நெருங்கும் நீவர் புயல் ரெட் அலர்ட் எச்சரிக்கை தாங்குமா தமிழகம்?

- perfecttamil
- November 23, 2020
- 10:49 am
நீவர் புயல் ரெட் அலர்ட் எச்சரிக்கை
நேற்று முன்தினம் தெற்கு மற்றும் தென்மேற்கு வங்கக்கடலில் மத்திய பகுதியில் உருவான குறைந்த காற்றழுத்த தாழ்வு பகுதி நேற்று தென்கிழக்கு மற்றும் தென்மேற்கு வங்கக் கடலில் குறைந்த காற்றழுத்தத் தாழ்வுப் பகுதியாக நிலைகொண்டு இன்று காற்றழுத்த தாழ்வு மண்டலம் ஆக வலுப்பெற்றுள்ளது. இதனை தொடர்ந்து அடுத்து 24 மணி நேரத்தில் புயலாகவும் வலுப்பெற்று வடமேற்கு திசையில் நகர்ந்து வரும் 25ஆம் தேதி பிற்பகலில் காரைக்கால் மற்றும் மாமல்லபுரம் இடையே புயல் கரையைக் கடக்கும் என சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
இப்புயல் நீவர் என்று பெயரிடப்பட்டுள்ளது. இதனால் தமிழகத்தில் பல மாவட்டங்களில் ரெட் அலர்ட் எச்சரிக்கை விடப்பட்டுள்ளது.
காற்றழுத்த தாழ்வு மண்டலம் தற்போது நிலையில் சென்னையில் இருந்து சுமார் 750 கிலோ மீட்டர் தொலைவிலும் புதுச்சேரியிலிருந்து 700 கிலோமீட்டர் தொலைவிலும் இது நிலைகொண்டுள்ளது.இதனால் கடலோர மாவட்டங்கள் நாளையும் நாளை மறுநாளும் அதிக கனமழை பெய்யும் சுமார் 20 லிருந்து 25 சென்டி மீட்டர் வரை கன மழை பெய்யக் கூடும் என எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. நாகை, பாம்பன், எண்ணூர், கடலூர் ஆகிய துறைமுகங்களில் 3-ம் எண் புயல் எச்சரிக்கை கூண்டு ஏற்றப்பட்டுள்ளது. நீவர் புயல் காரணமாக தேசிய பேரிடர் மேலாண்மை பல குழுக்களாக பிரிக்கப்பட்டு டெல்டா மாவட்டங்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டுள்ளது.

கனமழை எச்சரிக்கை
இதன் காரணமாக இன்று நாகப்பட்டினம் தஞ்சாவூர் திருவாரூர் ஆகிய மாவட்டங்களில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும் என்றும் தென்மேற்கு மற்றும் கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 45 முதல் 55 கிலோ மீட்டர் வேகத்தில் காற்று வீசக்கூடும் என்றும் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
நாளை நவம்பர் 24 நாகப்பட்டினம், தஞ்சாவூர், திருவாரூர், புதுக்கோட்டை, கடலூர், அரியலூர், பெரம்பலூர் மற்றும் காரைக்கால் ஆகிய பகுதிகளில் இடியுடன் கூடிய கன மழையும் சென்னை திருவள்ளூர் காஞ்சிபுரம் ராமநாதபுரம் சிவகங்கை திருச்சி கள்ளக்குறிச்சி விழுப்புரம் வேலூர் திருவண்ணாமலை ராணிப்பேட்டை திருப்பத்தூர் புதுச்சேரி ஆகிய மாவட்டங்களில் கனமழை பெய்யக்கூடும் என்று தெரிவித்துள்ளது.
இதனைத் தொடர்ந்து வரும் 25ம் தேதி நாகப்பட்டினம் தஞ்சாவூர், திருவாரூர், கடலூர், கள்ளக்குறிச்சி, விழுப்புரம், திருவண்ணாமலை, செங்கல்பட்டு, அரியலூர், பெரம்பலூர், புதுவை மற்றும் காரைக்கால் பகுதிகளில் ஒரு சில இடங்களில் அதிக மழையும் திருச்சி, நாமக்கல், கரூர், ஈரோடு, தர்மபுரி, சேலம், கிருஷ்ணகிரி, சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பத்தூர், ராணிப்பேட்டை, வேலூர், காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், புதுக்கோட்டை மற்றும் சென்னையில் ஒரு சில இடங்களில் இடியுடன் கூடிய கனமழை பெய்யும் என்றும். ஏனைய வட மாவட்டங்களில் லேசானது முதல் மிதமானது வரை மழை பெய்யக்கூடும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இதனால் தென்மேற்கு மற்றும் தமிழக கடலோர பகுதிகளில் சூறாவளி காற்று மணிக்கு 55 முதல் 65 கிலோ மீட்டர் வேகத்திலும் இடையிடையே 75 கிலோ மீட்டர் வேகத்தில் வீசக்கூடும். இதனால் மீனவர்கள் யாரும் கடலுக்கு செல்ல வேண்டாம் என்றும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
நீவர் புயல் காரணமாக தமிழக அரசு மற்றும் பேரிடர் மேலாண்மை ஆகியவை தேவையான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது.