தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த்

ரஜினிகாந்த் தாதாசாகேப் பால்கே விருது

தாதாசாகேப் பால்கே

தமிழ் சினிமாவின் முன்னணி கதாநாயகர் சூப்பர் ஸ்டாரான நடிகர் ரஜினிகாந்த் அவர்களுக்கு கலைத் துறையின் மிக உயரிய விருதான மத்திய அரசின் தாதாசாகேப் பால்கே விருது வழங்கப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பை மத்திய அமைச்சர் பிரகாஷ் ஜவடேகர் இன்று வெளியிட்டார்

நடிகர் ரஜினிகாந்த் கலைத்துறையில் மிக முக்கியமாக பங்காற்றியுள்ளார். அவருக்கு இந்த விருது வழங்குவது மத்திய அரசு பெருமையாக கருதுகிறது. சாதாரண கண்டக்டராக இருந்த திரு ரஜினிகாந்த் ஒரு சூப்பர் ஸ்டார் என்ற அந்தஸ்தை பெற்று இந்திய சினிமாவில் சுமார் 40 ஆண்டு காலத்திற்கு மேல் கலைப் பணி ஆற்றியுள்ளார். அவரை கவுரவப்படுத்தும் இதுவே சிறந்த தருணம் என மத்திய அரசு தெரிவித்துள்ளது. மேலும் ரஜினிகாந்த் அவர்களுக்கு தாதாசாகேப் பால்கே விருது கொடுத்ததற்கும் வருகிற தமிழக சட்டமன்ற தேர்தலுக்கும் எந்த சம்பந்தமும் இல்லை என்று பாஜக தெரிவித்துள்ளது.

மேலும் தாதா சாகேப் விருது பெற்ற ரஜினிகாந்த் அவர்களுக்கு பாரத பிரதமர் திரு நரேந்திர மோடி ட்விட்டரில் தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார். அவரைத் தொடர்ந்து தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துணை முதலமைச்சர் ஓ பன்னீர்செல்வம் மற்றும் எதிர்க்கட்சித் தலைவர் திரு மு க ஸ்டாலின் மற்றும் மக்கள் நீதி மையத்தின் தலைவரும் முன்னணி நடிகருமான திரு கமலஹாசன் அவர்களும் தாதாசாகேப் பால்கே விருது பெற்றவர்கள் அவர்களுக்கு வாழ்த்து தெரிவித்துள்ளனர்.

இதனைத் தொடர்ந்து ட்விட்டரில் தாதாசாகேப் பால்கே விருது பெற்ற ரஜினிகாந்த் எனது மகிழ்ச்சியை வெளிப்படுத்தியுள்ளார். தன்னை நடிகனாக வேண்டும் என ஆசைப்பட்ட தனது நண்பரான ராவ்பகதூர் அவர்களுக்கும், மிகுந்த கஷ்டத்தில் இருக்கும்போது தனக்கு உதவி செய்த தனது அண்ணன் சத்யநாராயணா ராவ் கெய்க்வாட் அவர்களுக்கும், தன்னை சினிமாவில் அறிமுகப்படுத்திய மறைந்த இயக்குநர் திரு பாலசந்தர் அவர்களுக்கும் நன்றியை தெரிவித்துள்ளார். மேலும் தனக்கு வாழ்த்து கூறிய பத்திரிகை ஊடக நண்பர்கள் திரைத்துறையினர் அரசியல் பிரமுகர்கள் அனைவருக்கும் தனது நன்றியை தெரிவித்துள்ளார். தாதா சாகேப் பால்கே விருதை தன்னை வாழவைத்த தமிழக மக்களுக்கு சமர்ப்பிக்கிறேன் என்று பதிவிட்டுள்ளார்.