தொடர்ந்து 4 வது முறையாக பீகார் முதலமைச்சராக பதவி ஏற்கிறார் நிதிஷ்குமார்

- perfecttamil
- November 16, 2020
- 11:54 am
தொடர்ந்து 4 முறையாக பீகார் முதலமைச்சராக பதவி ஏற்கிறார் ஐக்கிய ஜனதா தளம் கட்சித் தலைவர் நிதிஷ்குமார். நடந்து முடிந்த பீகார் சட்டமன்ற தேர்தலில் ஆளுங்கட்சியான ஐக்கிய ஜனதா தளம் தலைவர் நிதீஷ் குமார் யாதவ் கட்சி பாரதிய ஜனதா கட்சியுடன் கூட்டணி அமைத்து 243 தொகுதிகளில் 125 தொகுதிகளில் வெற்றி பெற்று பெரும்பான்மையுடன் ஆட்சி அமைக்கிறது. இதில் 110 இடங்களில் போட்டியிட்ட பாஜக 74 இடங்களையும், 115 ல் போட்டியிட்ட ஐக்கிய ஜனதா தளம் 43 இடங்களையும் மட்டுமே வென்றது.
எந்தக் கட்சிக்கும் தனிப்பெரும்பான்மை கிடைக்காததால் பீகார் முதலமைச்சராக நிதிஷ் குமார் தொடர்வார் என பாஜக அறிவித்ததை அடுத்து தேசிய ஜனநாயக கட்சி கூட்டத்தில் நிதிஷ் குமார் ஒருமனதாக சட்டமன்ற குழு தலைவராக தேர்ந்தெடுக்கப்பட்டார்.
அதனைத் தொடர்ந்து கூட்டணியில் உள்ள எம்எல்ஏக்கள் ஆதரவுடன் ஆளுநர் பாகு சவுகானை சந்தித்து மாநிலத்தில் புதிய அரசு அமைப்பதற்கான கோரிக்கையை முன் வைத்தார் நிதிஷ் குமார். மேலும் பாரதிய ஜனதா கட்சிக்கு இரண்டு துணை முதலமைச்சர் பதவி மற்றும் அமைச்சரவையில் பாதிக்குமேல் இடங்கள் கிடைத்தது வாய்ப்பு உள்ளது.

பதவியேற்பு விழா முடிந்தவுடன் இன்று அமைச்சரவைக் கூட்டம் நடைபெறும், அதனைத் தொடர்ந்து சட்டமன்றக் கூட்டத்தைக் கூட்டுவது தொடர்பாக முடிவு எடுக்கப்படும்.

இந்த தேர்தலில் லல்லு பிரசாத் யாதவின் மகனும் ராஷ்டிரிய ஜனதா தளம் (ஆர்ஜேடி) கட்சியின் தலைவர் தேஜஷ்வி யாதவ் 75 இடங்களைப் கைப்பற்றியது. ராஷ்டிரிய ஜனதா தளம், காங்கிரஸ் மற்றும் இடதுசாரி கட்சிகளை உள்ளடக்கிய ஐக்கிய முற்போக்கு கூட்டணி 110 சட்டமன்ற இடங்களை கைப்பற்றியது. ராஷ்டிரிய ஜனதா தளம் தேசிய ஜனநாயக கூட்டணிக்கு ஒரு கடுமையான போட்டியை வழங்கியது.
ஆனால் இந்த தேர்தலில் காங்கிரஸ் கட்சியின் மோசமான தோல்வி ராஷ்ட்ரிய ஜனதா தளத்தை ஆட்சியில் அமர வைக்காமல் போனது ஐக்கிய முற்போக்கு கூட்டணிக்கு பின்னடைவாக அமைந்தது.

69 வயதான நித்திஷ்குமார் பீகார் முதலமைச்சராக இதுவரை 14 ஆண்டுகள் 82 நாட்கள் பணியாற்றியுள்ளார், இரண்டு தசாப்தங்களில் ஏழாவது முறையாக மாநில முதலமைச்சராக பதவியேற்கிறார்.இவர் 2000 ஆம் ஆண்டில் முதல் முறையாக பீகார் முதல்வராக பதவியேற்றார்.
தற்போது, பீகார் மாநிலத்தின் முன்னாள் முதல்வர் ஸ்ரீகிருஷ்ணா சின்ஹா, 17 ஆண்டுகள் 52 நாட்கள் முதலமைச்சராக இருந்து சாதனையை படைத்துள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.