கமலா ஹாரிஸ் அமெரிக்க துணை அதிபர்

அமெரிக்காவின் முதல் பெண் துணை அதிபராக இந்திய வம்சாவளியை சேர்ந்தவரும் தமிழகத்தைப் பூர்வீகமாகக் கொண்டவருமான கமலா ஹாரிஸ் பதவி ஏற்றார். அவருக்கு லத்தீன் உச்சநீதிமன்ற நீதிபதி சோனியா பதவி பிரமாணம் செய்து வைத்தார்.

அமெரிக்க அதிபர் வரலாற்றில் ஒரு பெண் முதல் முறையாக துணை அதிபராக பதவி ஏற்றது இதுவே முதல் முறை. 

கமலா ஹாரிஸ்

துணை அதிபராக பதவியேற்ற கமலா ஹரிஷ்  தான் இன்று இந்த நிலையில் இருப்பதற்கு தனது தாய், சியாமளா கோபாலன் ஹாரிஸ் தான் காரணம் என  தெரிவித்துள்ளார்.பதவியேற்கும் முன் அவர் வெளியிட்டுள்ள வீடியோ பதிவில், தனது தாயால் கிடைத்த வெற்றி இது என்றும் குறிப்பிட்டுள்ளார். 

கமலா ஹாரிஸ் இன் தாய் ஷாமலா கோபாலன் சென்னை பெசன்ட் நகரை சேர்ந்தவர்.  இவரது தாத்தா பிபி கோபாலன் திருவாரூர் மாவட்டம் துளசேந்திரபுரம் சேர்ந்தவர். கமலா ஹாரிஸ் உறவினர்கள் பலரும் சென்னையில் வசிப்பது குறிப்பிடத்தக்கது .