மீண்டும் புதிய புயல் எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம் பீதியில் மக்கள்

- perfecttamil
- November 26, 2020
- 8:25 pm
தமிழகம் மீண்டும் புதிய புயல் உருவாகி இருப்பதாக எச்சரிக்கும் வானிலை ஆய்வு மையம் பீதியில் மக்கள்
நீவர் புயல்
கடந்த சனிக்கிழமை வங்கக் கடலில் உருவான நீவர் புயல் அதி தீவிர புயலாக வலுப்பெற்று புதுச்சேரியில் கரையை கடந்த நிலையில் வரும் 29ஆம் தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகி இருப்பதாகவும் மேலும் இது தென் தமிழகம் நோக்கி நகர வாய்ப்பு இருப்பதாகவும், வரும் நாட்களில் இது மேலும் வலுவடைந்து தீவிர புயலாக மாறுவதற்கு அதிக காரணிகள் உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
ஏற்கனவே நீவர் புயல் காரணமாக தமிழகத்தின் கடலூர் மாவட்டம் பெரும் பாதிப்பை சந்தித்துள்ளது. நீவர் புயலின் தாக்கத்தால் சென்னையில் பல பகுதிகள் வெள்ளக்காடாக மாறியுள்ளது. மேலும் செம்பரம்பாக்கம் ஏரியின் திறப்பால் அடையாறு ஆற்றின் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டு கரையோர மக்கள் பலரும் அரசின் பேரிடர் மீட்புக் முகாம்களில் தங்க வைக்கப்பட்டுள்ளனர். மேலும் சென்னையை ஒட்டிய காஞ்சிபுரம் திருவள்ளூர் செங்கல்பட்டு உள்ளிட்ட மாவட்டங்களில் முக்கிய ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளதால் மக்களின் இயல்பு வாழ்க்கை பெரிதும் பாதிக்கப்பட்டுள்ளது. தென் மாவட்டங்களில் மிக கனமழை காரணமாக வெள்ளப்பெருக்கு ஏற்பட்டுள்ளது. மாமல்லபுரத்திற்கு காரைக்காலுக்கு நீவர் புயல் கரையைக் கடக்கும் என கூறப்பட்ட நிலையில் புதுச்சேரியில் கரையை கடந்தது.
மேலும் இச்சூழலில் மேற்கு வங்க கடலில் வரும் 29ஆம் தேதி புதிதாக காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாக இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி அடுத்தடுத்த நாட்களில் தீவிரமடைந்து மேற்கு நோக்கி நகரும் என்று கணிக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே நீவர் புயல் காரணமாக மக்கள் அனைவரும் மழை வெள்ளம் என பாதிக்கப்பட்ட நிலையில் தற்போது புதிய காற்றழுத்த தாழ்வு பகுதி உருவாகியிருப்பதால் மீண்டும் கனமழை ஏற்பட வாய்ப்புள்ளதாக வானிலை ஆய்வு மையம் கணிக்கப்பட்டுள்ளது.
ஒருவேளை இந்த காற்றழுத்த தாழ்வு பகுதி, காற்றழுத்த தாழ்வு மண்டலமாக மாறி புயலாக மாறினால் மீண்டும் தமிழகத்தில் மிகப் பெரிய சேதம் ஏற்படுவதற்கான வாய்ப்புகள் அதிகமாக உள்ளதாக வானிலை வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர்.
தமிழகத்தில் நீவர் புயல் காரணமாக கடந்த 5 நாட்களாக பெய்த மழையினால் பல ஏரிகள் நிரம்பி அதிலிருந்து தண்ணீர் திறக்கப்பட்டு பல இடங்களில் வெள்ளம் கரைபுரண்டு ஓடுகிறது. மீண்டும் கனமழை ஏற்பட்டால் கண்டிப்பாக 2015 இல் ஏற்பட்ட நிலைமை வரும் டிசம்பர் மாதத்தில் ஏற்படுவதற்கான சாத்தியக்கூறுகள் அதிகமாகவே உள்ளன என்பதை கடந்த கால நினைவுகள் நினைவுபடுத்துகின்றன.