தலை முடி உதிர்வை தடுக்க இதோ 8 வழிகள்

Hair loss treatment tamil

தலை முடி உதிர்வு

ஆண்கள் மற்றும் பெண்கள் என இருவருமே சந்திக்கும் மிகவும் பொதுவான பிரச்சனை தான் தலைமுடி உதிர்வு தலை முடி பிரச்சனைகள் ஆனது நாம் உண்ணும் உணவு வாழ்க்கை முறை மற்றும் பிற ஆரோக்கிய பிரச்சனைகள் உடன் நேரடி தொடர்புடையவை மேலும் இது ஒருவர் அதிக மன அழுத்தத்தில் இருப்பதன் அறிகுறி யாகவும் இருக்கலாம் ஆரம்பித்தபின் ஏராளமானோர் தலைமுடி உதிரும் பிரச்சனை அதிகம் சந்திக்கிறார்கள் முக்கியமாக ஒரு நாளில் இருந்து மீண்ட நோயாளிகள் பலர் தங்களுக்கு தலைமுடி அதிகமாக கொட்டுவதை எண்ணிப் பார்க்கிறார்கள் ஆகவே தமிழ் தமிழ் வீட்டு வைத்தியங்கள் சில உண்டு இந்த வைத்தியங்களை பின்பற்றினால் தலை முடி கொட்டும் பிரச்சனையில் இருந்து விடுபடலாம் சரி வாருங்கள் அந்த வைத்தியங்கள் என்னவென்று அதைப் பார்ப்போம்☺️

தேங்காய் எண்ணெய்:
தேங்காய் எண்ணெயில் உள்ள பொட்டாசியம் மற்றும் இரும்பு சத்து தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவுவதோடு தலைமுடி உதிர்வதைக் குறைக்கும் அதற்கு தேங்காய் எண்ணெயை வெதுவெதுப்பாக சூடேற்றி தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்ய வேண்டும் பின் ஒரு மணி நேரம் கழித்தோ அல்லது இரவு முழுவதும் ஊற வைத்து பின்பு தலை முடியை அலசலாம்👌.

வெங்காய சாறு:
வெங்காய சாற்றினை தலை சருமம் மற்றும் தலை முடியில் தடவினால் அதிலுள்ள வளமான அளவிலான சல்ஃபர் தலை முடியின் வளர்ச்சிக்கு உதவும் அதற்கு வெங்காய சாற்றினை தலையில் தடவி நன்கு ஒரு மணிநேரம் ஊற வைத்து பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி அலச வேண்டும் இன்னும் சிறப்பான பலன் கிடைக்க வெங்காய சாறுடன் தேன் சேர்த்துக் கொள்ளலாம்.

முட்டை:
முட்டையில் சல்பர் அயோடின் புரோட்டின் மற்றும் பாஸ்பரஸ் போன்ற அற்புதமான பொருள்கள் உள்ளன இவை தலைமுடி உதிர்வதை தடுக்க உதவும் அதற்கு ஒரு முட்டையில் பௌலில் உடைத்து ஊற்றி அத்துடன் ஆலிவ் ஆயில் சேர்த்து நன்கு கலந்து தலையில் தடவி 20 நிமிடம் ஊற வைத்து பின் மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலையை அலச வேண்டும்.

நெல்லிக்காய்:
வைட்டமின் சி மற்றும் ஆன்டி-ஆக்ஸிடன்ட் உடன் அதிகம் நிறைந்த நெல்லிக்காய் தலை முடியின் ஆரோக்கியத்திற்கும் நல்லது அதற்கு நெல்லிக்காயை தினமும் ஒன்று சாப்பிடுவது மட்டுமல்லாமல் நெல்லிக்காய் சாற்றுடன் எலுமிச்சை சாற்றினை சேர்த்து கலந்து தலையில் தடவி நன்கு காய்ந்த பின் வெதுவெதுப்பான நீரில் தலையை அலச வேண்டும்.

மருதாணி:
மருதாணியில் தலைமுடிக்கு ஊட்டமளிக்கும் சத்துகள் உள்ளது எனவே தலைமுடி ஆரோக்கியமாகவும் உதிராமலும் இருக்க வேண்டுமானால் தலைக்கு மருதாணியை பயன்படுத்துங்கள் அதற்கு மருதாணி இலைகளை நன்கு மென்மையாக அரைத்து அல்லது பவுடரை நீரில் பேஸ்ட்போல் கலந்து தலையில் தடவி நன்கு காய்ந்தபின் தலை முடியை நீரில் அலச வேண்டும்.

கற்றாழை:
கற்றாழை தலை முடி உதிர்வதைத் தடுப்பதோடு தலைமுடியின் வளர்ச்சியை ஊக்குவிக்கும் அதற்கு கற்றாழையின் ஜெல்லை எடுத்து தலை சருமம் மற்றும் முடியில் தடவி குறைந்தது 45 நிமிடம் ஊற வைத்து பின் நீரால் தலைமுடியை அலச வேண்டும் இப்படி வாரத்திற்கு 4 முறை செய்து வந்தால் நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

வெந்தய விதைகள்:
வெந்தயம் தலை முடி உதிர்வதைத் தடுப்பதோடு பாதிப்படைந்த மயிர்கால்களை சரிசெய்து தலைமுடியின் வளர்ச்சிக்கு உதவி புரியும் அதற்கு வெந்தயத்தை இரவு தூங்கும் முன் நீரில் ஊற வைத்து மறுநாள் காலையில் நன்கு அரைத்து தலையில் தடவி 30 நிமிடம் ஊற வைத்து பின் ஷாம்பு எதுவும் பயன்படுத்தாமல் தலைமுடியை அலச வேண்டும் இப்படி வாரத்திற்கு இரண்டு முறை என மாதத்திற்கு பின்பற்றி வந்தால் தலைமுடி உதிர்வது கட்டுப்படும்.

தேங்காய் பால்:
தேங்காய் பாலில் உள்ள புரோட்டீன் அத்தியவசிய கொழுப்புக்கள் தலைமுடி உதிர்வதைக் கட்டுப்படுத்த உதவும் முடி உதிர்வதை குறைக்கும் முடியின் வளர்ச்சிக்கு ஊக்குவிக்கும். அதற்கு தேங்காயை நீர் ஊற்றி அரைத்து வடிகட்டி பால் எடுத்து தலையில் தடவி சிறிது நேரம் மசாஜ் செய்து 20 அல்லது 30 நிமிடம் கழித்து மைல்டு ஷாம்பு பயன்படுத்தி தலை முடியை நீரில் அலச வேண்டும் இப்படி வாரத்திற்கு ஒருமுறை செய்து வந்தால் நல்ல பலன் கிடைக்கும்