
-
perfecttamil
- December 5, 2020
- 3:21 pm
- ind vs aus t20, Natarajan, natarajan wickets, natrarajan t20 wickets, virat kohli, நடராஜன்
நடராஜன் இந்தியர்கள் மனதில் மட்டுமல்ல விராத் கோலியின் மனதிலும் நங்கூரம் போட்டு அமர்ந்திருக்கிறார் தனக்கு கிடைத்த வாய்ப்பை.

ஆஸ்திரேலியாவில் சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இந்திய கிரிக்கெட் அணி 3 ஒருநாள் போட்டிகள் கொண்ட தொடரில் 2க்கு 1 என்ற கணக்கில் தொடரை கைப்பற்ற தவறியது. இதில் 3 வது ஒருநாள் போட்டியில் தமிழக வீரர் நடராஜன் முதல் முதலாக அறிமுகமாகி 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தனது வெற்றிப் பயணத்தை தொடங்கினார்.
இதனைத்தொடர்ந்து நேற்று நடந்த முதலாவது டி20 போட்டியில் நடராஜன் அறிமுகமானார். இப்போட்டியில் சிறப்பாக பந்து வீசிய நடராஜன் நான்கு ஓவரில் 30 ரன்கள் கொடுத்து 3 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு வழிவகுத்தார். இப்போட்டியில் இந்திய அணி 11 ரன்களில் பெற்றது. அவருடைய பந்துவீச்சு திறமையை கண்ட இந்திய அணியின் கேப்டன் விராட்கோலி நடராஜனை புகழ்ந்து தள்ளியுள்ளார்.
Great debut performance from Natarajan! #AUSvIND pic.twitter.com/j7MvrDc4ha
— cricket.com.au (@cricketcomau) December 5, 2020

போட்டி முடிந்த பின் செய்தியாளர்களின் கேள்விக்கு பதிலளித்த விராட் கோலி நடராஜன் இந்திய T20 அணியின் சொத்து எனவும் சரியான நேரங்களில் சிறப்பாக பந்துவீசி விக்கெட்டுகளை விழுவது நடராஜன் வல்லவராகவும் இருக்கிறார்.அவர் ஒவ்வொரு முறையும் அவருடைய திறமையை நிரூபித்துக் கொண்டே இருக்கிறார் என பாராட்டியுள்ளார்.
விராட் கோலி இப்படி நடராஜனை புகழ்ந்து தள்ளியுள்ளது சமூக வலைத்தளங்களை நடராஜனை கொண்டாடி வருகின்றனர் அவருடைய ரசிகர்கள் மற்றும் கிரிக்கெட் ஆர்வலர்கள்.
எப்படியோ நடராஜன் இந்திய அணியில் இடம்பிடித்துள்ளார், இன்னும் பல ஆண்டுகள் அவர் இந்திய அணிக்காக விளையாடுவார் என்பதில் எந்தவித சந்தேகமும் இல்லை.