காதல் என் கவியே பாடல் வரிகள்

kaadhal en kaviye lyrics in

படம்: சால்மன் 3D (2022)
பாடியவர் : சித் ஸ்ரீராம்
இசை : ஸ்ரீஜித் ஏடவனா
பாடலாசிரியர் : நவீன் கண்ணன்

ஓஹோ காதல் என் கவியே
நீ என் அருகில் வந்தாலே
உலகம் ஏன் இருளுது
பகல் இரவாய் மாறுது
வளைவினில் எல்லாம்
வளைந்து தொலைந்து
போவேன் நானே

நீயே வெண்பனியே
தீயின் சுவையும் நீயே
உன்னை மெது மெதுவாக
பயணங்கள் போல தொடங்கிடவா

மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக
தவறுகள் இனி சரி என மாற
தொலைவுகளை தொலைப்போம்
ஒன்றாய் வா…

மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக
தவறுகள் இனி சரி என மாற
தொலைவுகளை தொலைப்போம்
ஒன்றாய் வா…

உன் காதின் ஓரம் நான்
வரைவேன் காதல் கவிதை
துடுப்பாக மாறுவேன்
உன் கரையை தாண்டுவேன்

அடி ராட்சசியே கூச்சம் காணலையே ஓ…
உன் மறைவுகளும் முத்தம் கேட்கிறதே ஓ…

ஒரு வேதியல் மாற்றம் என்னில்
உன்னை கண்டால் ஏதோ நடக்கிறதே
உன் இடையில் ஊர்வலம் செல்ல
என் விரல்கள் ஏனோ துடிக்கிறதே

காதல் என் கவியே
நீ என் அருகில் வந்தாலே
உலகம் ஏன் இருளுது
பகல் இரவாய் மாறுது
வளைவினில் எல்லாம்
வளைந்து தொலைந்து
போவேன் நானே

மனம் ஒரு கணம் கொதிகலன் ஆக…
தவறுகள் இனி சரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா… ஆஅ… ஆஅ…

மனம் ஒரு கொதிகலன் ஆக…
தவறுகள் இனி சரி என மாற…
தொலைவுகளை தொலைப்போம் ஒன்றாய் வா… ஆஅ… ஆஅ…

bitcoin mixer
Exit mobile version