கமல் படங்களையும் Bigg boss Tamil பார்த்தால் அந்த குடும்பம் அதோடு காலி - எடப்பாடி பழனிசாமி

கமல் படங்களையும் Bigg boss பார்த்தால் அந்த குடும்பம் அதோடு காலி - எடப்பாடி பழனிசாமி

நடிகர் கமல்ஹாசனின் படங்களையும் அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சியை பார்த்தால் ஒரு குடும்பம் கூட நல்லா இருக்காது என முதலமைச்சர் பழனிசாமி தெரிவித்துள்ளது புது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது.

இன்று அரியலூர் மாவட்டத்தில் அரசு விழாவில் பங்கேற்ற முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி  மக்கள் நீதி மைய தலைவர் மற்றும் நடிகருமான கமலஹாசன் அவர்களின் படங்களையும் அவர் தொகுத்து வழங்கும் பிக்பாஸ் நிகழ்ச்சி பற்றியும் கடுமையாக விமர்சித்துள்ளார்.

அவர் புதிதாக கட்சியில் சேர்ந்துள்ளார்.  அவர் அரசியல் பற்றி என்ன தெரியும்? Retired ஆகி வந்திருக்கிறார்.  அவருக்கு என்ன தெரியும்? 70 வயசு ஆகுது எழுபது வயசில் பிக்பாஸ் நடத்திட்டு இருக்காரு? பிக்பாஸ் நடத்துகிறவர்கள் அரசியல் செய்தால் எப்படி இருக்கும்? இந்த Bigg boss பார்த்தால் ஒரு குடும்பம் கூட நன்றாக இருக்காது. இவர் நாட்டு மக்களுக்காக நன்மை செய்பவராக இருக்க மாட்டார். நன்றாக இருக்கும் குடும்பத்தை கெடுப்பது தான் இவருடைய வேலை. Bigg Boss தொடரை பார்த்தால் குழந்தைகளும் நன்றாக இருக்கும் குடும்பமும் கெட்டுப் போய்விடும்

எத்தனையோ திட்டங்கள் இருக்கின்றன நதிகள் இணைப்பு விவசாயிகள் செய்கிற திட்டங்கள் இதனையெல்லாம் காட்டாமல் மக்களை கெடுக்கும் வேலைகளில் ஈடுபடுகிறார் என காட்டமாக பதில் அளித்துள்ளார்.

புரட்சித்தலைவர் எம்ஜிஆர் அவர்கள் படங்களில் நல்ல நல்ல பாட்டுக்கள் வந்துள்ளன, அப்படி ஏதாவது நல்ல பாட்டாவது இவருடைய படத்தில் இருக்கிறதா. ஒரு படமாவது இந்த நாட்டு மக்களுக்கு நன்மை செய்யக்கூடிய படத்தை வரை நடித்து உள்ளாரா?. அவருடைய படத்தை பார்த்தால் அத்துடன் அந்த குடும்பம் காளி என விமர்சனம் செய்துள்ளது கமல் ரசிகர்களை மட்டுமல்லாமல் தமிழ் சினிமா ரசிகர்களையும் கொந்தளிக்கச் செய்துள்ளது முதலமைச்சர் எடப்பாடி  பேசியது தற்போது சமூக வலைத்தளங்களில் பேசுபொருளாக ஆகியுள்ளது.