IPL 2020 Final-5 வது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது மும்பை இந்தியன்ஸ்

IPL 2020 champion Mumbai Indians
PIC COURTESY: Twitter india

ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்ற ஐபிஎல் தொடர் ஒருவழியாக முடிவுக்கு வந்தது. IPL 2020 கோப்பையை ஐந்தாவது முறையாக கைப்பற்றியது ரோகித் சர்மா தலைமையிலான மும்பை இந்தியன்ஸ் . 

துபாயில் நடைபெற்ற மும்பை இந்தியன்ஸ் மற்றும் டெல்லி கேப்பிடல் அணிகளுக்கு இடையிலான IPL 2020 Final ல் மும்பை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் டெல்லி கேப்பிடல் அணியை வீழ்த்தி ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டம் வென்றது.

IPL 2020 Final mumbai vs delhi
PIC COURTESY: Twitter india

டாஸ் வென்ற டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் முதலில் பேட்டிங்கை தேர்வு செய்தார்

டெல்லியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் ஸ்ட்ரோனிக்ஸ் ஆகியோர் களமிறங்கினர்.  மும்பை அணியில் தொடக்க பந்துவீச்சாளராக நியூசிலாந்தை சேர்ந்த டிரென்ட் போல்ட் வீசிய பந்தில் சோனிக் பூஜ்ஜிய ரன்களில் பெவிலியன் திரும்பி அதிர்ச்சி அளித்தார். 

p>— IndianPremierLeague (@IPL) November 10, 2020

மறுமுனையில் ஆடிய ஷிகர் தவான் 3 பவுண்டரிகளுடன் 15 ரன்களில் ஆட்டமிழக்க அவரைத் தொடர்ந்து ஆடிய ரகானே 2 ரன்களில் வந்த வேகத்தில் நடையை கட்டினார். இதனால் டெல்லி அணி 3.3 ஓவர்கள் முடிவில் 3 விக்கெட்டுகளை இழந்து 21 ரன்களில் தடுமாறிக் கொண்டிருந்தது.

இவர்களைத் தொடர்ந்து களமிறங்கிய டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் மற்றும் விக்கெட் கீப்பர்  ரிஷப் பண்ட் அணியை சரிவில் இருந்து மீட்டனர். அதிரடியாக ஆடிய ரிஷப் பண்ட் 38 பந்துகளில் இரண்டு சிக்சர் மற்றும் 4 பவுண்டரிகளுடன் 56 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். 

Third half-century of the
PIC COURTESY: Twitter india

அதன்பின் களமிறங்கிய ஹெட்மையர் மற்றும் அக்ஷர் பட்டேல் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க அந்த அணியில் அதிகபட்சமாக கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 50 பந்துகளில் 2 சிக்ஸர் 6 பவுண்டரிகளுடன் 65 ரன்கள் எடுத்து இறுதிவரை களத்தில் நின்றார். டெல்லி அணி 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 156 ரன்கள் எடுத்தது

ipl final 2020 boult
PIC COURTESY: Twitter india

மும்பை அணியின் பந்து வீச்சில் டிரென்ட் போல்ட் அதிகபட்சமாக 3 விக்கெட்டுகளையும் கவுண்டர் நெயில் 2 விக்கெட்டுகளையும் மற்றும் ஜெயந்தா யாதவ் 1 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

IPL 2020 delhi innings
PIC COURTESY: Twitter india

157 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் தொடக்க வீரர்களாக மும்பை அணியின் கேப்டன் ரோகித் சர்மா மற்றும் விக்கெட் கீப்பர் டிகாக் களமிறங்கினர். டெல்லி அணியின் முதல் ஓவரை தமிழக வீரர் அஸ்வின் வீசினார்.

மும்பை அணி ஆரம்பம் முதலே அதிரடியாக தொடங்கியது. குயின்டன் டி காக் 12 பந்துகளில் ஒரு சிக்ஸ் 3 பவுண்டரிகளுடன் 21 ரன்கள் எடுத்து ஆட்டமிழந்தார். அதன்பின் களமிறங்கிய சூரியகுமார் யாதவ் ரோகித் சர்மாவின் தவறால் 20 ரன்களில் ரன் அவுட் ஆக, சுதாரித்துக் கொண்டு ஆடிய கேப்டன் ரோகித் சர்மாவின் அற்புதமான ஆட்டத்தால் அந்த அணி 11 ஓவர்களில் 100 ரன்களை எட்டியது. 

தொடர்ந்து ஆடிய கேப்டன் ரோகித் சர்மா 51 பந்துகளில் 4 சிக்ஸர்கள் மற்றும் 6 பவுண்டரிகளுடன் 65 எடுத்து ஆட்டமிழந்தார்

அதன்பின் களமிறங்கிய இஷன் கிஷன் அதிரடியாக விளையாட மறுமுனையில் பொல்லார்டு மற்றும் பாண்டியா ஆகியோர் சொற்ப ரன்களில் ஆட்டமிழக்க இஷன் கிஷன் 19 பந்துகளில் ஒரு சிக்சர் 2 பவுண்டரிகளுடன் 33 ரன்கள் எடுத்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றார். 

இதனால் 18.4 ஓவர்கள் முடிவில் மும்பை அணி 5 விக்கெட் இழப்பிற்கு 157 எடுத்து தொடர்ந்து ஐந்தாவது முறையாக சாம்பியன் பட்டத்தை தட்டிச் சென்றது. 

டெல்லி கேப்பிடல் அணி தரப்பில் அதிகபட்சமாக நாட்டு ஜி 2 விக்கெட்டுகளும் ஸ்ட்ரோனிக்ஸ் மற்றும் ரபாடா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டும் கைப்பற்றினர்.

A very well deserved Man of the Match award for boult
PIC COURTESY: Twitter india

இப்போட்டியில் ஆட்டநாயகனாக அற்புதமாக பந்துவீசிய மும்பை இந்தியன்ஸ் அணியின் டிரென்ட் போல்ட் தேர்வு செய்யப்பட்டார்.

Presenting the Orange Cap and Purple Cap winners of the perfect tamil

2020 IPL தொடரில் 670 ரன்கள் குவித்த பஞ்சாப் அணியின் கேப்டன் கே. எல் ராகுல் ஆரஞ்சு நிற தொப்பியும் மற்றும் அதிக விக்கெட்டுகள் வீழ்த்திய டெல்லி வேகப் பந்துவீச்சாளர் ரபாடா ஊதா நிற தொப்பியையும் கைப்பற்றினர்.

Rajasthan Royals' Jofra Archer wins the 'Most Valuable Player' award in

2020 IPL தொடரில் மிகவும் மதிப்புமிக்க வீரராக ராஜஸ்தான் ராயல்ஸ் அணியின் ஆல்ரவுண்டர் ஜோஃப்ரா ஆர்ச்சர் பெற்றார்.

Emerging Player of the devdutt padikkal
PIC COURTESY: Twitter india

2020 IPL தொடரில் வளர்ந்து வரும் வீரர் விருது பெங்களூரு ராயல் சேலஞ்சர்ஸ் அணியின் தொடக்க ஆட்டக்காரர் தேவ்தத் படிக்கல் பெற்றார்.

Fair Play Award for #Dream11IPL 2020
PIC COURTESY: Twitter india

2020 IPL தொடரில் பார் பிளே விருது மும்பை இந்தியன்ஸ் வழங்கப்பட்டது

சென்னை சூப்பர் கிங்ஸ் அணியின் கேப்டன் மகேந்திர சிங் தோனி அடுத்தபடியாக தொடர்ச்சியாக இரண்டு முறை ஐபிஎல் கோப்பையை வென்ற அணி என்ற பெருமையைப் பெற்றார் மும்பை இந்தியன்ஸ் அணியின் கேப்டன் ரோகித் சர்மா. இந்த வெற்றியின் மூலம் 5 முறை ஐபிஎல் பட்டத்தை வென்ற ஒரே கேப்டன் ஒரே அணி என்ற பெருமையை மும்பை இந்தியன்ஸ் மற்றும் ரோகித் சர்மாவிற்கு கிடைத்துள்ளது.

ஐபிஎல் கோப்பையை வென்ற மும்பை இந்தியன்ஸ் அணிக்கு பரிசு தொகையாக 20 கோடி ரூபாயும் இரண்டாம் இடம் பிடித்த டெல்லி கேப்பிடல் அணிக்கு 12.5 கோடி ரூபாய் பரிசுத் தொகையாக வழங்கப்பட்டது.