கே.ஜி.எஃப்-2
கே.ஜி.எஃப்-1 கடந்த 2018-ம் ஆண்டு பிரசாந்த் நீல் இயக்கத்தில் யாஷ் நாயகனாக நடித்து வெளியாகி மெகா ஹிட்டான இப்படத்தின் இரண்டாம் பாகம் கே.ஜி.எஃப்-2 தற்போது வெளியாகி உள்ளது. இப்படத்தில் யாஷ் ஜோடியாக ஸ்ரீநிதி ஷெட்டி மேலும் சஞ்சய் தத், ரவீனா டண்டன், பிரகாஷ் ராஜ், மாளவிகா அவினாஷ் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர்.
கே.ஜி.எஃப்-1 பாகத்தில் வில்லன் கருடனை யாஷ் கொலை செய்து கே.ஜி.எஃப்- யை கைப்பற்றி அதன் தொடர்ச்சியாக 2ஆம் பாகம் தொடர்கிறது. யாஷ் கே.ஜி.எஃப் கட்டுப்பாட்டில் வைத்து அங்கு வாழ்ந்து வரும் மக்களுக்கு நல்லது செய்து தன்னுடைய இறுதியில் கே.ஜி.எஃப்பை யார் கைப்பற்றுகிறார்கள் என்பது தான் கே.ஜி.எஃப்-2 திரைப்படத்தின் கதை.

KFG-2 திரைப்படம் தமிழகத்தில் மட்டும் 350க்கும் மேற்பட்ட திரையரங்குகளிலும்.. தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் உலகம் முழுவதும் 10,000 மேற்பட்ட திரைகளில் இப்படம் பிரம்மாண்டமாக வெளியானது. இந்நிலையில் கே.ஜி.எஃப் 2 திரைப்படத்தின் முதல் நாள் வசூல் மட்டும் ரூ.200 கோடிக்கும் மேல் வசூலித்ததாக கூறப்படுகிறது. வட இந்தியாவில் 65 கோடியும், ஆந்திராவில் 45 கோடியும் தமிழ்நாட்டில் ரூ. 13 கோடியும், கேரளாவில் . 8 கோடியும், , வெளிநாட்டில். 30கோடியும், மொத்தத்தில் உலகம் முழுவதும் ரூ.200 கோடிக்கு மேல் வசூலாகி உள்ளதாக கூறப்படுகிறது.
நடிகர் விஜயின் பீஸ்ட திரைப்படம் எதிர்பார்த்த அளவு இல்லாததால் கேஜிஎப்-2 தமிழகத்தில் இன்னும் அதிக திரையரங்குகளில் வெளியிட முடிவு செய்துள்ளதாக இப்படத்தின் தமிழக விநியோகிப்பாளர் தயாரிப்பாளர் எஸ்ஆர் பிரபு தெரிவித்துள்ளார். இதன் மூலம் கே.ஜி.எஃப் 2 நிச்சயம் 1000 கோடிக்கு மேல் வசூல் செய்து RRR மற்றும் பாகுபலி படங்களின் சாதனை முறியடிக்கும் என எதிர்பார்க்கபடுகிறது.