IPL 2020 playoff சுற்றுக்கு தகுதி பெற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி

IPL 2020 playoff சுற்றுக்கு தகுதி பெற்றது சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணி
Share on facebook
Share on twitter
Share on telegram
Share on whatsapp

2020ஆண்டிற்கான Dream11 ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வருகிறது அந்த தொடர் தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது. அபிதாவின் கடைசியாக நடை பெற்ற லீக் சுற்று ஆட்டத்தில் 10 விக்கெட் வித்தியாசத்தில்  மும்பைஅணியை வீழ்த்தியது சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி.

இந்த போட்டியில் ரோகித் சர்மா மீண்டும் கேப்டனாக களமிறங்கினார் டாஸ் வென்று சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதில் மும்பை இந்தியன்ஸ் அணியில் தொடக்க வீரராக களம்  இறங்கிய கேப்டன் ரோகித் சர்மா 4 ரன்களில் வெளியேறினார். மறுமுனையில் ஆடிய குயின்டன் டி காக் 25 ரன்களும் அதன்பின்  களமிறங்கி சூர்யகுமார் யாதவ் 33 ரன்கள் விளாசினர்.  இஷான் கிஷன் 33 ரன்களில் பெவிலியன் திரும்பினார்.  மும்பை இந்தியன்ஸ்அணி 20 ஓவர்கள் முடிவில் 8 விக்கெட் இழப்பிற்கு 149 ரன்களை மட்டுமே எடுத்தது. அந்த அணியில் அதிகபட்சமாக கெரான் பொலார்ட் 21 பந்துகளில்  4 சிக்சர்கள் 2 fours உட்பட41 ரன்களை  எடுத்தார். மற்ற அனைவரும் சொற்ப ரன்களில்  ஆட்டமிழந்தனர்.  ஐதராபாத் அணியில் தொடக்க பந்து வீச்சாளரான சந்தீப் ஷர்மா 3 விக்கெட்டுகளும் ஜஸ்டின் ஹோல்டர் 3 விக்கெட்டுகளும் சபாஷ் நதியின் 2 விக்கெட்டுகளும்  வீழ்த்தினர். 

150 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஐதராபாத் அணியின் கேப்டன் டேவிட் வார்னர் மற்றும் விக்கெட் கீப்பர் விருத்திமான் சஹா ஆகியோர் ஆரம்பம் முதலே அடித்து ஆட விரும்பினர்.  10 ஓவர்களில் ஹைதராபாத் அணி 100 ரன்களை குவித்தது.  அதன் பிறகும் இருவரும்  அடித்து விளையாடினர். இறுதியாக சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 17.5 ஓவர்களில் முடிவில் 151 ரன்களை எடுத்து 10 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது. இதில் இந்த அணியின் கேப்டன் டேவிட் வார்னர் அதிகபட்சமாக58 பந்துகளில் 1 சிக்ஸர் 10 போர்கள் உட்பட 85 ரன்களை குவித்தார். மறுமுனையில் இவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய விருத்திமான் சஹா தன் பங்குக்கு 45 பந்துகளில் ஒரு சிக்ஸ்  மற்றும் 8 fours உட்பட 58 ரன்களை குவித்தார். 

 

இதன் மூலம் ஹைதராபாத் அணி புள்ளிப் பட்டியலில்  மூன்றாவது இடத்திற்கு முன்னேறியது மட்டுமில்லாமல்  பிளே ஆப் சுற்றுக்கு தகுதி பெற்றது. 

புள்ளிகள் பட்டியலில் மூன்றாவது இடத்தில் இருந்த பெங்களூர் அணி நான்காவது இடத்திற்கு கீழே இறங்கியது, இன்று நடைபெற்ற ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி தோற்றுவிட்டால் ப்ளே ஆப் சுற்றுக்கு தகுதி  செல்லலாம் என்ற நம்பிக்கையோடு இருந்த கொல்கத்தா நைட் ரைடர்ஸ் அணியின் கனவு தகர்ந்தது. 

ipl play off 2020

வரும் ஐந்தாம் தேதி முதல் பிளே ஆப்  சுற்று ஆட்டங்கள் தொடங்குகின்றன. வியாழக்கிழமை துபாயில் நடைபெறும் முதல் பிளே ஆப் தகுதி சுற்றில்  மும்பை இந்தியன்ஸ் அணியை டெல்லி கேப்பிடல்  அணி  எதிர்கொள்கிறது இதில் வெற்றி பெறும் அணி நேரடியாக இறுதி சுற்றுக்கு தகுதி பெறும். தோல்வியடையும்  அணி எலிமினேட்டர்  சுற்றில்  வெற்றியடையும் அணியுடன் மோதும். எலிமினேட்டர் சுற்றில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியை  பெங்களூர் ராயல் சேலஞ்சர்ஸ் அணி சந்திக்கிறது.  இப் போட்டிகள் இந்திய நேரப்படி இரவு 7 மணிக்கு தொடங்குகின்றன.  இந்த போட்டிகளை ஸ்டார் ஸ்போர்ட்ஸ் மற்றும்  டிஸ்னி ஹாட்ஸ்டார்  ஆப் மூலம் நேரடியாக காணலாம்.