அதிமுக முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி
தமிழக அரசு வேலை வாங்கித்தருவதாக ஆவின் உள்ளிட்ட அரசின் பல்வேறு துறைகளில் 3 கோடி ரூபாய் பெற்று பணியும் வழங்காமல், பணத்தையும் திருப்பி கொடுக்காமல் ஏமாற்றியதாக விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவில் அதிமுக முன்னாள் பால்வளத்துறை அமைச்சர் கே.டி.ராஜேந்திரபாலாஜி, என்.பாபுராய், வி.எஸ்.பலராமன், எஸ்.கே.முத்துப்பாண்டியன் ஆகியோர் மீது வழக்குப் பதிவு செய்யப்பட்டது. இதில் ஜாமீன் கிடைக்காத நிலையில் ராஜேந்திர பாலாஜி தலைமறைவாகி இருந்தார்.
8 தனிப்படைகள்
இந்த நிலையில் 8 தனிப்படைகள் அமைக்கப்பட்டு இவரின் வங்கி கணக்கு முடக்கப்பட்டு, லுக் அவுட் நோட்டீஸ் வழங்கப்பட்டுள்ளது. திருப்பூர், ஓசூர் அல்லது கர்நாடகாவில் இருக்கலாம் என்று போலீசார் தரப்பிற்கு தகவல் சென்றுள்ளது 3 வாரமாக. தேடப்பட்டு வந்த நிலையில் கர்நாடகாவில் உள்ள ஹாசன் மாவட்டத்தில் கைது செய்யப்பட்டு உள்ளார்.
ராஜேந்திர பாலாஜி. தலைமறைவு
ராஜேந்திர பாலாஜி. தலைமறைவாக இருக்கும் போதே உச்ச நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெறலாம் என்று மனுதாக்கல் செய்தார். ஆனால் அதற்கு முன்பாக போலீசார் ராஜேந்திர பாலாஜியை கைது செய்ய திட்டமிட்டனர். சாமி பட பாணியில் காரில் மாறி மாறி, வேறு வேறு இடங்களில் தங்கி தப்பித்து வந்தார். கடைசியாக திருப்பத்தூரில் கூட அவர் பதுங்கி இருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. ஆனால் அங்கு தேடிய போதும் கண்டுபிடிக்கப்படவில்லை. அவரின் உறவினர்களின் போன் எண்களை சைபர் கிரைம் போலீசார் சோதனை செய்து வந்தனர்.
சுற்றி வளைத்த போலீஸ்
இந்த நிலையில் போலீசார் வாகனத்தை பார்த்ததும் காரில் ஏறி அவர் தப்ப முயன்று இருக்கிறார். ஆனால் போலீஸ் அவரை சுற்றி நின்று அவரின் கார் அப்படியே வளைக்கப்பட்டது. இதனால் அவரால் எங்கும் செல்ல முடியவில்லை. கடைசியில் போலீசாரிடம் சரண் அடையும் நிலை ஏற்பட்டது. அங்கே கைது செய்யப்பட்ட அவர் இன்று சென்னை அழைத்து வரப்ப இருக்கிறார்