அமெரிக்காவின் 46 வது அதிபராக ஜோசப் பைடன் பதவியேற்றார்.

ஜோ பைடன் பதவி ஏற்பு விழா

அமெரிக்காவின் 46 வது அதிபராக பாரம்பரிய முறைப்படி ஜோ பைடன் பதவியேற்றார். அமெரிக்காவில் புதிய அதிபரின் பதவியேற்பு விழா ஜனவரி 20ம் தேதியன்று நடைபெறுவது வழக்கம். அதன்படி, ஜோ பைடன் முறைப்படி அதிபராக பதிவியேற்கும் நிகழ்ச்சி வாஷிங்டனில் உள்ள நாடாளுமன்ற கட்டடத்தில் இருக்கும் கேப்பிட்டல் வளாகத்தில் இந்திய நேரப்படி 20ம் தேதி இரவு 9.30 மணி அளவில் நடைபெற்றது. 

அந்நாட்டின் உச்சநீதிமன்ற தலைமை நீதிபதி ஜான் ராபர்ட்ஸ், ஜோசப் பைடனுக்கு பதிவிப் பிரமாணம் செய்து வைத்தார். கடந்த ஆண்டு நவம்பர் மாதம் அமெரிக்க அதிபர் தேர்தலில் ஜனநாயக கட்சி சார்பில் போட்டியிட்டு வெற்றிப்பெற்றதன் மூலம் அமெரிக்காவின் 46வது அதிபராக ஜோ.பைடன் தேர்ந்தெடுக்கப்பட்டார். அதிபர் தேர்தலில் முன்னாள் அதிபர் டொனால்ட் ட்ரம்ப் எதிர்த்து போட்டியிட்ட ஜோ பைடன் அதிக வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார். 

பதவியேற்ற கையோடு  பேசிய ஜோ பைடன் அமெரிக்காவில் இனக்கலவரம் மதக்கலவரம் மற்றும் பல்வேறு பாகுபாடுகள் காட்டப்படுகிறது. இதனை ஒழிக்க வேண்டும் தீவிரவாதம் மற்றும் பல்வேறு விஷயங்களால் அமெரிக்க மக்கள் படும் துன்பத்திற்கு ஆளாகியுள்ளனர் இதன் அனைத்துமே வரும் காலங்களில் சரி செய்வதற்கு பாடுபடுவேன் என கூடினார்.

பதவியேற்பு விழா நிகழ்ச்சியில் லேடி காகா மற்றும் ஜெனிபர் லோபஸின் குழுவினரின் இசை நிகழ்ச்சி நடைபெற்றது.

அமெரிக்க முன்னாள் அதிபர்களான ஒபாமா

அமெரிக்க அதிபர் பதவியேற்பு விழாவில்  அமெரிக்க முன்னாள் அதிபர்களான ஒபாமா, ஜார்ஜ் புஷ், மற்றும் கிளின்டன் ஆகியோர் பங்கேற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.