பாடல் : சின்னஞ்சிறு நிலவே
படம் : பொன்னியின் செல்வன்-2 (2023)
இசை : AR. ரஹ்மான்
பாடகர்: ஹரிசரண்
பாடல் வரிகள் : இளங்கோ கிருஷ்ணன்
சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு
ஏனடி நீங்கினையோ
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ

அர்த்தம் அழிந்ததடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கோல் யானே
யாங்குனைத் தேடுவலும் அன்னமே
ஏதினி செய்குவனோ
ஓங்கூழ் ஆனதடி அன்னமே
தீங்கிருள் சூழ்ந்ததடி
துள்ளும் நயனமெங்கே வெள்ளம்போல்
சொல்லும் மொழிகள் எங்கே
கன்னல் சிரிப்புமெங்கே என்னை சேர்
ஆரண மார்புமெங்கே
மஞ்சின் நிலங்குளிராய் நெஞ்சிலே
சேர்ந்திடும் கைகள் எங்கே
கொஞ்சும் இளம் வெய்யிலாய் என்னையே
தீண்டிடும் பார்வையெங்கே
சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு
ஏனடி நீங்கினையோ
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ

கானகம் எரியுதடி வஞ்சியே
ஞாலமும் நழுவுதடி
வானம் உடைந்ததடி அழகே
பூமியும் சரிந்ததடி
கொல்லை நெருப்பினிலே தள்ளியே
எப்படி நீந்தினியோ
எற்றடி கொற்றமுற்றே பிரிவை
சாபமாய் தந்தனையோ
சின்னஞ்சிறு நிலவே என்னைவிட்டு
ஏனடி நீங்கினையோ
ஒரு கொல்லைப் புயலடித்தால் சகியே
செஞ்சுடர் தாங்கிடுமோ
அர்த்தம் அழிந்ததடி அன்னமே
ரத்தமும் ஓய்ந்ததடி
ஒரு கொற்றமும் வீழ்ந்ததடி சகியே
யாதினி கோல் யானே