சுல்தான் திரைப்படம் திரைவிமர்சனம்

சுல்தான் திரைப்படம்

சுல்தான் திரைப்படம்

கார்த்தி, ராஷ்மிகா மந்தனா நெப்போலியன், லால், யோகிபாபு போன்ற பலர் நடித்துள்ள படத்தை ட்ரீம் வாரியர் என்டர்மென்ட் பிரகாஷ் பிரபு தயாரிப்பில், சத்யன் சூரியன் ஒளிப்பதிவில் ரூபன் எடிட்டிங்கில் ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் இப்படத்தை இயக்கியுள்ளார். இப்படத்திற்கு யுவன் சங்கர் ராஜா பின்னணி இசையும் பாடல்கள் விவேக் பெட்வீன் ஆகியோர் இசை அமைத்துள்ளனர்.

சுல்தான் கதை

சென்னையில் ஒரு மிகப் பெரிய ரவுடி குடும்பத்தில் நெப்போலியன் -அபிராமி ஆகியோருக்கு மகனாகப் பிறக்கும் கார்த்தி பிறக்கும்போது தாயை இழந்து விடுகிறார். அதன்பிறகு கார்த்தியை மாமா கேரக்டரில் வரும் லால் மற்றும் 100 பேர் கொண்ட ரவுடி கும்பல் அவரை வளர்க்கிறார்கள். அதன் பிறகு கார்த்தி வெளியூர் சென்று ரோபோட்டிக்ஸ் இஞ்சினியர் படிப்பை படித்துவிட்டு இன்னும் சென்னை வருகிறார். கார்த்தியின் அப்பாவாக வரும் நெப்போலியன் ஒரு டான் கேரக்டரில் பல வடிவங்களை சென்னையில் நிகழ்த்தி இருக்கிறார். அதனை முடிவுக்குக் கொண்டுவரும் நோக்கில் கமிஷனராக வருபவர் அனைவரையும் என்கவுண்டர் செய்ய திட்டமிடுகிறார். நெப்போலியனின் ரவுடித்தனத்தை பிடிக்காமல் ஊருக்கு செல்ல திட்டமிடுகிறார். அதன்பிறகு நெப்போலியன் இறந்துவிடுகிறார். நெப்போலியன் இறந்த பிறகு கார்த்தி காவல்துறை அதிகாரியிடம் என்கவுண்டர் செய்ய வேண்டாம் எனவும் இவர்களை திருத்துவது அதுவும் வாக்குறுதி கொடுக்கிறார். அதன் பிறகு அனைவரும் ஊரை விட்டு கிராமத்திற்கு செல்கின்றனர். அங்கு கார்த்தி ராஷ்மிகா மீது காதலில் விழுகிறார். அப்போது நடக்கும் ரவுடித்தனத்தை பற்றி அறிந்து கொள்கிறார். அதன் பிறகு அந்த ஊரிலேயே தங்கி தனது 100 ரவுடிகளுடன் விவசாயத்தில் ஈடுபட்டு அந்த ஊர் பொது மக்களையும் விவசாயத்தையும் தனது 100 அண்ணன் களையும் காப்பாற்றுகிறார் என்பதே படத்தின் கதை.

சுல்தான் திரைக்கதை

படத்தின் கதையை படம் தொடங்கிய சில நிமிடங்களிலேயே யூகிக்கும் படியாக அமைந்துள்ளது அக்கதையை நோக்கிய திரைக்கதை நகர்கிறது. கார்த்திகை தவிர யாருடைய கதாபாத்திரமும் மனதில் இருக்கும் படியாக இல்லை. ஏற்கனவே தெலுங்கில் வெளியான மகரிஷி திரைப்படத்தின் கதையும் தேவர் மகன் திரைப்படத்தின் கதையும் கிட்டத்தட்ட நினைவுபடுத்துகிறது. யுவன் சங்கர் ராஜாவின் பின்னணி இசை படத்திற்கு பலம் சேர்க்கிறது. பாடல்கள் சுமாராகவே இருக்கிறது. படத்தில் வரும் சண்டைக் காட்சிகள் அனைத்துமே ரசிக்கும்படியாக இருந்தாலும், இடைவேளையின் போது வரும் சண்டைக் காட்சி பிரமிக்க வைக்கிறது. தமிழில் முதல் முதலாக அறிமுகமாகி ராஷ்மிகா மந்தனா விற்கு இது முதல் படம் என்றாலும் பார்ப்பதற்கு கிராமத்து பெண்ணாகவே அழகாக தோன்றியிருக்கிறார். கதையில் மிகப் பெரிய அளவுக்கு முக்கியத்துவம் இல்லை. யோகி பாபுவின் காமெடி ரசிக்கும்படியாக அமைந்துள்ளது. கார்த்தியின் மாமாவாக வரும் லால் பாகுபலி படத்தில் வரும் கட்டப்பா வாகவே காட்சியளிக்கிறார்.

இத்திரைப்படத்தை கார்த்தி ஒருவரே தனது தோளில் சுமந்து படத்தை பார்க்கும் படியாக இருக்கிறது இப்படத்தின் சிறப்பு.

சுல்தான் திரைப்படம் அதிரடி ஆக்‌ஷன் காட்சிகள் நிறைந்து செம மசாலாவாக இருப்பதால், தமிழ் ரசிகர்களை விட அதிகமாக தெலுங்கு ரசிகர்களை திருப்திப்படுத்தும் என இந்த நெட்டிசன் கூறியுள்ளார்.