தனுஷ் நீங்கள் ஒரு மந்திரவாதி - பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய்

தனுஷை புகழ்ந்த பிரபல பாலிவுட் இயக்குனர் இவரா?

தனுஷ் நடித்த கர்ணன் திரைப்படம்

கலைப்புலி தாணு தயாரிப்பில் இயக்குனர் மாரி செல்வராஜ் இயக்கத்தில் நடிகர் தனுஷ் நடித்த கர்ணன் படம் கடந்த மாதம் ஒன்பதாம் தேதி திரையரங்கில் வெளியிடப்பட்டது. தனுஷ் நடித்த திரைப்படங்களில் முதல் நாளிலேயே அதிக வசூலைக் குவித்த திரைப்படம் என்ற பெருமையைப் பெற்றது. திரையரங்கில் வெற்றிகரமாக ஓடிய திரைப்படம் குரல் பரவல் காரணமாக தடைப்பட்டது. பிறகு இத்திரைப்படம் தற்போது அமேசான் OTT தளத்தில் கடந்த 14 ஆம் தேதி வெளியானது.

பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் தனுஷை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

இத்திரைப்படத்தைப் பார்த்த பிரபல பாலிவுட் இயக்குனர் ஆனந்த் எல் ராய் தனுஷை புகழ்ந்து தள்ளியுள்ளார்.

கர்ணன் “என்ன ஒரு கதை சொல்லாக்கம மாரி செல்வராஜ். செல்லுலாய்டில் உங்கள் எண்ணங்களை நீங்கள் வரைந்த விதம் அற்புதம். குறிப்பு எழுதி வைத்துக்கொள்ளுங்கள் தனுஷ் நீங்கள் ஒரு மந்திரவாதி. நீங்கள் ஒரு நடிகன் என்று நான் நினைத்தேன், நீங்கள் என்னிடம் சொல்லியிருக்க வேண்டும்🧡”

என்று தன்னுடைய டுவிட்டரில் பக்கத்தில் பதிவிட்டார். இவர் ஏற்கனவே தனுஷ் இந்தியில் ராஞ்சனா திரைப்படத்தின் அறிமுகப்படுத்தினார். அத்திரைப்படம் இந்தியில் மிகப்பெரிய வசூலை பெற்றது. தற்போது அக்ஷய் குமார் மற்றும் தனுஷ் ஆகிய இருவரை வைத்து ஒரு திரைப்படத்தை எடுத்து முடித்துள்ளார் அத்திரைப்படம் மிக விரைவில் திரைக்கு வர இருப்பது குறிப்பிடத்தக்கது.