புதிய நாடாளுமன்றம் இத்தனை கோடியா கட்டிடத்தில் சிறப்பு அம்சங்கள் என்னென்ன.
Share on facebook
Facebook
Share on twitter
Twitter
Share on telegram
Telegram
Share on whatsapp
WhatsApp
Share on pinterest
Pinterest
Share on reddit
Reddit
Share on tumblr
Tumblr

புதிய நாடாளுமன்றம்

புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி – தற்போது உள்ள சூழ்நிலையில் புதிய நாடாளுமன்றம் தேவைதானா அப்படி இந்த கட்டிடத்தில் என்ன இருக்கிறது. எதற்கு இவ்வளவு கோடி ரூபாய்

தற்போதைய நாடாளுமன்றம்

டெல்லியில் உள்ள தற்போதைய நாடாளுமன்ற 1921 ஆம் ஆண்டு ஆங்கிலேயர்கள் காலத்தில் அடிக்கல் நாட்டப்பட்டது.

ஆறு ஆண்டுகளுக்குப் பிறகு 1927 ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 18ஆம் தேதி இந்தியாவின் அப்போதைய கவர்னர் ஜெனரல் iruvin ஆல் திறந்து வைக்கப்பட்டது.

தற்போது அமைந்துள்ள கட்டடத்தின் அருகில் சென்ட்ரல் விஸ்டா என்ற பெயரில் புதிய நாடாளுமன்றம் கட்டப்படவுள்ளது. கட்டுமான ஒப்பந்த பணிகள் டாட்டா நிறுவனம் தொடங்கப்பட்டுள்ளது. நான்கு அடுக்கு மாடிகளுடன் 64 ஆயிரத்து 500 சதுர அடியில் இந்த புதிய நாடாளுமன்றக் கட்டடம் அமைக்கப்பட உள்ளது. இந்த கட்டடம் கட்டுவதற்கான செலவு 971 கோடி ரூபா என மதிப்பிடப்பட்டுள்ளது .இக்கட்டிடத்தை வரும் 2022ஆம் ஆண்டு சுதந்திர தினத்திற்க்குள் கட்டி முடிக்க திட்டமிடப்பட்டுள்ளது.

நாடாளுமன்றக் கட்டடம், நூலகம்

முக்கோண வடிவில் அமைந்துள்ள நாடாளுமன்றக் கட்டடம், நூலகம், பல்வேறு அரங்கங்கள், பல்துறை கமிட்டி அலுவலகங்கள், உணவருந்தும் அறைகள், பார்க்கிங் வசதிகள் அனைத்து டிஜிட்டல் மயமாக்கப்பட்ட தனித்தனி அலுவலகங்கள் போன்றவையும் இடம்பெறவுள்ளன. 

சென்ட்ரல் விஸ்டா

குடியரசுத் தலைவர், பிரதமர் போன்றவர்களுக்கு சிறப்பு நுழைவு வாயில்களுடன் சேர்த்து கட்டடத்தில் 6 நுழைவாயில்கள்  இருக்கும். நெருப்பு நிலநடுக்கத்தை தாங்கும் வலிமையுடன் நவீன டிஜிட்டல் தொழில்நுட்பத்தை கொண்டிருக்கும் எனவும் கூறப்பட்டுள்ளது.

தற்போது 543 மக்களவை உறுப்பினர்களும் 245 மாநிலங்களவை உறுப்பினர்கள் இருக்கும் நிலையில் எதிர்காலத்தில் தொகுதி விரிவாக்கத்தை கருத்தில் கொண்டு 888 உறுப்பினர்கள் அமரும் வகையில் பிரமாண்ட மக்களவை அறை 384 உறுப்பினர்கள் அமரும் வகையில் மாநிலங்களவை அறையும் அமைக்கப்படுகிறது. 

புதிய நாடாளுமன்றத்திற்கு அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

உச்சநீதிமன்றம் கட்டுமானப் பணிகளுக்கு தடைவிதித்த நிலையில் தற்போது இந்த அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது .

இந்தியா ஒரு மதச்சார்பற்ற நாடு இங்கு பல மதத்தினர் பல சமூகத்தில் வாழ்ந்து வரும் நிலையில் இந்து மதத்தை மற்றும் பின்பற்றி அடிக்கல் நாட்டப்பட்டது மற்ற மதத்தினர் இடையே சிறிய மனக்கசப்பை ஏற்படுத்தியுள்ளது, ஏனெனில் இது அரசு விழாவாக இருப்பதால் அனைத்து மதத்தினரையும் அழைத்து அடிக்கல் நாட்டு படுவதே மத்திய அரச காலங்காலமாக கடைபிடித்து வரும் நடைமுறையை மாற்றியுள்ளது பிரதமர் மோடி தலைமையிலான அரசு. ஏற்கனவே டெல்லியில் விவசாயிகள் வீதிக்கு வந்து போராடிக் கொண்டிருக்கும் நிலையில் புதிய நாடாளுமன்றம் தேவைதானா என்பதை மத்திய அரசு எண்ணிப்பார்க்க வேண்டும்.