தளபதி விஜய் 2020 ஆண்டில் ட்விட்டரின் முதல் இடத்தை பிடித்தார்

தளபதி விஜய்

தளபதி விஜய் டுவீட் 2020ம் ஆண்டின் அதிகம் ரிடுவீட்  செய்யப்பட்ட டுவீட் பட்டியலில் முதல் இடத்தை பிடித்தது.

ட்விட்டர் இந்தியா ஒவ்வொரு ஆண்டும் ட்விட்டரில் அதிகம் மேற்கோள் காட்டப்பட்ட டுவீட்,  அதிகம் லைக் செய்யப்பட்ட டுவீட்,  அதிகம் ரிடுவீட் செய்யப்பட்ட டுவீட், பெரும்பாலான ட்வீட் செய்யப்பட்ட திரைப்பட ஹேஷ்டேக், பெரும்பாலான ட்வீட் செய்யப்பட்ட விளையாட்டு ஹேஷ்டேக், என வெளியிடும்.

இந்த 2020 ஆண்டில் கொரோனா பரவல் காரணமாக மக்கள் அனைவரும் வீட்டிலேயே முடங்கி நிலையில் பலரும் சமூக வலைத்தளங்களை அதிகம் பயன்படுத்தி வருகின்றனர். இந்நிலையில் ட்விட்டர் இந்தியா 2020 ஆம் ஆண்டில் அதிகம் கோலோச்சிய ட்வீட் , ரிட்வீட் என பல்வேறு வகையான,  பட்டியலை வெளியிட்டுள்ளது. இதில் தளபதி விஜய் ட்விட்டரில் அதிகம் ரீட்வீட் செய்யப்பட்ட ட்வீட் என்ற பெருமையை பெற்று இந்தியாவிலேயே முதல் இடத்தை பிடித்தார்.( The most Retweeted Tweet of 2020 )

இந்த ஆண்டு பிப்ரவரி மாதம் நெய்வேலியில் NLC இல் மாஸ்டர் படப்பிடிப்பு நடந்து கொண்டிருக்கும்போது வருமான வரித்துறை அதிகாரிகள் விஜயை சோதனையை செய்ய முன்வந்தனர் என்ற தகவல் பரவியதை அடுத்து தளபதி விஜயின் ரசிகர்கள் பல்லாயிரம் பேர் அங்கு திரண்டனர். இதனால் அங்கே மிகப் பெரிய சலசலப்பு ஏற்பட்டது. கூட்டத்தை கட்டுப்படுத்துவதற்கும் நிலைமை சமாளிப்பதற்கும் நடிகர் விஜய் வந்து ரசிகர்களை சமாதானப்படுத்தி அங்கே ஒரு செல்பி எடுத்து தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டார். அந்த ட்விட் இன்று தேசிய அளவில் முதலிடத்தை பிடித்துள்ளது தளபதி விஜய்க்கும் அவரது ரசிகர்களுக்கும் கிடைத்த பெருமையாக பார்க்கப்படுகிறது.

ட்விட்டரில் முதலிடம் பிடித்த விஜயை அவரது ரசிகர்கள் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர். மேலும் இந்த செய்தியை #VIJAYRuledTwitter2020 என ட்விட்டரில் மீண்டும் அவரது ரசிகர்கள் ட்ரெண்டிங்கில் கொண்டு வருகின்றனர். 

இந்த வெற்றி தளபதிக்கும் தளபதி விஜய் ரசிகர்களுக்கும் கிடைத்த வெற்றியாக அவரது ரசிகர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.