நடராஜன்natarajan debut video

இந்தியா ஆஸ்திரேலியா அணிகளுக்கு இடையிலான மூன்றாவது ஒருநாள் போட்டி ஆஸ்திரேலியாவின் கன்பரா மைதானத்தில் இன்று நடைபெற்றது.

ஏற்கனவே மூன்று போட்டிகள் கொண்ட தொடரில் இரண்டு போட்டிகள் தோல்வியடைந்து தொடரை இழந்தாலும் மூன்றாவது போட்டியில் வெல்ல வேண்டும் என்ற முனைப்புடன் இந்திய அணி இன்றைய போட்டியில் களம் கண்டது.

போட்டியில் தமிழகத்தை சேர்ந்த சேலம் மண்ணின் மைந்தன் நடராஜன் அவர்கள் முதல் முறையாக இப் போட்டியில் பங்கேற்று 2 விக்கெட்டுகளை கைப்பற்றி அணியின் வெற்றிக்கு உதவினார்.

போட்டி தொடங்குவதற்கு முன்பு இந்திய அணி கேப்டன் விராட் கோலி அவருக்கு இந்திய அணியின் தொப்பியை வழங்கி உற்சாகப்படுத்தினார்.

முதல் போட்டியில் 2 விக்கெட்டுகளை எடுத்து அணியின் வெற்றிக்கு உதவிய நடராஜனை சமூக வலைத்தளங்களில் பலரும் பாராட்டும் வண்ணம் உள்ளனர். அவரது சொந்த ஊரான சேலத்தில் அவருடைய குடும்பத்தினர் மிகுந்த மகிழ்ச்சியுடன் போட்டி தொடங்கியதிலிருந்து ஆனந்தம் அடைந்தனர். சாதாரண குடும்பத்தில் பிறந்து இந்திய அணிக்கு விளையாடுவது என்பது பல்வேறு கிரிக்கெட் வீரர்களுக்கு கனவாகவே இருக்கிறது. ஆனால். கிடைத்த வாய்ப்பை பயன்படுத்தி அணியில் இடம் பிடித்த நடராஜனுக்கு பல்வேறு பிரபலங்களும் Twitter வாயிலாக வாழ்த்து தெரிவித்த வண்ணம் உள்ளனர்.

ஏழ்மையான குடும்பத்தில் பிறந்தாலும் விடாமுயற்சியால் வாழ்க்கை சாதிக்க முடியும் என்பதற்கு நடராஜன் ஒரு உதாரணம். நடராஜன்(Natarajan_91)

 வளர்ச்சி இந்தியாவிற்கும் தமிழ்நாட்டிற்கும் பெருமை சேர்க்க வேண்டும் என நாமும் வாழ்த்துவோம்.