IPL 2020 முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டெல்லி கேபிட்டல்ஸ்

ஐபிஎல்லில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறிய டெல்லி கேப்பிடல்
PIC COURTESY: Twitter india

IPL முதல் முறையாக டெல்லி கேப்பிடல் ஹைதராபாத் அணியை 17 ரன்கள் வித்தியாசத்தில் வீழ்த்தி இறுதிப் போட்டியில் மும்பையை சந்திக்கிறது.  

2020ஆம் ஆண்டு ஐபிஎல் தொடர் ஐக்கிய அரபு அமீரகத்தில் நடைபெற்று வரும் நிலையில் இது தற்போது இறுதி கட்டத்தை எட்டியுள்ளது.

ipl 2020 playoff final
PIC COURTESY: Twitter india

நேற்று நடந்த  குவாலிபயர் 2 ஆட்டத்தில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் மற்றும் டெல்லி கேப்பிடல் ஆகிய அணிகள் மோதின. 

 இதில் டாஸ் வென்று முதலில் களமிறங்கிய டெல்லி அணியின் தொடக்க வீரர்களாக ஷிகர் தவான் மற்றும் ஸ்டோனிக்ஸ் இருவரும் களமிறங்கினர். 

ஆரம்பம் முதலே அதிரடியை வெளிப்படுத்திய ஷிகர் தவான் மற்றும்  ஸ்டோனிக்ஸ் அதிரடியாக ரன் குவிக்க ஆரம்பித்தனர். விளாசினார்.

 இதில் ஸ்டோனிக்ஸ் ஹோல்டர் இன் ஒரே ஓவரில் 18 ரன்களை அதிரடியாக விளாசினார்.  

 தொடர்ந்த அதிரடியை காட்டிய ஸ்டோனிக்ஸ் 27 பந்துகளில் ஒரு சிக்சர் 5 போர் உட்பட 38 ரன்களில் எடுத்து ரஷித் கான் பந்து வீச்சில் கிளீன் போல்டானார். முதல் விக்கெட்டுக்கு  ஸ்டோனிக்ஸ் மற்றும் ஷிகர் தவான் இணை 86 ரன்களை குவித்தது. மறுமுனையில் ஷிகர் தவான் அரைசதம் விளாசினார்.

அதன் பிறகு களமிறங்கிய டெல்லி கேப்பிடல் அணியின் கேப்டன் ஸ்ரேயாஸ் ஐயர் 20 பந்துகளில் 21 ரன்கள் அடித்து வெளியேற மறுமுனையில் ஷிகர் தவான் அதிரடியை காட்ட தொடங்கினார். அதன் பின் களமிறங்கிய ஹெட்மையர் அதிரடியை காட்ட அணியின் ஸ்கோர் மளமளவென உயர்ந்தது.தொடக்க வீரராக களமிறங்கிய ஷிகர் தவான் 18.3 ஓவர் முடிவில் 50 பந்துகளில்  ஒரு சிக்ஸ் மற்றும் 6 போர் உட்பட மொத்தம் 78 ரன்கள் குவித்து சந்தீப் ஷர்மா ஓவரில் எல்பிடபிள்யூ ஆகி வெளியேறினார். அதன்பின் களமிறங்கிய  பண்ட் இரண்டு ரன் மட்டுமே அடிக்க ஆனால் ஹெட்மையர் 22 பந்துகளில் 42 ரன்களை அடித்து அணியின் ஸ்கோரை உயர்த்தினார். கடைசியாக பந்துவீசிய தமிழக வீரரான நடராஜன் 20 வது ஓவரில் வெறும் 7 ரன்களை மட்டுமே கொடுத்து டெல்லி அணியின் ரன் விகிதத்தை கட்டுப்படுத்தினார். இதனால் ஆட்ட நேர முடிவில் டெல்லி கேப்பிடல் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 189 ரன்களை குவித்தது. 

ஹைதராபாத் அணி தரப்பில் ரஷீத் கான், ஹோல்டர் மற்றும் சந்தீப் சர்மா ஆகியோர் தலா ஒரு விக்கெட்டை வீழ்த்தினர். 

ipl 2020 playoff delhi
PIC COURTESY: Twitter india

190 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணியின் தொடக்க வீரராக அந்த அணியின் கேப்டன்  டேவிட் வார்னர் மற்றும் பிரியம் கார்க் களமிறங்கினர். முதல் ஓவரிலேயே தமிழக வீரர் அஸ்வின் 12 ரன்கள் கொடுக்க  இரண்டாவது ஓவர் வீசிய ரபாடா கேப்டன் டேவிட் வார்னர் விக்கெட்டை வீழ்த்தினர். மறுமுனையில் ஆடிய பிரியம் கார்க் 12 பந்துகளில் ஒரு போர் உட்பட 17 ரன்களில் ஆட்டமிழக்க அதன்பின் களமிறங்கிய  பின்பு மணிஷ் பாண்டே 21 ரன்களில் ஆட்டமிழக்க  5 ஓவர் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 3 விக்கெட் இழப்பிற்கு 44 எடுத்து தடுமாறிக் கொண்டிருந்தது. 

IPL 2020 playoff 2020
PIC COURTESY: Twitter india

அதன்பின்பு களமிறங்கிய நியூசிலாந்து அணியின் கேப்டன் கேன் வில்லியம்சன் மற்றும் வெஸ்ட் இண்டீஸ் அணியின் கேப்டன் ஹோல்டர் ஆகிய இருவரும் அணியை சரிவில் இருந்து மீட்க ஆனால் 11 வது ஓவரில் ஹோல்டர் 11 ரன்களில் ஆட்டமிழக்க மறுமுனையில் கேன் வில்லியம்சன் பொறுமையாக விளையாடினார். இவருடன் ஜோடி சேர்ந்த அப்துல் சமத் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் செல்ல 17 வது ஓவரை வீசிய ஸ்டோனிக்ஸ் கடைசி பந்தில்  கேன் வில்லியம்சன் விக்கெட்டை வீழ்த்த டெல்லி கேப்பிடல் சன் வெற்றி 50% உறுதி செய்யப்பட்டது, ஆனால் மறுமுனையில் ஆடிய அப்துல் சமத் 16 பந்துகளில் 2 சிக்ஸ் மற்றும் 2  போர் அடிக்க அவருடன் ஜோடி சேர்ந்து ஆடிய ரஷித் கான் ஒரு போர் மற்றும் ஒரு  6 விலாச ஆட்டத்தில் அனல் பறந்தது. அப்போது 19-வது ஓவரை வீசிய ரபாடா அந்த ஓவரில் 3 விக்கெட்டுகளை வீழ்த்தி அணியின் வெற்றியை உறுதி செய்தார். 20 ஓவர்களின் முடிவில் சன்ரைசர்ஸ் ஹைதராபாத் அணி 8 விக்கெட் இழப்பிற்கு 172 ரன்கள் எடுத்து தோல்வி அடைந்தது.

IPL 2020 playoff 2020
PIC COURTESY: Twitter india

டெல்லி கேப்பிடல் அணி தரப்பில் ரபாடா 4 விக்கெட்டுகளையும் ஆல்ரவுண்டர் சோனிக்  3 விக்கெட்டுகளையும் மற்றும் அக்ஷர் பட்டேல் ஒரு விக்கெட்டுகளை கைப்பற்றினர். இதில் தமிழக வீரர் அஸ்வின் 3 ஓவர்கள் வீசி 33 ரன்கள் கொடுத்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

இப்போட்டியில் வெற்றி பெற்ற டெல்லி கேப்பிடல் அணி 13 ஆண்டுகளில் முதல் முறையாக இறுதிப்போட்டிக்கு முன்னேறியது குறிப்பிடத்தக்கது. ஏற்கனவே  பிளே ஆப் முதல் சுற்றில் மும்பை இடம் தோல்வியடைந்த டெல்லி அணி முதன் முறையாக கோப்பையை வெல்லுமா அல்லது ஐந்தாவது முறையாக மும்பை அணி கோப்பையை வெல்லுமா என அனைவராலும் மிகவும் எதிர்பார்க்கப்படுகிறது.