IPL FINAL கிரிக்கெட் வரலாற்றில் தோனி இல்லாத இறுதிப் போட்டியில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ்.

PIC COURTESY: Twitter india
IPL FINAL கிரிக்கெட் வரலாற்றில் தோனி இல்லாத இறுதிப் போட்டியில் விளையாடும் மும்பை இந்தியன்ஸ்

PIC COURTESY: Twitter india
ஐபிஎல் கிரிக்கெட் தொடரை பொறுத்தவரை சென்னை சூப்பர் கிங்ஸ் மற்றும் மும்பை இந்தியன்ஸ் அணிகள் இடையேயான மோதல் என்பது கால்பந்து உலகின் பார்சிலோனா மற்றும் ரியல் மேட்ரிட் அணிகளுக்கிடையேயான போட்டிக்கு நிகரானது. இதன் காரணமாக சென்னை மற்றும் மும்பை அணிகளுக்கு இடையிலான ஆட்டம் மிகவும் சுவாரஸ்யமானது.

சென்னை, மும்பை அணிகளுக்கிடையேயான போட்டிகள் IPL எல் கிளாசிகோ என்று கூறப்படுகிறது. மும்பை அணி இதுவரை கைப்பற்றியுள்ள 4 கோப்பைகளில் 3 முறை சென்னை அணியை வீழ்த்தி கோப்பையை கைப்பற்றியது. குறிப்பாக மும்பை இந்தியன்ஸ் முன்னேறிய அனைத்து இறுதி போட்டிகளில் அதன் எதிரணி மகேந்திர சிங் தோனி அங்கம் வகித்த சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே.

PIC COURTESY: Twitter india
முதல் ஐந்து IPL சீசன்கள் வரை கோப்பையை கட்டி அணைப்பது மும்பை இந்தியன்ஸ் அணிக்கு கனவாகவே இருந்தது. 2010 ஆம் ஆண்டு மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த போது மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி இடம்தான் தோல்வியடைந்தது. அந்த ஆண்டில் முதல் முறையாக மகேந்திர சிங் தோனி தலைமையிலான சென்னை அணி மும்பை அணியை அதன் சொந்த மண்ணில் வீழ்த்தி ஐபிஎல் கோப்பையை கைப்பற்றியது.

அதன்பின்பு 2013 ஆம் ஆண்டு மீண்டும் இறுதிப் போட்டிக்குள் நுழைந்த மும்பை இந்தியன்ஸ் அணிக்கு மீண்டும் எதிரணி தோனி தலைமையிலான சென்னை சூப்பர் கிங்ஸ் அணி மட்டுமே. இந்த முறை சென்னை அணியின் ஆட்டம் படு மோசமாக இருந்தால் சுதாரித்துக்கொண்ட ஆடிய மும்பை அணி, சென்னை சூப்பர் கிங்ஸ் அணியை வீழ்த்தி முதல் முறையாக கோப்பையை கைப்பற்றியது.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியுடன் இந்த நான்கு இறுதிப் போட்டிகள் தவிர 2017 ஆம் ஆண்டு இறுதிப் போட்டியில் முதல் முறையாக சென்னை சூப்பர் கிங்ஸ் இல்லாத ஒரு அணியுடன் இறுதிப் போட்டியை சந்தித்த மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றியது. ஆனால் இதில் அதிசயம் ஆச்சரியம் என்னவென்றால் அந்த அணியும் மகேந்திர சிங் தோனி அங்கம் ரைசிங் புனே சூப்பர் ஜெயின்ட் தான். ஆனால் அந்த முறை கேப்டனாக ஸ்டீவ் ஸ்மித் இருந்தார்.

2016 மற்றும் 2017 ஆகிய இரண்டு ஆண்டுகளில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி சூதாட்ட புகார் காரணமாக சஸ்பெண்ட் செய்யப்பட்டு இருந்தது. இந்த இரண்டு IPL சீசனிலும் புனே அணிக்காக விளையாடினார் மகேந்திர சிங் தோனி.
இதில் மும்பை இந்தியன்ஸ் கைப்பற்றியுள்ள 4 ஐபிஎல் பட்டங்களில் மகேந்திர சிங் தோனி அங்கம் வகித்த அணியில் இரண்டு முறை 1 ரன்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது குறிப்பிடத்தக்கது.

6 முறையாக தற்போது IPL இறுதி போட்டிக்குள் நுழைந்து உள்ளே மும்பை இந்தியன்ஸ் அணி முதல் முறையாக தோனி இடம் பெறாத ஒரு அணியுடன் மோத உள்ளது. டெல்லி கேப்பிடல் அணியும் வரலாற்றிலேயே முதல் முறையாக இறுதிப்போட்டிக்குள் நுழைந்த இருப்பது குறிப்பிடத்தக்கது.

6வது முறையாக மும்பை இந்தியன்ஸ் அணி கோப்பையை கைப்பற்றுமா அல்லது முதல் முறையாக டெல்லி கேப்பிடல் கோப்பையை முத்தமிடலாம் என ரசிகர்கள் மிகவும் ஆவலாக காத்திருக்கின்றனர்.Dream11 IPL 2020 இறுதிப் போட்டி இந்திய நேரப்படி இரவு 7.30 PM மணிக்கு ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும் ஹாட்ஸ்டார் இல் நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படுகிறது.