உத்தவ் தாக்கரே விற்கு சவால்விட்ட அர்னாப் கோஸ்வாமி.

உத்தவ் தாக்கரே விற்கு சவால் விட்ட அர்னாப் கோஸ்வாமி.
Share on facebook
Share on twitter
Share on telegram
Share on whatsapp

மகாராஷ்டிரா முதலமைச்சரும் சிவசேனா கட்சித் தலைவருமான உத்தவ் தாக்கரே விற்கு ரிபப்ளிக் டிவி யின் நிறுவனர் அர்னாப் கோஸ்வாமி சவால் விட்டிருக்கிறார். 

கடந்த 2018 ஆம் ஆண்டு நிகழ்ந்த இரட்டை கொலை தொடர்பான  ரிபப்ளிக் டிவியின் நிறுவனர் மற்றும் தலைமை ஆசிரியர் அர்னாப் கோஸ்வாமி கைது செய்யப்பட்டு மும்பை அருகே உள்ள லோஜா சிறையில் அடைக்கப்பட்டார். இந்த வழக்கிலிருந்து அர்னாப் கோஸ்வாமி க்கு ஜாமீன் வழங்க மறுத்தது மும்பை உயர்நீதிமன்றம்.

அதன்பிறகு உச்ச நீதிமன்றத்தில் ஜாமீன் பெற்று லோஜா சிறையில் இருந்து வெளியே வந்த அர்னாப் செய்தியாளர் கேள்விக்கு பதிலளிக்கையில் என்னிடம் மூன்று கட்ட விசாரணை நடைபெற்றது தன்னை ஒரு பொய் வழக்கில் கைது செய்து சிறையில் அடைத்த மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தன்னிடம் மன்னிப்பு கோரவில்லை என்றும் சிறையில் இருந்து கொண்டே தன்னால் டிவி சேனலை நடத்த முடியும் என்றும் இந்த விளையாட்டு தொடங்கி விட்டதாகவும் உத்தவ் வால் என்னை ஒன்றும் செய்ய முடியாது இந்தியாவில் உள்ள அனைத்து மொழிகளிலும் செய்தி சேனலை தொடங்க இருப்பதாகவும் கூறியவர் உத்தரவால் தன்னால் முடிந்ததை பார்க்கட்டும் என ஆவேசமாக கூறினார்.  பொய் வழக்கின் மூலம் தன்னை கைது செய்து சிறையில் அடைத்த மகாராஷ்டிர முதலமைச்சர் உத்தவ் தாக்கரே தற்போது தோற்கடிக்கப்பட்டு விட்டார் தன் மீதான பொய் புகாருக்கு உத்தவ் தாக்கரே பதில் சொல்லியே ஆகவேண்டும் என்றும் கூறினார். 

அதன்பிறகு தனது செய்தி நிறுவனமான ரிபப்ளிக் டிவிக்கு சென்ற அர்னாப் கோஸ்வாமி இருக்கு அந்நிறுவன செய்தியாளர்கள் உற்சாக வரவேற்பு அளித்தனர். ஏதோ இந்த வழக்கிலிருந்து முழுவதும் வெளியே வந்த மாதிரி அர்னாப் கோஸ்வாமி வீடியோ சமூக வலைதளங்களில் விமர்சிக்க பட்டு வருகின்றன.