நீலோதி பாடல் வரிகள் – சிறை 2025

நீலோதி பாடல் வரிகள் சிறை

திரைப்படம்: சிறை 2025
பாடகர்கள் : சூரஜ் சந்தோஷ் மற்றும் சின்மயி ஸ்ரீபாதா
இசை: ஜஸ்டின் பிரபாகரன்
பாடலாசிரியர் : சாரதி

Male : என் நீலோத்தி நீலோத்தி
உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன்
நா ஆளாத்தி ஆளாத்தி
என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்

Female : மூசாவ தேடி ஈசன் கிட்ட
துவாவம் செஞ்சி வணங்குனேன்
இருட்டறையில தான் இருந்தவன்
வெளிச்சத்த காட்டிய முமினுமே நீ

Female : உன் நீலோத்தி நீலோத்தி
உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன்
நா ஆளாத்தியே ஆளாத்தியே
என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்

Female : ஹா..ஆஆ….
ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..ஆ..

Both: ஹா…ஆஆ.. ஹா..ஆஆஆ..

Female : பக்க துணை நானும் உண்டு
நெஞ்சின் வலி ஆத்திக்க
நேந்து கிட்ட சாமி கிட்ட
எஞ்சாமிய பாத்துக்க

Male : எண்ணம் போல வாழ்க்கை
நம்பிக்கையா போய் வா
நான் வருவேன் நான் வருவேன்
அது வரை நெனப்புல கலங்காத

Male : என் நீலோத்தி நீலோத்தி
உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன்
நா ஆளாத்தி ஆளாத்தி
என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்

Male : நெனச்ச வாழ்க்கை வேணுமுன்னு
நெஞ்சம் கெடந்து ஏங்குதே
படச்ச சாமி கேக்காததையும்
படிச்ச சாமி கேட்டதே

Both : எல்லாரையும் போல
நல்லாருப்போம் நாளை
நீதி தரும் செய்தி வரும்
நமக்குண்டு அழகிய எதிர் காலம்

Female : உன் நீலோத்தி (நீலோத்தி)
நீலோத்தி (நீலோத்தி)
உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன்
நா ஆளாத்தி (ஆளாத்தி) ஆளாத்தி (ஆளாத்தி)
என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன்

Female : மூசாவ தேடி ஈசன் கிட்ட
துவாவம் செஞ்சி உருகுறேன்
இருவர் : இனி தடையில்ல ஒரு தடபுல
வாழ்ந்திடும் காட்சியும் தெரிகிறதே

Male : என் நீலோத்தி (நீலோத்தி)
நீலோத்தி (நீலோத்தி)
உன் நெனப்புல லாந்துறேன் லாந்துறேன்
நா ஆளாத்தி (ஆளாத்தி) ஆளாத்தி (ஆளாத்தி)
என் உசுருல ஏந்துறேன் ஏந்துறேன் .

Exit mobile version