பாஜக ஆதரவாளர் கிஷோர் கே சாமி வன்கொடுமை சட்டத்தின் கீழ் கைது

தலைவர்கள் குறித்து அவதூறு கிஷோர்கே சாமி_கைது

கிஷோர் கே சாமி

சமூக வலைத்தளங்களில் அண்ணா, கருணாநிதி மற்றும் முதலமைச்சர் ஸ்டாலின் உள்ளிட்ட தலைவர்கள் மீது அவதூறாக பேசிய வழக்கில் பிரபல சமூக ஊடக செயற்பாட்டாளர் மற்றும் பாஜக ஆதரவாளரான கிஷோர் கே சாமி மீது காஞ்சிபுரம் மாவட்ட திமுக தகவல் தொழில்நுட்ப நிர்வாகியை அளித்த புகாரின் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டார். இவர் மீது ஐபிசி 153, 505(1B) 505(1C) ஆகிய 3 பிரிவுகளில் வழக்கு பதிவு செய்யப்பட்டு மாதவரத்தில் உள்ள நீதிபதி வீட்டில் ஆஜர்படுத்தப்பட்ட கிஷோர் கே சாமி வரும் 28ஆம் தேதி வரை நீதிமன்ற காவலில் வைக்க நீதிபதி உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து செங்கல்பட்டில் உள்ள கிளைச் சிறையில் அடைக்கப்பட்டார்.

கிஷோர் கே சாமியின் கைதை அரசியல் பழிவாங்கும் நோக்கம் என பாஜகவை சேர்ந்த தலைவர்களான அண்ணாமலை மற்றும் காயத்ரி ரகுராம் ஆகியோர் கருத்து தெரிவித்துள்ளனர்.இவர் தொடர்ந்து பாஜகவின் ஆதரவாளராகவும் திமுகவை எதிர்த்து பல்வேறு வகையான பதிவுகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வந்துள்ளார்.

இவர் ஏற்கனவே பெண் பத்திரிக்கையாளர்களை அவதூறாக பேசிய வழக்கில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதத்தில் கைது செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கதுதற்போது கிஷோர் கே சாமியின் கைதை நெட்டிசன்கள் பலர் சமூக வலைதளங்களில் கொண்டாடி வருகின்றனர்.