மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா ஓட்டலில் கைது செய்துள்ளனர்

meera mithun arrested

நடிகை மீரா மிதுன் கைது

மிஸ் சவுத் இந்தியா பட்டம் வென்றவர் தமிழ்செல்வி என்கின்ற மீராமிதுன். தமிழ் இயக்குநர்கள் சிலரை சாதிய ரீதியாக பேசிய வீடியோ வெளியாக அதிர்ச்சிக்குள்ளாக்கியது. குறிப்பிட்ட சமூகத்தை அவமதிக்கும் வகையில் பேசுவதுடன் அந்த சமூகத்தை சார்ந்த இயக்குநர்களை திரை துறையை விட்டு நீக்கவேண்டும் என்று அறுவருக்கத்தக்க வகையில் வீடியோவில் சாடியிருந்தார்.

மீரா மிதுனின் அடாவடி பேச்சு பல்வேறு தரப்பினரிடையே அதிர்ச்சிக்குள்ளாக்கியது.
இதைத்தொடர்ந்து, சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் விடுதலை சிறுத்தை கட்சி நிர்வாகி வன்னியரசு நடிகை மீரா மிதுன் மீது நடவடிக்கை எடுக்க புகார் அளித்திருந்தார்.

புகார் அடிப்படையில் நடிகை மீரா மிதுன் மீது சென்னை மத்திய குற்றப்பிரிவு – சைபர் கிரைம் போலீசார் வன்கொடுமை தடுப்புச் சட்டம், கலகம் செய்ய தூண்டிவிடுதல், சாதி மதம் குறித்துப் பேசி கலகம் செய்ய முயற்சித்தல் உட்பட ஏழு பிரிவுகளின் கீழ் வழக்கு பதிவு செய்துள்ளனர். இந்த விவகாரம் தொடர்பாக நடிகை மீரா மிதுன் நேரில் ஆஜராகி விளக்கமளிக்க சம்மன் அனுப்பப்பட்டுள்ளது.

இந்நிலையில் மீரா மிதுனை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கேரளா ஓட்டலில் கைது செய்துள்ளனர். கைது செய்யப்பட்ட மீரா மிதுனை சென்னை அழைத்துவர போலீசார் ஏற்பாடு செய்துள்ளனர்.