காத வகையாக உள்ளது என்று கூட்டத்தில் விவாதங்கள் செய்யப்பட்டது.

இதனைத் தொடர்ந்து பத்திரிகையாளர்கள் கேள்விக்கு பதிலளித்த ரஜினிகாந்த் மாவட்ட செயலாளர்களுடன் நடைபெற்ற கூட்டத்தில் கட்சி தொடர்பாக பலவற்றை விவாதித்தோம், நான் எந்த முடிவு எடுத்தாலும் அதற்கு கட்டுப்படுவோம் என மன்ற நிர்வாகிகள் தெரிவித்துள்ளனர் என கூறினார் மேலும் தன்னுடைய அரசியல் நிலைப்பாட்டை விரைவில் வெளியிடுவதாக அறிவித்தார்
ரஜினி அரசியல் நிலைப்பாடு இன்று மாலை அல்லது நாளையோ அறிவிக்கப்படலாம் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஒருவேளை ரஜினி கட்சியை ஆரம்பித்தார் ஜனவரி மாதம் முதல் அரசியல் பணிகள் நடக்கும் என மன்ற நிர்வாகிகள் நம்பிக்கையோடு தெரிவித்தார்.
ஒருவரை ரஜினி கட்சியை தொடங்கினாள் அது ஆளுமா அதிமுக மற்றும் எதிர்க்கட்சியான திமுகவுக்கு எந்த வகையில் போட்டியாக இருக்கும் அல்லது பாஜகவின் கைப்பாவையாக ரஜினி செயல்படுவார என வரும் நாட்களில் தெரியவரும்.