பொங்கல் பரிசாக ரூபாய் 2500

பொங்கல் பரிசு 2500

தமிழகத்தில் இந்த ஆண்டு பொங்கல் பரிசாக 2500 ரூபாய் வழங்கப்படும் என்று தமிழக முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் அறிவித்துள்ளார். ஆண்டுதோறும் நம் தமிழகத்தில் தை பொங்கல் திருநாளை முன்னிட்டு குடும்ப அட்டைதாரர்களுக்கு பொங்கல் பரிசு பொருட்கள் வழங்குவது வழக்கம்.

அதேபோல் வருகின்ற 2021 ஆண்டும் தைப்பொங்கல் தினத்தை முன்னிட்டு அரிசி குடும்ப அட்டைதாரர்களுக்கு ரூ2500 மற்றும் பொங்கல் பரிசுப் பொருட்களாக முழு கரும்பு,அரிசி,வெல்லம்,உலர் திராட்சை வழங்கப்படும் என்றும் இதை வருகின்ற ஜனவரி 4 முதல் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவித்துள்ளார்.

முன்னதாக பொங்கல் பண்டிகைக்கு பரிசுத் தொகையாக ஆயிரம் ரூபாய் வழங்கப்பட்டு வந்த நிலையில் தற்போது 2500 ரூபாய் வழங்கப்படுவது குறிப்பிடத்தக்கது..

இதனால் தமிழகம் முழுவதும் 2 கோடியே 6 லட்சம் அரிசி குடும்ப அட்டைதாரர்கள் பயன் பெறுவார்கள் என்று முதல்வர் திரு எடப்பாடி பழனிச்சாமி அவர்கள் தெரிவித்துள்ளார்