பாஜகவின் தாக்குதலை எதிர்க்க திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

பாஜகவின் தாக்குதலை எதிர்க்க திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

பாஜகவின் தாக்குதலை எதிர்க்க திமுக உள்ளிட்ட கட்சிகளுக்கு மம்தா பானர்ஜி அழைப்பு

இந்திய ஜனநாயகம் மற்றும் இந்திய அரசியல் அமைப்பு ஆகியவற்றின் மீது பாஜக தொடுக்கும் தாக்குதலில் இடமிருந்து நாட்டைக் காப்பாற்றிக்கொள்ள இந்தியாவில் பல கட்சிகளுக்கு திரிணாமுல் காங்கிரஸ் தலைவரும் மேற்கு வங்க முதல்வருமான மம்தா பானர்ஜி அழைப்பு விடுத்துள்ளார். இந்த அழைப்பில் திமுக தலைவர் ஸ்டாலின் சோனியாகாந்தி உத்தவ் தாக்கரே அரவிந்த் கெஜ்ரிவால் சரத்பவார் நவீன் பட்நாயக் மற்றும் தேஜஸ்வி யாதவ் ஆகியோருக்கு எழுதியுள்ள கடிதத்தில் இந்திய ஜனநாயகம் மற்றும் அரசியலமைப்பு மீதான பாரதிய ஜனதாவின் தாக்குதலை தடுத்து இருத்த வேண்டும் பாரதிய ஜனதா ஆட்சியில் இல்லாத மாநிலங்களில் ஆளுநர்கள் மூலம் மத்திய அரசு ஆட்சியை செய்ய நினைக்கிறது.

சிபிஐ அமலாக்கத் துறை ஆகியவற்றை அரசியல் காரணங்களுக்காக மத்திய அரசு பயன்படுத்துகிறது. இந்தியா முழுவதும் ஒற்றை ஆட்சி முறையை கொண்டு வர வேண்டுமென பாஜக நினைக்கிறது. பாரதிய ஜனதா கட்சிக்கு எதிரான இந்த போரில் நாம் அனைவரும் ஒன்றிணைந்து இந்தியாவில் மீண்டும் ஜனநாயகத்தை நிலை நிறுத்த வேண்டுமென நாம் அனைவரும் ஒன்று கூடி ஆலோசித்து முடிவு எடுப்போம் என தெரிவித்துள்ளார்.